த.வெ.க நகைப்புமிசா விவகாரம் மற்றும் த.வெ.க தலைவரின் கருத்துகளுக்கு எதிராக திமுக நடத்தப் போவதாக அறிவித்த போராட்டங்களை சுட்டிக்காட்டி தமிழக வெற்றிக் கழகம் (த.வெ.க) கடுமையாகக் விமர்சித்துள்ளது.
போராட்டம் என்ற பெயரில் யாருமே இல்லாத டீக்கடையில் யாருக்கு டீ ஆற்றி திமுகவினர் கதறிக்கொண்டிருக்கிறார்கள்? என்று கிண்டலாகக் கேள்வியெழுப்பியுள்ள த.வெ.க, இந்த ஆர்ப்பாட்டங்கள் அனைத்தும் மக்களின் கவனத்தை ஈர்க்க முடியாத வெறும் அரசியல் நாடகம் என்று சாடியுள்ளது.

பொய்ப் போராளியின் போலி பிம்பம் உடைந்துவிட்டது
திமுகவின் தற்போதைய பதற்றத்திற்குக் காரணம் குறித்து விமர்சித்த த.வெ.க, “பொய்ப் போராளியின் போலி பிம்பம் உடைந்துவிட்டதே என்ற அச்சத்திலும் பதற்றத்திலும்தான் திமுகவினர் இப்படி வீதிகளில் நின்று கத்துகிறார்கள்” என்று கூறியுள்ளது.
மேலும், மேடைகளில் எத்துனை கூச்சலிட்டாலும், நாடகங்களை அரங்கேற்றினாலும், “திமுகவின் பொய்யான பரப்புரைகளை இனி தமிழக மக்கள் ஏமாந்து நம்பப்போவதில்லை என்பதே நிதர்சனம்” என்றும் தெளிவுபடுத்தியுள்ளது.
ஆபாச நதியும் வன்ம நதியும் ஓடவிட்ட திமுகதிமுகவின் போராட்ட பாணியைக் கடுமையாகச் சாடிய த.வெ.க, “இன்றைய போராட்ட நாடகம் என்ற பெயரில், திமுக மீண்டும் தன்னுடைய வழக்கமான ஆபாச நதியையும் வன்ம நதியையும் வஞ்சனையே இல்லாமல் வீதிகளில் ஓடவிட்டிருக்கிறது” என்று குற்றம்சாட்டியுள்ளது.
நாகரிகமற்ற வார்த்தைப் பிரயோகங்களும், அவதூறுகளுமே திமுகவின் அடையாளமாக மாறியிருப்பதாகத் தெரிவித்தது. DETENTION COPY கேட்டால் கதை கட்டும் திமுக மிசா கைது தொடர்பான வரலாற்று ஆதாரங்கள் குறித்து கேள்வி எழுப்பிய த.வெ.க, “மிசா கைதிக்கான அதிகாரப்பூர்வ ‘DETENTION COPY’ (தடுப்புக் காவல் ஆணை நகல்) எங்கே என்று கேட்டால், திமுகவினர் மீண்டும் மீண்டும் கற்பனைக் கதைகளையே கட்டவிழ்த்துவிடுகிறார்கள்” என்று விமர்சித்துள்ளது.
உண்மையான ஆதாரங்களைக் காண்பிக்க முடியாமல் கதைகளைச் சொல்லி மக்களை மடைமாற்ற முயற்சிப்பதாக த.வெ.க தனது அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளது
