Homeசெய்திகள்தமிழ்நாடு"தமிழ்நாடு குழப்பமான சூழ்நிலையில் உள்ளது; முதலமைச்சரின் மௌனம் அபாயகரமானது" –  தமிழிசை சௌந்தரராஜன் காட்டம்!

“தமிழ்நாடு குழப்பமான சூழ்நிலையில் உள்ளது; முதலமைச்சரின் மௌனம் அபாயகரமானது” –  தமிழிசை சௌந்தரராஜன் காட்டம்!

-

- Advertisement -

தமிழிசை

 தமிழ்நாடு குழப்பமான சூழ்நிலையில் உள்ளதாகவும்,  தவெக அரசு மோசமான ஆட்சியை நடத்துகிறது என்பதற்குக் கள்ளக்குறிச்சி மற்றும் திருப்பரங்குன்றம் விவகாரங்களே உதாரணமாகத் திகழ்வதாகவும் பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் குற்றம் சாட்டியுள்ளார். சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தபோது அவர் இவ்வாறு கூறினார்.

கள்ளக்குறிச்சி எம்.எல்.ஏ விவகாரம் குறித்துத் தமிழிசை கூறியவை:

  • 4 மாத தாமதம் மற்றும் எப்.ஐ.ஆர் விவகாரம்: கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் ஜூலை மாதமே புகார் அளித்துள்ளார்; உயர் நீதிமன்ற நீதிபதி குரல் எழுப்பிய பிறகே நீதி கிடைக்கும் நிலை உள்ளது. எப்.ஐ.ஆர் (FIR) இணையதளத்தில் போட்டால் கசிந்துவிடும் எனக் கூறுகின்றனர்; முதலமைச்சர் மற்றும் அமைச்சர்களுக்கு எப்.ஐ.ஆர் கிடைக்கவில்லை என்கின்றனர். ஆட்சி, அதிகாரத்தில் இருப்பவர்களுக்குப் புகார் வந்தது தெரியாமல் 4 மாதங்களாக அனைவரையும் ஏமாற்றிக் கொண்டிருக்கிறார்கள்.

  • கட்சியில் இருந்து நீக்காதது ஏன்?: பெண்கள் மீது முற்றிலுமாக அக்கறையும் இல்லை, ஆட்சியில் அனுபவமும் இல்லை. சம்பந்தப்பட்ட எம்.எல்.ஏ-வை அழைத்து விசாரித்து, கட்சியில் இருந்து நீக்கியிருந்தால் முதலமைச்சர் மீது மக்களுக்கு நம்பிக்கை வந்திருக்கும். சொந்தக் கட்சியினர் எது செய்தாலும் மூடி மறைப்பேன் என்று சொன்னால், முதலமைச்சர் மீது பெண்கள் நம்பிக்கை இழந்துவிடுவார்கள்.

  • கைது கோரிக்கை மற்றும் இடைத்தேர்தல் கருத்து: கள்ளக்குறிச்சி விவகாரத்தில் ஆட்சியருக்கு நடந்தது அநீதி; அதற்கு நேரடிப் பொறுப்பு முதலமைச்சர்தான். 4 மாதங்களுக்கு முன் அளித்த புகார் மீது நடவடிக்கை எடுக்காமல் ஆட்சியர் எவ்வளவு கஷ்டப்பட்டிருப்பார்? எம்.எல்.ஏ-வாக இருக்கத் தகுதி இல்லாத அவரைக் கைது செய்து விசாரிக்க வேண்டும். ஆட்சியரைக் காப்பாற்றக் கள்ளக்குறிச்சியில் இடைத்தேர்தல் வரலாம்; தமிழ்நாடு அரசு தவறான முன்னுதாரணமாக நடந்து கொள்கிறது.

திருப்பரங்குன்றம் தீபம் மற்றும் 144 தடை உத்தரவு குறித்துத் தமிழிசை கூறியவை:

  • மறுசீராய்வு மனு மற்றும் 144 தடை: உச்ச நீதிமன்றத்தில் இடைக்கால உத்தரவு வந்த பிறகும் மறுசீராய்வு மனு தாக்கல் செய்ததால், முதலமைச்சர் மீது இந்து மக்கள் நம்பிக்கை இழந்துவிட்டனர். மறுசீராய்வு மனு போட்டால் நடக்காது என்பது சிறுபான்மை மக்களுக்கும் தெரியும்; முதலமைச்சரின் மௌனம் அபாயகரமானது. பக்தர்கள் மட்டும்தான் வரப் போகிறார்கள்; பின்னர் எதற்காக 144 தடை உத்தரவு போட்டீர்கள்? திருமாவளவன், ஜவாஹிருல்லா ஆர்ப்பாட்டம் நடத்த அனுமதித்தது ஏன்? முருக பக்தர்கள் செல்லக் கூடாதா? ஜவாஹிருல்லா ஆகம விதி குறித்து எங்களுக்குப் பாடம் எடுப்பதா? தமிழ்நாட்டில் எமர்ஜென்சியா நடக்கிறது?

  • பக்தர்கள் மீதான சித்தரிப்புக்குக் கண்டனம்: திருப்பரங்குன்றத்தில் தீபத்தூணில் விளக்கு ஏற்றுவதைப் பார்க்கச் செல்கிறேன்; கோஷம் எழுப்பக் கூடாது. முருக பக்தர்கள் மதக் கலவரத்தைத் தூண்டுபவர்கள் போல் சித்தரிப்பதை நிறுத்த வேண்டும்; முருக பக்தர்கள் மதக் கலவரத்துடன் செல்லவில்லை. தீபத்திற்கு மறுசீராய்வு மனு போடுவதற்குப் பதில், காவிரி நீர் பெற மனு செய்திருக்கலாம்.” என்று தெரிவித்தார்

    https://www.apcnewstamil.com/breaking-news/tiruppur-sp-shristi-singh-named-investigating-officer-in-kallakurichi-mla-case-ig-kamini-to-monitor-probe/252639

MUST READ