Homeசெய்திகள்அரசியல்இடைத்தேர்தலில் தனித்துப் போட்டி - தமிழகத்தில் மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி கலைந்துவிட்டது: நாகையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்...

இடைத்தேர்தலில் தனித்துப் போட்டி – தமிழகத்தில் மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி கலைந்துவிட்டது: நாகையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் பேட்டி!

-

- Advertisement -

தமிழகத்தில் திமுக கூட்டணியில் இருந்து விலகி, வரவிருக்கும் இடைத்தேர்தல்களில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தனித்துப் போட்டியிடும் என்று அக்காட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினரும், மாநிலச் செயலாளருமான கே.பாலகிருஷ்ணன் நாகை செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.இடைத்தேர்தலில் தனித்துப் போட்டி - தமிழகத்தில் மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி கலைந்துவிட்டது: நாகையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் பேட்டி!

கூட்டணி குறித்த அறிவிப்பு
நாகையில் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய கே.பாலகிருஷ்ணன் பல்வேறு அரசியல் நிலவரங்கள் குறித்துப் பேசினார்:

we-r-hiring

கூட்டணி முறிவு:
ஏற்கனவே அறிவித்தபடி தமிழகத்தில் ‘மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி’ முழுமையாகக் கலைந்துவிட்டது. தமிழக வெற்றிக் கழகம் ஆட்சியமைப்பதற்கு மட்டுமே நாங்கள் ஆதரவு தெரிவித்தோம். மறைமுகமாகப் பாஜக ஆட்சிக்கு வருவதைத் தடுக்கும் வகையில்தான் இந்த ஆதரவு தொடரும்.

இடைத்தேர்தல் நிலைப்பாடு:
வரவிருக்கும் மதுராந்தகம் மற்றும் தாராபுரம் தொகுதி இடைத்தேர்தல்களில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தனித்துப் போட்டியிடுகிறது. பாஜக, அதிமுக, திமுக ஆகிய கட்சிகளோடு செல்ல முடியாது.

தமிழ்நாட்டு மக்களுக்கு மாற்று அரசியல் கொள்கைகளை எடுத்துச் சொல்லவே இந்தத் தனித்துப் போட்டி. பொதுத்தேர்தல் வரும்போது எங்களது நிலைப்பாடு குறித்து அறிவிப்போம்.

தவெக அரசின் செயல்பாடு: தமிழக வெற்றிக் கழக அரசின் நல்ல திட்டங்களை ஆதரிப்போம்; மக்கள் விரோதச் செயல்களாக இருந்தால் கடுமையாக எதிர்ப்போம். ஊழலைப் பற்றிப் பேசும் தவெக ஆட்சியில் ஊழலே இல்லை என்று உறுதியாகச் சொல்ல முடியுமா? திமுக, அதிமுகவை நிராகரித்த மக்களுக்கு எது நல்லது என்று சிந்தித்து இடதுசாரிகளான எங்களை மக்கள் ஆதரிப்பார்கள்.

விவசாயிகள் மற்றும் தொழிலாளர்கள் கோரிக்கை
நிவாரணம் தேவை: செப்டம்பர் மாதம் முடியும் நிலையிலும், இதுவரை குருவை பாதிப்பு குறித்த கணக்கெடுப்பு நடத்தப்படவில்லை. சம்பா சாகுபடிக்குத் தண்ணீர் வருமா என்பதும் உறுதியில்லை. பல கிராமங்களில் நூறு நாள் வேலைத் திட்டமும் இல்லாததால், விவசாயிகளும் தொழிலாளரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

தமிழக அரசு உடனடியாக நிவாரணம் வழங்க வேண்டும்; இல்லையெனில் கிராமங்களில் பட்டினிச் சாவு ஏற்படும் நிலை உருவாகும்.

கடன் தள்ளுபடி: கூட்டுறவு சங்கக் கடன்களை ஏற்கனவே அறிவித்தபடி தள்ளுபடி செய்தால் மட்டுமே விவசாயிகள் சம்பா சாகுபடியைத் தொடர முடியும்.

ஜெம் வீரமணி விவகாரம் மற்றும் தேர்தல் ஆணையம் மீது குற்றச்சாட்டு
ஜெம் வீரமணி விவகாரம்: ஜெம் வீரமணி மீதான பாலியல் கொடுமை விவகாரம் தமிழகத்தில் பதற்றமான சூழலை உருவாக்கியுள்ளது. இவ்வளவு பெரிய தொழிலதிபர் செய்த குற்றத்தை காவல்துறைக்கு ஆரம்பத்திலேயே தெரியாதா? 6 ஆண்டுகளாகக் கண்டுபிடிக்க முடியவில்லை என்பதில் வலுவான அரசியல் தலையீடும், உயரதிகாரிகளின் தொடர்பும் உள்ளது. குற்றத்தில் சம்பந்தப்பட்ட அனைவரும் கைது செய்யப்பட வேண்டும்.

தேர்தல் ஆணையம் விமர்சனம்:
இந்தியத் தலைமைத் தேர்தல் ஆணையர் பாஜகவின் அதிகாரப்பூர்வ நிர்வாகி போலச் செயல்படுகிறார்.

வாக்காளர் சரிபார்ப்புப் பணிகள் என்ற பெயரில் பலருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

மேற்கு வங்கத்தில் 68 லட்சம் வாக்காளர்கள் தங்கள் வாக்குகளை இழந்துள்ளனர். பாஜகவுக்கு வேண்டாதவர்களின் பெயர்களை வாக்காளர் பட்டியலிலிருந்து நீக்கவே இத்தகைய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன என்றார்.

போலி நம்பர் பிளேட் வாகனத்தில் பயணம் செய்த விசிக தலைவர் திருமாவளவன்: எதிர்க்கட்சிகளின் கடும் விமர்சனமும், அதற்குப் பின்னால் உள்ள அரசியல் காழ்ப்புணர்ச்சியும்!

 

MUST READ