spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்அரசியல்அண்ணாமலை சொல்வதையெல்லாம் ஏற்றுக்கொள்ள தேவையில்லை- ஜெயக்குமார்

அண்ணாமலை சொல்வதையெல்லாம் ஏற்றுக்கொள்ள தேவையில்லை- ஜெயக்குமார்

-

- Advertisement -

அண்ணாமலை சொல்வதையெல்லாம் ஏற்றுக்கொள்ள தேவையில்லை- ஜெயக்குமார்

அதிமுக, பாஜக கூட்டணியை மோடியும், அமித்ஷாவும் உறுதி செய்துவிட்டதாக அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ஜெயக்குமார், “அதிமுக, பாஜக கூட்டணியை மோடியும், அமித்ஷாவும் உறுதி செய்துவிட்டனர். மாநில தலைவர் சொல்வதை எல்லாம் ஏற்றுக்கொள்ள தேவையில்லை. சமூகநீதி பற்றி பேச அதிமுகவுக்கு மட்டுமே உரிமை உள்ளது. சமூக நீதியை நிலைநாட்டியது அதிமுகவும், முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவும்தான். சமூகநீதி மாநாட்டில் ஊர், பெயர் தெரியாதவர்கள் மட்டுமே கலந்துகொண்டனர். இட ஒதுக்கீட்டு பிரச்சனைக்கு தீர்வு கண்டது அதிமுகதான். சமூக நீதியை காலால் மிதித்துவிட்டு, விடியா திமுக சமூக நிதி மாநாட்டை நடத்துகிறது.

தாலிக்கு தங்கம் திட்டத்தை நிறுத்திவிட்டனர். மடிக்கணினி வழங்கும் திட்டத்துக்கு அறிவிப்போ, நிதியோ அறிவிக்கப்படவில்லை. இருசக்கர வாகனத்துக்கான மானியம் வழங்கப்படவில்லை. ஒரு கோடியே 46 லட்சம் பேர் அதிமுகவில் உள்ளனர்” எனக் கூறினார்.

MUST READ