Homeசெய்திகள்தமிழ்நாடு“நடிகர் விஜய் சேதுபதியின் கருத்துரிமையைப் பாதுகாக்கச் சட்ட ரீதியாகத் துணை நிற்போம்!” – அதிமுக எம்.பி....

“நடிகர் விஜய் சேதுபதியின் கருத்துரிமையைப் பாதுகாக்கச் சட்ட ரீதியாகத் துணை நிற்போம்!” – அதிமுக எம்.பி. இன்பதுரை அதிரடி ஆதரவு!

-

- Advertisement -

தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் அரசியல் குறித்து கருத்து தெரிவித்த நடிகர் விஜய் சேதுபதிக்கு எதிராக, தமிழக வெற்றிக் கழகத்தினர் (தவெக) மற்றும் விஜய் ரசிகர்கள் சமூக வலைதளங்களில் கடுமையான தாக்குதல்களையும் விமர்சனங்களையும் முன்வைத்து வருகின்றனர். இந்த நிலையில், நடிகர் விஜய் சேதுபதியின் கருத்துரிமைக்கு ஆதரவாகச் சட்ட ரீதியாகத் துணை நிற்போம் என்று அதிமுகவைச் சேர்ந்த வழக்கறிஞரும் நாடாளுமன்ற உறுப்பினருமான இன்பதுரை அறிவித்துள்ளது தமிழக அரசியல் மற்றும் திரைக்களத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.“நடிகர் விஜய் சேதுபதியின் கருத்துரிமையைப் பாதுகாக்கச் சட்ட ரீதியாகத் துணை நிற்போம்!” – அதிமுக எம்.பி. இன்பதுரை அதிரடி ஆதரவு!

விஜய் சேதுபதியின் கருத்துப் பேச்சும் கிளம்பிய சர்ச்சையும்

தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டு பேசிய பிரபல நடிகர் விஜய் சேதுபதி, “மக்களிடம் பெரிய பெரிய வாக்குறுதிகளைக் கொடுத்துவிட்டு, பிரச்சனை அல்லது நெருக்கடிகள் வரும்போது எதிரணி மீது பழியைத் தூக்கிப்போட்டுவிட்டு ஓடுவது ஒரு வடிகட்டிய ஏமாற்று வேலை” என்று பேசினார்.  நேரடியாக எந்தக் கட்சியின் பெயரையும் குறிப்பிடாமல் அவர் பொதுப்படையாகப் பேசினாலும், இந்த விமர்சனம் தமிழக வெற்றிக் கழகத்தையும் (தவெக) அதன் தலைவரையுமே மறைமுகமாகச் சாடுவதாகக் கூறி, தவெக ஆதரவாளர்களும் நடிகர் விஜய்யின் ரசிகர்களும் கொதித்தெழுந்தனர். இதன் தொடர்ச்சியாக, சமூக வலைதளங்களில் விஜய் சேதுபதிக்கு எதிராகக் கடுமையான விமர்சனப் பதிவுகளையும் தாக்குதல்களையும் தவெகவினர் முன்னெடுத்து வருகின்றனர்.

we-r-hiring

சட்ட ரீதியான பாதுகாப்பு: அதிமுகவின் வெளிப்படை ஆதரவு

நடிகர் விஜய் சேதுபதி மீது நடத்தப்படும் இந்தச் சமூக வலைதளத் தாக்குதல்களுக்குக் கண்டனம் தெரிவித்து அதிமுக நாடாளுமன்ற உறுப்பினர் இன்பதுரை எக்ஸ் (ட்விட்டர்) தளத்தில் பதிவு ஒன்ற வெளியிட்டுள்ளார். அந்தப் பதிவில், “ஜனநாயக நாட்டில் தனது கருத்துகளை சுதந்திரமாக வெளிப்படுத்த ஒவ்வொரு குடிமகனுக்கும் உரிமை உள்ளது. அந்த வகையில் நடிகர் விஜய் சேதுபதி தெரிவித்த கருத்துக்காக அவர் மீது முன்னெடுக்கப்படும் தனிநபர் தாக்குதல்களும் மிரட்டல்களும் கருத்துரிமைக்கு எதிரானது. நடிகர் விஜய் சேதுபதியின் கருத்துரிமையைப் பாதுகாக்கவும், அவருக்கு எதிராக ஏதேனும் அச்சுறுத்தல்கள் எழுந்தால் அதைச் சட்ட ரீதியாக எதிர்கொள்ளவும் அதிமுக வழக்கறிஞர் பிரிவு அவருக்கு முழுமையாகத் துணை நிற்கும்” என்று திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.

அரசியல் களத்தில் புதிய புயல்

நடிகர் விஜய்யின் தவெக கட்சிக்கும் அதிமுகவிற்கும் இடையே ஏற்கனவே அரசியல் ரீதியான மோதல்கள் நிலவி வரும் சூழலில், விஜய் சேதுபதிக்கு ஆதரவாக அதிமுகவின் மூத்த நிர்வாகியும் எம்.பி.யுமான இன்பதுரை குரல் கொடுத்துள்ளது அரசியல் களத்தில் புதிய விவாதத்தைக் கிளப்பியுள்ளது. திரைத்துறையைச் சேர்ந்த ஒருவரின் கருத்து சுதந்திரத்திற்கு ஆதரவாக அதிமுக களமிறங்கியுள்ளது, தவெக ஆதரவாளர்களின் போக்கிற்கு எதிராகவும் கருத்து சுதந்திரத்தின் பக்கமும் நிற்கவே என்ற கருத்து அரசியல் விமர்சகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.

“தவெகாவின் தவறுக்கு மக்கள் பாடம் புகட்டுவார்கள்”: இடைத்தேர்தல் முடிவை மாற்றும் நாம் தமிழர் கட்சி – பத்திரிகையாளர் செக்வேரா ஜெயசங்கர் கணிப்பு!

MUST READ