Homeசெய்திகள்அரசியல்"கோடி கோடியாய் கொட்டிய பணம்.. கேட்ட அமைச்சர் பதவி!" த.வெ.க அரசின் குதிரை பேரம் குறித்து...

“கோடி கோடியாய் கொட்டிய பணம்.. கேட்ட அமைச்சர் பதவி!” த.வெ.க அரசின் குதிரை பேரம் குறித்து ஐ.யூ.எம்.எல் எம்.எல்.ஏ பகீர் குற்றச்சாட்டு!

-

- Advertisement -

தமிழ்நாட்டில் ஆட்சியமைக்க பெரும்பான்மையை நிரூபிப்பதற்காக த.வெ.க தரப்பில் கோடி கோடியாகப் பணமும், முக்கிய அமைச்சர் பதவிகளும் பேரம் பேசப்பட்டதாக இந்திய யூனியன் முஸ்லிம் லீக் (ஐ.யூ.எம்.எல்) எம்.எல்.ஏ சையத் பாரூக் பாஷா பகிரங்கமாகக் குற்றம் சாட்டியுள்ளது தமிழக அரசியலில் பெரும் பூகம்பத்தை ஏற்படுத்தியுள்ளது."கோடி கோடியாய் கொட்டிய பணம்.. கேட்ட அமைச்சர் பதவி!" த.வெ.க அரசின் குதிரை பேரம் குறித்து ஐ.யூ.எம்.எல் எம்.எல்.ஏ பகீர் குற்றச்சாட்டு!

திராவிடக் கட்சிகளுக்கு மாற்று.. ஆட்சியமைப்பதில் இழுபறி
தமிழ்நாட்டில் நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் அரை நூற்றாண்டு கால திமுக, அதிமுக ஆதிக்கத்திற்கு முற்றுப்புள்ளி வைத்து, மக்கள் புதிதாகத் தொடங்கப்பட்ட த.வெ.க கட்சியைத் தேர்ந்தெடுத்தனர். எனினும், தனிப்பெரும்பான்மை கிடைக்காததால் ஆட்சியமைப்பதில் பெரும் இழுபறி நீடித்தது. பின்னர் காங்கிரஸ், சிபிஐ, சிபிஎம், விசிக மற்றும் ஐ.யூ.எம்.எல் ஆகிய கட்சிகள் ஆதரவு அளித்ததையடுத்து த.வெ.க அரசு அமைந்தது.

we-r-hiring

சட்டமன்றத்தில் பிளவு.. வெடித்த குதிரை பேரக் குற்றச்சாட்டு!
சட்டமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபிக்கும் சூழல் வந்தபோது, பிரதான எதிர்க்கட்சியான அதிமுகவில் ஏற்பட்ட உட்கட்சிப் பூசல் ஆளுங்கட்சிக்குச் சாதகமாக அமைந்தது. எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக சி.வி. சண்முகம் தலைமையில் அதிருப்தி எம்.எல்.ஏ-க்கள் த.வெ.க அரசுக்கு ஆதரவாக வாக்களித்தனர். அதேபோல, அமமுகவின் ஒரே எம்.எல்.ஏ-வான மன்னார்குடி காமராஜ், கட்சியின் பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரனின் ஒப்புதல் இன்றி ஆதரவளித்தார். இந்தத் திடீர் கட்சித் தாவல்கள் காரணமாக, த.வெ.க தரப்பு பல நூறு கோடி ரூபாய் மதிப்பில் குதிரை பேரத்தில் ஈடுபட்டதாக திமுக, அதிமுக மற்றும் அமமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் தொடர்ந்து கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்து வந்தன.

"கோடி கோடியாய் கொட்டிய பணம்.. கேட்ட அமைச்சர் பதவி!" த.வெ.க அரசின் குதிரை பேரம் குறித்து ஐ.யூ.எம்.எல் எம்.எல்.ஏ பகீர் குற்றச்சாட்டு!

“பணத்தோடு வந்து பேரம் பேசினார்கள்” – ஐ.யூ.எம்.எல் எம்.எல்.ஏ பகீர்! எதிர்க்கட்சிகளின் இந்தக் குற்றச்சாட்டுகளுக்கு வலு சேர்க்கும் வகையில், ஆளுங்கட்சிக் கூட்டணியில் உள்ள ஐ.யூ.எம்.எல் எம்.எல்.ஏ சையத் பாரூக் பாஷா தற்போது ஒரு பகீர் தகவலை வெளியிட்டுள்ளார். திருவண்ணாமலையில் நடைபெற்ற கட்சி நிகழ்வு ஒன்றில் பேசிய அவர், தங்களை விலைக்கு வாங்க நடந்த முயற்சிகளை மேடையில் போட்டு உடைத்தார்.

“சட்டமன்றத் தேர்தல் முடிந்த பிறகு என்னையும் ஷாஜகானையும் தேடி வந்து கோடி கோடியாகப் பணத்தைக் கொட்டினார்கள். எங்களிடம் அமைச்சர் பதவி தருகிறோம், உடனே ஆதரவு கடிதத்தில் கையெழுத்துப் போடுங்கள் என்று வற்புறுத்தினார்கள். அதற்கான லெட்டர் பேடை தயார் செய்து பணத்தோடு வந்து எங்கள் முன் பேரம் பேசினார்கள்,” எனத் தெரிவித்தார்.

"கோடி கோடியாய் கொட்டிய பணம்.. கேட்ட அமைச்சர் பதவி!" த.வெ.க அரசின் குதிரை பேரம் குறித்து ஐ.யூ.எம்.எல் எம்.எல்.ஏ பகீர் குற்றச்சாட்டு!

“உள்ளாட்சியா? போக்குவரத்தா? கொள்கையை விற்க மாட்டோம்!”
தொடர்ந்து ஆவேசமாகப் பேசிய பாரூக் பாஷா, “உள்ளாட்சித் துறை வேண்டுமா? அல்லது போக்குவரத்துத் துறை வேண்டுமா? எந்த அமைச்சர் பதவி என்றாலும் தருகிறோம் என்றார்கள். ஆனால், நாங்கள் கோடிக்குச் சாய்கிறவர்கள் அல்ல; கொள்கையைச் சார்ந்தவர்கள். எங்கள் இயக்கம் இந்திய முஸ்லிம் கொள்கையுடன் மட்டுமே பயணிக்கும் என்று கூறி அவர்களைத் திருப்பி அனுப்பிவிட்டோம். எங்களுக்குப் பதவியைக் கொடுக்கக் கூடியவன் அல்லா மட்டுமே. உங்களின் அமைச்சர் பதவிக்காக எங்களுடைய கொள்கையை ஒருபோதும் விட்டுக்கொடுக்கத் தயாராக இல்லை என்று முகத்திலடித்தாற்போல் கூறிவிட்டோம்” எனத் திட்டவட்டமாகத் தெரிவித்தார்.

ஆளுங்கட்சிக்கு ஆதரவளித்த கூட்டணியில் உள்ள ஓர் சட்டமன்ற உறுப்பினரே, தங்களுக்கு அமைச்சர் பதவியும் கோடிக்கணக்கான பணமும் பேரம் பேசப்பட்டதாகப் பொதுமேடையில் போட்டு உடைத்திருப்பது பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. இந்த விவகாரம் ஆளுங்கட்சியின் நம்பகத்தன்மை மீது மிகப்பெரிய கேள்வியை எழுப்பியுள்ள நிலையில், எதிர்க்கட்சிகள் இந்தக் குற்றச்சாட்டைக் கையில் எடுத்துத் தீவிர அரசியலில் இறங்கியுள்ளன.

“கூட்டணி விரிசலும் அரசியல் நெருக்குதல்களும்!” – தவெகவின் அடுத்தகட்ட நகர்வுகள் குறித்துச் மூத்த பத்திரிகையாளர் தி. செந்தில் காரசார அலசல்!

MUST READ