Homeசெய்திகள்அரசியல்மின்வாரிய டிரான்ஸ்பார்மர் கொள்முதல் ஊழல் புகார்: முழு உண்மையை அரசு வெளியிட வேல்முருகன் கோரிக்கை!

மின்வாரிய டிரான்ஸ்பார்மர் கொள்முதல் ஊழல் புகார்: முழு உண்மையை அரசு வெளியிட வேல்முருகன் கோரிக்கை!

-

- Advertisement -

தமிழக மின்வாரியத்தில் மின்மாற்றி (டிரான்ஸ்பார்மர்) கொள்முதலில் ரூ.397 கோடி அளவுக்கு முறைகேடு நடந்துள்ளதாக எழுந்துள்ள குற்றச்சாட்டின் முழு உண்மையை தமிழக அரசு மக்களுக்கு வெளிப்படுத்த வேண்டும் என்று தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் தி.வேல்முருகன் வலியுறுத்தியுள்ளார்.

we-r-hiring

வேல்முருகன் வெளியிட்ட அறிக்கையின் முக்கிய அம்சங்கள்:

  • மக்களின் சுமை: தமிழகத்தின் ஒவ்வொரு குடும்பமும் மின்கட்டண சுமையைச் சுமந்துகொண்டிருக்கும் வேளையில், மின்வாரியத்தில் ரூ.397 கோடி முறைகேடு புகார்கள் எழுந்துள்ளது மக்களைப் பேரதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது.

  • அரசுக்குக் கேள்வி: இந்த விவகாரத்தில் சிபிஐ விசாரணை நடைபெற்று வரும் நிலையில், மக்களின் பணம் யாருடைய லாபத்திற்காகப் பயன்படுத்தப்பட்டது என்ற கேள்விக்கு தமிழக அரசு தெளிவான பதிலளிக்க வேண்டும்.

  • உரிய நடவடிக்கை: குற்றச்சாட்டு உண்மை என நிரூபிக்கப்பட்டால், இதில் சம்பந்தப்பட்டவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். மேலும், அரசுக்கு ஏற்பட்ட நிதி இழப்பும் முழுமையாக மீட்கப்பட வேண்டும்.

எனவே, இந்த முறைகேடு புகாரின் முழு உண்மையையும் தமிழக அரசே வெளிப்படையாக மக்களுக்குத் தெரிவிக்க வேண்டும் என தி.வேல்முருகன் வலியுறுத்தியுள்ளார்.

ஐசியூவில் கிடக்கும் தமிழக பாஜக: கட்சியை காப்பாற்ற நடிகர் சரத்குமாருக்கு தலைவர் பதவி?

MUST READ