Homeசெய்திகள்தமிழ்நாடுடாஸ்மாக் முறைகேடு புகார்: முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி முன்ஜாமீன் மனு தாக்கல்!

டாஸ்மாக் முறைகேடு புகார்: முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி முன்ஜாமீன் மனு தாக்கல்!

-

- Advertisement -

டாஸ்மாக் மதுபான கொள்முதல் மற்றும் டெண்டர் முறைகேடுகளில் ஈடுபட்டதாகக் கூறப்படும் புகாரின் பேரில், லஞ்ச ஒழிப்புத் துறை பதிவு செய்துள்ள வழக்கில் முன்ஜாமீன் கோரி திமுக முன்னாள் அமைச்சர் வி. செந்தில்பாலாஜி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வரவுள்ளது.

டாஸ்மாக்

we-r-hiring

வழக்கின் பின்னணி:

டாஸ்மாக் மதுபான கொள்முதல் மற்றும் டெண்டர் விவகாரத்தில் முறைகேடுகள் நடந்துள்ளதாக எழுந்த புகாரைத் தொடர்ந்து, முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜி, டாஸ்மாக் முன்னாள் மேலாண்மை இயக்குநர் விசாகன் உள்ளிட்டோர் மீது லஞ்ச ஒழிப்புத் துறை நேற்று முன்தினம் அதிகாரப்பூர்வமாக வழக்குப்பதிவு செய்தது.

இதனைத் தொடர்ந்து, கைது நடவடிக்கையிலிருந்து தற்காலிகப் பாதுகாப்புப் பெறும் நோக்கில் செந்தில்பாலாஜி தரப்பில் உடனடியாக முன்ஜாமீன் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

உயர் நீதிமன்றத்தில் விசாரணை:

சென்னை உயர் நீதிமன்றத்தில் நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் (MP/MLA) மீதான வழக்குகளை விசாரித்து வரும் சிறப்பு நீதிபதி ஜி.கே.இளந்திரையன் அமர்வில், இந்த முன்ஜாமீன் மனு இன்று மூன்றாவது வழக்காகப் பட்டியலிடப்பட்டுள்ளது. இந்த வழக்கு மீதான விசாரணையின் முடிவில் நீதிமன்றம் என்ன உத்தரவு பிறப்பிக்கப் போகிறது என்ற எதிர்பார்ப்பு அரசியல் வட்டாரத்தில் எழுந்துள்ளது.

செந்தில் பாலாஜியை குறிவைக்கும் விஜய் அரசு: பின்னணியில் இருப்பது என்ன? – சிறப்பு அலசல்!

MUST READ