Homeசெய்திகள்தமிழ்நாடு100 சார் பதிவாளர் அலுவலகங்களில் சனிக்கிழமை பணி ரத்து: அரசாணை வெளியீடு

100 சார் பதிவாளர் அலுவலகங்களில் சனிக்கிழமை பணி ரத்து: அரசாணை வெளியீடு

-

- Advertisement -

தமிழ்நாட்டில் 100 சார் பதிவாளர் அலுவலகங்களில் சனிக்கிழமைகளில் செயல்பட்டு வந்த கட்டாயப் பணியை கைவிட்டு அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.100 சார் பதிவாளர் அலுவலகங்களில் சனிக்கிழமை பணி ரத்து: அரசாணை வெளியீடு

கடந்த திமுக ஆட்சிக் காலத்தில் 100 சார் பதிவாளர் அலுவலகங்கள் சனிக்கிழமைகளிலும் செயல்படும் வகையில் அறிவிக்கப்பட்டது. இதன்படி, அந்த அலுவலகங்களில் பணியாற்றும் ஊழியர்கள் சனிக்கிழமைகளிலும் பணிபுரிந்து வந்தனர்.

we-r-hiring

இந்நிலையில், 100 சார் பதிவாளர் அலுவலகங்களில் நடைமுறையில் இருந்த சனிக்கிழமை கட்டாயப் பணியை கைவிடுவது தொடர்பாக சட்டப்பேரவையில் அமைச்சர் லோகேஷ் தமிழ்ச்செல்வன் அறிவித்திருந்தார்.

அமைச்சரின் அறிவிப்பைத் தொடர்ந்து, சனிக்கிழமை கட்டாயப் பணியை ரத்து செய்வதற்கான அரசாணை தற்போது வெளியிடப்பட்டுள்ளது.

இடைத்தேர்தல் தொகுதிகளில் தவெக பணம் கொடுப்பதாக இடதுசாரிகளே குற்றச்சாட்டு! வாக்குக்கு அதிக பணம் கொடுப்பதாக மக்கள் தெரிவிக்கின்றனர் – தமிழிசை பேட்டி

MUST READ