நரேஷ்குப்தா மறைவு- ஆளுநர் ஆர். என். ரவி இரங்கல்

ன்

தமிழகத்தின் முன்னாள் தலைமை தேர்தல் அதிகாரி நரேஷ் குப்தா காலமானார். அவரது மறைவுக்கு தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி இரங்கல் தெரிவித்துள்ளார்.

க்
கடந்த 2005 ம் ஆண்டு முதல் 2010 ம் ஆண்டு வரை தமிழக தலைமை தேர்தல் அதிகாரியாக பணியாற்றியவர் நரேஷ் குப்தா. அவர் மறைவுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி விடுத்துள்ள இரங்கலில், மூத்த ஐஏஎஸ் அதிகாரி நரேஷ் குப்தாவின் மறைவு வருத்தம் அளிக்கிறது.

தமிழ்நாட்டு மக்களுக்கு மிகுந்த சிரத்தையுடனும் நேர்மையுடனும் சேவையாற்றிய அவர், சிறந்த நிர்வாகியாக என்றும் நினைவு கூரப்படுவார். அவரது குடும்பத்தினருக்கும் நண்பர்களுக்கும் அனுதாபங்கள். ஓம் சாந்தி என்று குறிப்பிட்டுள்ளார் ஆளுநர் ரவி.

Advertisement