தொண்டர்கள் விரும்பும் கட்சியுடன் கூட்டணி அமைக்கப்படும் என தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா தெரிவித்துள்ளாா்.
தேமுதிக, இரு கட்சிகளிடம் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக கூறப்படுவதில் உண்மை இல்லை என பிரேமலதா தெரிவித்துள்ளாா். கோயம்பேட்டில், தேமுதிகவின் 26 ஆம் ஆண்டு கொடி நாளை முன்னிட்டு கட்சி கொடியை ஏற்றி வைத்தார் அவர், செய்தியார்களை சந்தித்தாா். அப்போது பெசிய தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தொண்டர்கள் விரும்பும் அணியில் தேமுதிக இடம் பெறும் என்று தெரிவித்தாா்.
அதுகுறித்து உரிய நேரத்தில் அறிவிப்பு வெளியிடப்படும் என திட்டவட்டமாக கூறியுள்ளாா். தேமுதிகவிடம் பேச்சவார்த்தை நடத்தவில்லை என அமைச்சர் எ.வ.வேலு, நயினார் நாகேந்திரன் கூறியதை சுட்டிக்காட்டினாா்.
மீண்டும் அமித்ஷா தமிழகம் வருகை! என்டிஏவில் தேமுதிக? ராஜ கம்பீரன் நேர்காணல்!



