“முகத்துல பரு இருக்குறதால வேதனைப்பட்டேன்”😞… சாய் பல்லவி நெகிழ்ச்சி!

நடிகை சாய் பல்லவி தற்போது தெலுங்கில் டாப் நடிகையாக வளர்ந்துள்ளார். மாஸ் ஹீரோக்களுக்கு இணையாக சாய் பல்லவிக்கு வரவேற்பு கொடுத்து வருகிறார்கள் தெலுங்கு ரசிகர்கள்.

‘கார்கி’ படத்தை அடுத்து சாய் பல்லவி தமிழில் சிவகார்த்திகேயன் உடன் புதிய படத்தில் நடிக்க இருக்கிறார். இந்நிலையில் சாய் பல்லவி தனது முகத்தின் காணப்படும் பருக்கள் குறித்து பேசியுள்ளார்.

“நான் அறிமுகமான ‘பிரேமம்’ படத்தில் இருந்து இன்று வரை மேக்கப் போட்டது இல்லை. பள்ளி படிக்கும் போது என்  முகப்பருக்களால் வேதனைப்படுவேன். இதனால் தாழ்வு மனப்பான்மை அதிகம் இருந்தது. என் குரலும் சரியாக இருக்காது. ‘பிரேமம்’ படத்தில் என்னை ரசிகர்கள் என்னை ஏற்றுக் கொள்வார்களோ என்று பயந்தேன்.

ஆனால் நான் மேக்கப் இல்லாமல் கூட அழகாக இருப்பதாகப் பாராட்டினார்கள். அதுதான் பெரிய தன்னம்பிக்கையை ஏற்படுத்தியது. அப்போதிருந்து மேக்கப் இல்லாமல் நடித்து வருகிறேன். மற்றவர்களைப் பற்றி எனக்குத் தெரியாது. அழகைக் அதிகப்படுத்த மேக்கப் உதவாது என்று நான் சொல்லவில்லை. எனக்கு இது பிடித்திருக்கிறது. உங்களுக்கு அது தன்னம்பிக்கையைத் தந்தால் நீங்களும் தொடரலாம்.” என்று பேசியுள்ளார்.

Advertisement