‘பாட்ஷா’க்கு அப்புறம் இந்தப் படத்துல தான் ரஜினி இப்படி நடிக்கப் போறாரு😲!?

ரஜினிகாந்த் தற்போது நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் ஜெயிலர் படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தில் மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லால், கன்னட சூப்பர் ஸ்டார் புனித் ராஜ்குமார் மற்றும் சஞ்சய் தத் ஆகியோரும் நடித்து வருகின்றனர்.

இந்நிலையில் இந்தப் படத்தை அடுத்து ரஜினிகாந்த் ஜெய் பீம் படத்தின் இயக்குனர் ஞானவேல் இயக்கத்தில் புதிய படத்தில் நடிக்கிறார். இந்தப் படத்தை லைக்கா நிறுவனம் தயாரிக்கின்றனர். படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு சில வாரங்களுக்கு முன்பு வெளியானது.

இந்நிலையில் தற்போது இந்தப் படம் குறித்த சில சுவாரசியத் தகவல்கள் கிடைத்துள்ளன. இந்தப் படத்தில் ரஜினி ஒரு முஸ்லிம் போலீஸ் அதிகாரியாக நடிப்பதாக கூறப்படுகிறது. மேலும் இந்தப் படம் உண்மை சம்பவங்களை அடிப்படையாக வைத்து உருவாக இருக்கிறதாம்.

ரஜினிகாந்த் திரையில் மிகவும் அரிதாகவே முஸ்லிம் கதாபாத்திரங்களில் காணப்பட்டார். 1995 ஆம் ஆண்டு வெளியான பாட்ஷா படத்தில் தான் அவர் கடைசியாக முஸ்லிம் கதாபாத்திரத்தில் காணப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது

Advertisement