டெல்டாவில் நிலக்கரி சுரங்கம்- பேரவையில் கவன ஈர்ப்பு தீர்மானம்
நிலக்கரி சுரங்கம் அமைக்க அனுமதி அளிக்கக்கூடாது என திமுக சட்டமன்ற உறுப்பினர் டி.ஆர்.பி.ராஜா சட்டப்பேரவையில் சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டுவந்தார்.
அதன்பின் பேரவையில் பேசிய எம்.எல்.ஏ டி.ஆர்.பி.ராஜா, “மாநில அரசின் கவனத்துக்கு கொண்டுவராமல் ஒன்றிய அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. நெற்களத்தில் நிலக்கரியா என டெல்டா மக்கள் அதிர்ச்சியில் உள்ளனர். டெல்டா மாவட்டங்களின் வாழ்வாதாரத்தை பறிக்கும் வகையில் ஒன்றிய அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது” என்றார். அதன்பின் பேசிய செல்வப்பெருந்தகை, தமிழ்நாடு அரசை கலந்தாலோசிக்காதது ஜனநாயகத்துக்கு எதிரன செயல், முதலமைச்சர் கடிதத்திற்கு மதிப்பளித்து திட்டத்தை ஒன்றிய அரசு உடனே கைவிட வேண்டும். என்றார்.
சட்டப்பேரவையில் கவன ஈர்ப்பு தீர்மானம் மீது உரையாற்றிய பாமக சட்டமன்ற உறுப்பினர் ஜி.கே.மணி, “திட்டத்துக்கு எதிராக ஒன்ற்ய அரசுக்கு முதலமைச்சர் கடிதம் எழுதியதற்கு நன்றி. தஞ்சை தரணி தமிழ்நாட்டின் நெற்களஞ்சியம். எந்த பாதிப்பு ஏற்படாமல் இருக்கவே பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்கப்பட்டுள்ளது. காவிரி டெல்டா மாவட்டங்களில் நிலக்கரி சுரங்கம் அமைப்பதை தடுத்து நிறுத்த வேண்டும். எந்த பாதிப்பும் ஏற்படாமல் இருக்கவே பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்கப்பட்டுள்ளது.” எனக் கூறினார்.