அதிமுகவில் அமைச்சர்களாக இருந்தவர்கள் இன்று தமிழக வெற்றிக் கழகத்தில் (தவெக) கூஜா தூக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளதாக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கடுமையாக விமர்சித்துள்ளார்.


சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், அதிமுகவிலிருந்து விலகி தவெகவில் இணைந்த முன்னாள் அமைச்சர்கள் மற்றும் நிர்வாகிகளைச் சாடிப் பேசிய முக்கிய அம்சங்கள்:
விமர்சனத்தின் முக்கிய புள்ளிகள்:
ராஜா முதல் கூஜா வரை: அதிமுகவில் இருந்தபோது ரோஜா மாலை, செங்கோலுடன் ராஜாவாக அழகு பார்க்கப்பட்ட தலைவர்கள், தவெகவில் போர் கருவிகளைத் துடைத்துச் சுத்தப்படுத்தும் அலங்காரப் பதவிகளைப் பெற்றுப் பரிதாபமாக நிற்கிறார்கள். நன்றியை மறந்த அவர்களுக்கு விஜய் நெல்லை அல்வா கொடுத்துள்ளார்.
பதவி முடக்கம்: விராலிமலை சி.விஜயபாஸ்கர் போன்றவர்கள் அதிமுகவில் மாநில அளவிலான முகமாக இருந்தனர். ஆனால், தவெகவில் ‘மாவட்ட அமைப்புச் செயலாளர்’ என்ற பதவியை வழங்கி, தொகுதி எல்லையைத் தாண்ட முடியாதபடி அவர்களை முடக்கியுள்ளனர்.
தன்மானம் இழப்பு: ‘உள்ளதும் போச்சுடா நொள்ளைக் கண்ணா’ கதை போல, எடப்பாடியாருக்குத் துரோகம் செய்தவர்கள் இன்று தன்மானத்தை இழந்து தவிக்கிறார்கள்.
அரசு மற்றும் நீதித்துறை விவகாரம்:
லஞ்ச ஒழிப்புத்துறை தொடர்பான வழக்கில் உயர்நீதிமன்ற மதுரை கிளை தெரிவித்த காட்டமான கருத்துகளைச் சுட்டிக்காட்டி அரசைச் சாடினார்.
காவிரி விவகாரத்தில் அனைத்துக் கட்சிக் கூட்டம் குறித்த தவெகவின் கருத்துகளுக்கும் தனது எதிர்ப்பைப் பதிவு செய்தார்.
இருக்கின்ற இடத்தில்தான் மரியாதை கிடைக்கும் என்பதை தவெகவின் சமீபத்திய அறிவிப்புகள் உணர்த்துவதாக அவர் மேலும் தெரிவித்தார்.
அந்தியூர் வனப்பகுதியில் சிறுத்தை சாவு: பாகங்களை எரித்த 2 வன ஊழியர்கள் ‘சஸ்பெண்ட்’!
