Homeசெய்திகள்அரசியல்தாராபுரத்தில் தவெக வேட்பாளர் சத்தியபாமாவுக்கு தொடரும் எதிர்ப்பு: பிரச்சாரத்தின் நடுவே பாதியில் திரும்பிய அவலம்!

தாராபுரத்தில் தவெக வேட்பாளர் சத்தியபாமாவுக்கு தொடரும் எதிர்ப்பு: பிரச்சாரத்தின் நடுவே பாதியில் திரும்பிய அவலம்!

-

- Advertisement -

தாராபுரம் தொகுதியில் இடைத்தேர்தலில் போட்டியிடும் தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) வேட்பாளர் சத்தியபாமாவுக்கு கிராம மக்களிடம் கடுமையான எதிர்ப்பு கிளம்பியுள்ளது. தொடர் வாக்குவாதங்கள் மற்றும் சரமாரி கேள்விகளால் அவர் தனது பிரச்சாரத்தை பாதியிலேயே ரத்து செய்துவிட்டுத் திரும்பிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பெரிய குமாரபாளையத்தில் எதிர்ப்பு
தாராபுரம் தொகுதியில் போட்டியிடும் தவெக வேட்பாளர் சத்தியபாமா, தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார். இதன் ஒரு பகுதியாக, காலையில் பெரிய குமாரபாளையம் கிராமத்திற்குப் பிரச்சாரத்திற்குச் சென்றார்.

we-r-hiring

அப்போது அங்கு திரண்டிருந்த பொதுமக்கள், அவர் மீது பல்வேறு கேள்விகளை எழுப்பித் தங்களது எதிர்ப்பைப் பதிவு செய்தனர். இதனால் அங்கு சிறிது நேரம் கூச்சல் குழப்பம் நிலவியது.

நல்லிபாளையம் கிராமத்தில் கிராம மக்கள் முற்றுகை
பெரிய குமாரபாளையத்தைத் தொடர்ந்து, நல்லிபாளையம் கிராமத்திற்கு வாக்கு சேகரிக்கச் சென்ற சத்தியபாமாவுக்கு அங்கும் கடும் எதிர்ப்புத் தெரிவிக்கப்பட்டது. கிராம மக்கள் அவரை வழிமறித்துச் சரமாரியாகக் கேள்வி எழுப்பினர்.

பொதுமக்கள் எழுப்பிய முக்கியக் குற்றச்சாட்டுகள் மற்றும் கேள்விகள்:

பணம் பெற்றதாகக் குற்றச்சாட்டு: கோடிக்கணக்கில் பணம் வாங்கிக் கொண்டுதான் பதவியை ராஜினாமா செய்ததாகக் கூறி பொதுமக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

ஜெயலலிதா பெயருக்கு எதிர்ப்பு: பிரச்சாரத்தின் போது மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் பெயரைச் சொல்லி வாக்கு சேகரிக்கவும் கிராம மக்கள் கடும் எதிர்ப்புத் தெரிவித்தனர்.

பாதியில் நின்ற பிரச்சாரம்
இதற்கிடையே, வாக்குவாதத்தில் ஈடுபட்ட நபரை அங்கிருந்து காவல்துறையினர் வலுக்கட்டாயமாக அப்புறப்படுத்த முயன்றனர். இதனால் பொதுமக்களுக்கும் போலீசாருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

தொடர்ந்து அதிகரித்த எதிர்ப்பு மற்றும் மக்களின் தொடர் கேள்விகளால் கலக்கமடைந்த தவெக வேட்பாளர் சத்தியபாமா, நல்லிபாளையம் கிராமத்திலும் தனது பிரச்சாரத்தைத் தொடர முடியாமல் பாதியிலேயே வாகனத்தில் ஏறித் திரும்பினார்.

இடைத்தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், தவெக வேட்பாளருக்கு கிராம மக்கள் மத்தியில் எதிர்ப்பு எழுந்து வருவது அரசியல் வட்டட்டத்தில் பெரும் பேசபொருளாக மாறியுள்ளது.

இடைத்தேர்தலில் தனித்துப் போட்டி – தமிழகத்தில் மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி கலைந்துவிட்டது: நாகையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் பேட்டி!

MUST READ