Homeசெய்திகள்தமிழ்நாடுசெவிலியர்களின் மறுபணியமர்வு அரசாணைக்கு எதிராக நூதனப் போராட்டம்: நாமக்கல் உள்ளிட்ட 7 மாவட்டங்களில் கோரிக்கை அட்டை...

செவிலியர்களின் மறுபணியமர்வு அரசாணைக்கு எதிராக நூதனப் போராட்டம்: நாமக்கல் உள்ளிட்ட 7 மாவட்டங்களில் கோரிக்கை அட்டை அணிந்து பணி!

-

- Advertisement -

புதிய மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் இருந்து செவிலியர்களைப் பிற மாவட்டங்களுக்கு மறுபணியமர்வு செய்யும் அரசாணையை உடனடியாக ரத்து செய்ய வலியுறுத்தி, செவிலியர்கள் நூதனப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

செவிலியர்

we-r-hiring

நாமக்கல், கிருஷ்ணகிரி, நீலகிரி, அரியலூர், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, திருப்பூர் ஆகிய 7 அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளிலிருந்து மொத்தம் 210 செவிலியர்களை சென்னை அரசு ஸ்டான்லி மருத்துவமனை, சேலம், திருச்சி மற்றும் செங்கல்பட்டு ஆகிய மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளுக்கு மறுபணியமர்வு செய்து மருத்துவத்துறை அண்மையில் அரசாணை வெளியிட்டது.

செவிலியர்களின் குற்றச்சாட்டுகளும் எதிர்ப்பும்:

கடுமையான பணிச்சுமை: ஏற்கனவே உள்ள காலிப்பணியிடங்களை நிரப்பாமல், மறுபணியமர்வு செய்வது தங்களுக்குக் கடுமையான பணிச்சுமையை ஏற்படுத்தும் என்று செவிலியர்கள் கவலைத் தெரிவித்துள்ளனர்.

புதிய பணியிட உருவாக்கம் தேவை: புதிதாக செவிலியர் பணியிடங்களை உருவாக்காமல், இருக்கும் பணியாளர்களை இடமாற்றம் செய்வதை ஏற்றுக்கொள்ள முடியாது எனத் தமிழக சுகாதாரத்துறைக்கு எதிராக அவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

பொதுமக்களுக்குப் பாதிப்பு ஏற்படாத வகையில் போராட்டம்:

மருத்துவமனைக்கு வரும் நோயாளிகளுக்கும் பொதுமக்களுக்கும் வழங்கப்படும் மருத்துவச் சேவை எந்தவிதத்திலும் பாதிக்கப்பட்டுவிடக் கூடாது என்பதைக் கருத்திற்கொண்டு, செவிலியர்கள் தங்களது பணிகளைப் புறக்கணிக்காமல் கோரிக்கை அட்டை (Badge) அணிந்தபடியே நூதன முறையில் பணியில் ஈடுபட்டு தங்களது எதிர்ப்பைப் பதிவு செய்து வருகின்றனர்.

“ஈரானின் அடுத்த கட்ட இலக்கு என்ன? டொனால்ட் டிரம்பின் ரகசிய உச்சிமாநாடும் மத்திய கிழக்கு போர் அபாயமும்!”: மூத்த பத்திரிகையாளர் சோபியான் அலசல்!

MUST READ