Homeசெய்திகள்தமிழ்நாடுபுதுக்கோட்டை லிங்கம் மலையில் கிரிவலம் செல்லலாம்.. ஆனால் இதை மட்டும் செய்யக்கூடாது - ஐகோர்ட் கிளை...

புதுக்கோட்டை லிங்கம் மலையில் கிரிவலம் செல்லலாம்.. ஆனால் இதை மட்டும் செய்யக்கூடாது – ஐகோர்ட் கிளை அதிரடி!

-

- Advertisement -

Madurai Bench Grants Permission for Girivalam at Lingam Hill in Pudukkottai

புதுக்கோட்டை மாவட்டம் மலம்பட்டியில் உள்ள லிங்கம் மலையில் பக்தர்கள் பாரம்பரிய முறைப்படி கிரிவலம் செல்ல அனுமதி வழங்கி சென்னை உயர் நீதிமன்ற மதுரை அமர்வு உத்தரவிட்டுள்ளது. அதேசமயம், மலையின் ஒரு பகுதியில் அமைந்துள்ள சிலுவை அருகே தீபம் ஏற்றக் கூடாது எனவும் மனுதாரர்களுக்கு நீதிபதிகள் அறிவுறுத்தியுள்ளனர்.

வழக்கின் பின்னணி: புதுக்கோட்டை மாவட்டம் மலம்பட்டியைச் சேர்ந்த சுப்பிரமணியன் என்பவர் உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் பொதுநல மனு ஒன்றைத் தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில் அவர் கூறியிருப்பதாவது:

  • மலம்பட்டி கிராமத்தில் அமைந்துள்ள லிங்கம் மலையில் பழமையான சிவன் மற்றும் விஷ்ணு கோயில்கள் உள்ளன. சில ஆண்டுகளுக்கு முன்பு அம்புரோஸ் என்பவர் அனுமதியின்றி லிங்கமலையின் தெற்குப் பகுதியில் சிலுவை ஒன்றை அமைத்தார்.

  • இதற்குப் பக்தர்கள் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், அமைதிப் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு, அந்தக் கட்டமைப்பை இயற்கையாகவே சிதைவடைய அனுமதிப்பது என முடிவு செய்யப்பட்டது.
    உயர்நீதிமன்ற மதுரைக்கிளை

  • ஆனால், கடந்த ஆகஸ்ட் மாதம் விஷ்ணு கோயிலுக்குச் செல்லும் பாதையைப் பயன்படுத்தத் தடுத்ததால் பதற்றம் ஏற்பட்டது. விராலிமலை வட்டாட்சியர் தலைமையில் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் இடையூறு செய்ய மாட்டோம் என உறுதியளிக்கப்பட்ட போதிலும், சிவன் கோயிலுக்குச் செல்லவும், லிங்கம் மலையைச் சுற்றி கிரிவலம் மேற்கொள்ளவும் பாரம்பரியமாகப் பயன்படுத்தப்பட்ட பாதைகளுக்கு மீண்டும் தடை ஏற்படுத்தப்பட்டது.

  • மேலும், அப்பகுதியில் உள்ள அரசு புறம்போக்கு நிலங்களை ஆக்கிரமிக்கும் செயல்களும் நடைபெற்று வருகின்றன. எனவே, பாரம்பரியமாக மேற்கொள்ளப்படும் கிரிவலத்திற்கு இடையூறு செய்யத் தடை விதிக்க வேண்டும் மற்றும் ஆக்கிரமிப்புகளை அகற்ற உத்தரவிட வேண்டும் எனக் கோரியிருந்தார்.

நீதிமன்றத்தின் உத்தரவு:

இந்த மனு நீதிபதிகள் ஜி.ஆர். சுவாமிநாதன் மற்றும் திருமகள் சந்திரசேகர் ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், பக்தர்கள் லிங்கம் மலையில் கிரிவலம் செல்ல அனுமதி வழங்கி உத்தரவிட்டனர். அதேசமயம், அமைதியைப் பேணும் வகையில் மனுதாரர்கள் தரப்பினர் மலையின் ஒரு பகுதியில் உள்ள சிலுவை அருகில் தீபம் ஏற்றக் கூடாது என அறிவுறுத்தி, வழக்கின் விசாரணையை ஒத்திவைத்தனர்.

https://www.apcnewstamil.com/news/district-news-tamil/shocking-medical-negligence-in-tirunelveli-doctors-operate-on-wrong-leg-of-14-year-old-accident-victim/252174

MUST READ