spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்சினிமாசூர்யாவின் புதிய படத்தில் இணையும் மன்சூர் அலிகான்!

சூர்யாவின் புதிய படத்தில் இணையும் மன்சூர் அலிகான்!

-

- Advertisement -

சூர்யாவின் புதிய படத்தில் நடிகர் மன்சூர் அலிகான் இணைவதாக தகவல் வெளியாகியுள்ளது.சூர்யாவின் புதிய படத்தில் இணையும் மன்சூர் அலிகான்!

நடிகர் சூர்யா தற்போது ரெட்ரோ திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். அடுத்தது இவர் வாடிவாசல், சூர்யா 47 ஆகிய படங்களை கைவசம் வைத்திருக்கிறார். இதற்கிடையில் இவர், ஆர்.ஜே. பாலாஜி இயக்கத்தில் தனது 45 வது திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்திற்கு தற்காலிகமாக சூர்யா 45 என்று தலைப்பு வைக்கப்பட்டிருக்கும் நிலையில் இந்த படத்தை ட்ரீம் வாரியார் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. சாய் அபியங்கர் இதற்கு இசையமைக்கிறார். ஜி கே விஷ்ணு இதன் ஒளிப்பதிவு பணிகளை கவனிக்கிறார். இந்த படத்தில் சூர்யா வழக்கறிஞராக நடிக்க அவருடன் இணைந்து திரிஷா, நட்டி நடராஜ், யோகி பாபு ,சுவாசிகா, ஷிவதா மற்றும் பலர் நடிக்கின்றனர். ஆர்.ஜே. பாலாஜி இதில் வில்லனாக நடிக்கிறார் என்று சொல்லப்படுகிறது.சூர்யாவின் புதிய படத்தில் இணையும் மன்சூர் அலிகான்! இந்த படத்தின் படப்பிடிப்புகள் கோயம்புத்தூர் போன்ற பகுதிகளில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. மேலும் இந்த படத்திற்கு பேட்டைக்காரன் என்று தலைப்பு வைக்கப்பட்டிருப்பதாக சொல்லப்படுகிறது. இந்நிலையில் இந்த படத்தில் நடிகர் மன்சூர் அலிகான் முக்கிய கதாபாத்திரத்தில் நடிப்பதற்கு ஒப்பந்தமாகியுள்ளார் என்று புதிய தகவல்கள் தெரிவிக்கின்றன. இனிவரும் நாட்களில் இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என நம்பப்படுகிறது.

MUST READ