Homeசெய்திகள்தமிழ்நாடுமருத்துவமனையிலிருந்து நேராக ஆம்புலன்ஸில் வந்து தேர்வு எழுதிய 10 ஆம் வகுப்பு மாணவர்…

மருத்துவமனையிலிருந்து நேராக ஆம்புலன்ஸில் வந்து தேர்வு எழுதிய 10 ஆம் வகுப்பு மாணவர்…

-

- Advertisement -

அவசர ஊர்தியில் வந்து 10ஆம் வகுப்பு பொது தேர்வு எழுதிய மாணவருக்கு உதவிய பள்ளிக்கல்வித்துறைக்கும் அரசு மருத்துவமனைக்கும் ஆசிரியர்கள் நன்றி தெரிவித்துள்ளாா்.மருத்துவமனையிலிருந்து நேராக ஆம்புலன்ஸில் வந்து தேர்வு எழுதிய 10 ஆம் வகுப்பு மாணவர்…

சென்னை ஈக்காட்டுத்தாங்கல் தனியார் பள்ளியில் 10 வகுப்பு பயிலும் ரிஷிகேஷ் நேவார். இவர் அசாம் மாநிலத்திலிருந்து சென்னையில் பணிபுரியும் தொழிலாளியின் மகனாவார்.  10 வகுப்பு பொது தேர்வு நடைப்பெற்று  வரும் நிலையில் உடல் நிலை பாதிப்பு (குடல்வால்வு  பிரச்சினை) அப்பெண்டிக்ஸ்   தீவிரமானதால் கிண்டிலுள்ள கலைஞர் பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அறுவை சிகிச்சை மேற்க்கொள்ளப்பட்ட நிலையில் இன்று நடைபெறும் ஆங்கில தேர்வினை எழுத மருத்துவமனை  உதவியுடன் அவசர ஊர்தியில் சென்னை அசோக் நகரிலுள்ள பொது தேர்வு மையத்திற்கு தேர்வு வந்து தேர்வு எழுதினார். பள்ளிக்கல்வித்துறையிடம் முன் அனுமதி பெற்று அம்மாணவருக்காக தனி அறை மற்றும் எழுத்தர் ஏற்பாடு செய்யப்படுள்ளது குறிப்பிடத்தக்கது….

we-r-hiring

நன்றாக படிக்கக்கூடிய மாணவர் உடல்நலக்குறைவு காரணமாக கிண்டி கலைஞர் நூற்றாண்டு பன்னோக்கு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அறுவைசிகிச்சை செய்யப்பட்ட நிலையில் பள்ளிக்கல்வித்துறை அனுமதியுடன் தனி எழுத்தர் மூலம் பெறப்பட்டு  தேர்வு எழுதுகிறார் இதற்கு உதவிய பள்ளிக்கல்வித்துறை மற்றும் கலைஞர் நூற்றாண்டு பன்னோக்கு மருத்துவமனைக்கு நன்றி..

மணாலி: அடல் சுரங்கப்பாதையில் கடும் பனிப்பொழிவு!! போக்குவரத்து பாதிப்பு!!

MUST READ