Homeசெய்திகள்அரசியல்அதிமுகவில் அடுத்த அதிரடி: எடப்பாடிக்கு எதிராக எஸ்பி வேலுமணி போர்க்கொடி? தவெக-வில் இணைய அழுத்தம்!

அதிமுகவில் அடுத்த அதிரடி: எடப்பாடிக்கு எதிராக எஸ்பி வேலுமணி போர்க்கொடி? தவெக-வில் இணைய அழுத்தம்!

-

- Advertisement -

அதிமுகவில் அடுத்த அதிரடி: எடப்பாடிக்கு எதிராக எஸ்பி வேலுமணி போர்க்கொடி! தவெக-வில் இணைய ஆதரவாளர்கள் அழுத்தம்? வீடியோ கசிந்ததால் பரபரப்பு!

எஸ்பி வேலுமணி

we-r-hiring

​தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகளுக்குப் பின் அதிமுகவில் ஏற்பட்டுள்ள உட்கட்சிப் பூசல் தற்போது உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது. முன்னாள் அமைச்சர்கள் சி.விஜயபாஸ்கர், எம்.ஆர்.விஜயபாஸ்கர் ஆகியோர் தங்களது எம்.எல்.ஏ பதவிகளை ராஜினாமா செய்துள்ள சூழலில், கொங்கு மண்டலத்தின் முக்கியத் தலைவரான முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணியும் எடப்பாடி பழனிசாமிக்கு (இபிஎஸ்) எதிராகப் பகிரங்கமாகப் போர்க்கொடி தூக்கியுள்ளார்.

கோவை தொண்டாமுத்தூர் பகுதியில் கடந்த ஞாயிற்றுக்கிழமை எஸ்.பி.வேலுமணி தனது ஆதரவாளர்களுடன் நடத்திய அவசர ஆலோசனைக் கூட்டத்தின் வீடியோ காட்சிகள் தற்போது வெளியாகி, தமிழக அரசியலில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

இக்கூட்டத்தில் வெளியான முக்கியத் தகவல்கள் இதோ:
​”என்னை நம்பி வந்தவர்களைக் கைவிட மாட்டேன்” – எஸ்.பி.வேலுமணி ஆவேசம்..
​கசிந்துள்ள வீடியோவில் எடப்பாடி பழனிசாமியின் தலைமைக்கு எதிராக எஸ்.பி.வேலுமணி பேசியதாவது:
​”நான் பதவியை வேண்டாம் என்று ஒருபோதும் கூறவில்லை. ஆனால், என்னை நம்பி வந்தவர்களை நடுரோட்டில் விட்டுவிட்டு, எனக்கு மட்டும் பதவி வாங்க நான் தயாராக இல்லை.”

“என்னுடன் 30 மாவட்ட செயலாளர்கள் அணிவகுத்து நிற்கிறார்கள். அவர்களுக்கு எந்தப் பதவியும் வழங்காமல், எனக்கு மட்டும் ‘துணைப் பொதுச்செயலாளர்’ பதவி கொடுத்தால் அதை நான் எப்படி ஏற்றுக்கொள்ள முடியும்?”
​”வீரமணி, தங்கமணி, சி.விஜயபாஸ்கர், சி.வி.சண்முகம் ஆகியோர் எல்லாம் மாவட்டச் செயலாளர்களில் ஜாம்பவான்கள். சொந்தப் பணத்தைச் செலவு செய்து கட்சியை வளர்த்தவர்கள். அவர்களுக்கெல்லாம் தகுதியான பதவி தராமல் புறக்கணித்த போதும், அவர்கள் என் பின்னால் உறுதியாக நிற்கிறார்கள்” என்று வேலுமணி பேசியுள்ளார்.

“உங்கள் தயவில்தான் எடப்பாடி முதலமைச்சரானார்” – கொதித்த தொண்டர்கள்
​ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்ற எஸ்பி வேலுமணியின் ஆதரவாளர்கள் மற்றும் தொண்டர்கள் பேசிய கருத்துகளும் இணையத்தில் வெளியாகிப் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன:
​”தொண்டர்களை மதித்துப் பதவி கொடுத்தவர் நீங்கள் மட்டும்தான். உங்களது தயவிலும் ஆதரவிலும்தான் எடப்பாடி பழனிசாமி தமிழகத்தின் முதலமைச்சராக அமர்ந்தார் என்பதை யாரும் மறுக்க முடியாது.”

“உங்களுக்கு மதிப்பு இல்லாத இடத்தில் எங்களைப் போன்ற தொண்டர்களுக்கும் வேலை இல்லை. நீங்கள் எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்தால், நாங்களும் எங்கள் கட்சிப் பதவிகளைத் தூக்கி எறியத் தயார். எங்களுக்குக் கட்சியோ, பதவியோ முக்கியமல்ல, அண்ணன் வேலுமணி மட்டும்தான் முக்கியம்.”

“அதிமுகவிற்குச் சாவுமணி அடிக்கும் வரை எடப்பாடி பழனிசாமி ஓயமாட்டார் போலிருக்கிறது. கட்சியின் பணத்தைச் சுருட்டி, தனது மகன் மூலமாகத் திமுகவுடன் ரகசிய ஒப்பந்தம் போட்டு, கட்சியை முடிக்க நினைக்கிறார் இபிஎஸ். அவரை இனி நம்பிப் பலனில்லை. திமுகவை தற்போது களத்தில் யார் வலிமையாக எதிர்க்கிறார்களோ (தவெக), அவர்களுடன் நாம் கைகோர்த்துச் செல்ல வேண்டும்” என்று ஆதரவாளர்கள் அழுத்தமாகக் கூறியுள்ளனர்.

தவெக-விற்குச் செல்கிறாரா வேலுமணி?
​அண்மையில் நடைபெற்ற சட்டமன்ற நம்பிக்கை வாக்கெடுப்பின் போது, தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) அரசுக்கு ஆதரவாக எஸ்.பி.வேலுமணி ஆதரவு எம்.எல்.ஏ-க்கள் வாக்களித்தது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், அடுத்தடுத்து மூத்த தலைவர்கள் விலகி வருவதாலும், எஸ்பி வேலுமணியின் ஆதரவாளர்கள் தவெக-விற்குச் செல்ல விருப்பம் தெரிவிப்பதாலும், கொங்கு மண்டலத்தில் அதிமுக மிகக் கடுமையான சரிவைச் சந்திக்கும் சூழல் உருவாகியுள்ளது. எஸ்பி வேலுமணியின் அடுத்த கட்ட நகர்வு என்னவாக இருக்கும் என்பதே தற்போதைய ஒட்டுமொத்த தமிழக அரசியலின் எதிர்பார்ப்பாக உள்ளது.

MUST READ