Homeசெய்திகள்அரசியல்"பாசிச அரசியலைத் தொடங்க ஆழம் பார்க்கிறதா தவெக அரசு?" - திமுக எம்.பி கனிமொழி கடும்...

“பாசிச அரசியலைத் தொடங்க ஆழம் பார்க்கிறதா தவெக அரசு?” – திமுக எம்.பி கனிமொழி கடும் விமர்சனம்!

-

- Advertisement -

“முதலில் தனது பாசிச அரசியலைத் தொடங்க ஆழம் பார்த்துவிட்டு, எதிர்ப்பு வந்ததும் அதிகாரிகள் மீது பழியைப் போட்டு பின்வாங்குகிறதா தவெக அரசு?” என திமுக எம்.பி கனிமொழி விமர்சித்துள்ளார். இது குறித்து அவர் தனது எக்ஸ் தளப் பதிவில் கூறியிருப்பதாவது:

we-r-hiring

கனிமொழி எம்.பி எக்ஸ் பதிவு

“மாணவர்கள் ஜனநாயக ரீதியில் போராடுவதற்கு தடை விதிக்கும் வகையில் கல்லூரிக் கல்வி ஆணையர் வெளியிட்ட சுற்றறிக்கையை, கடும் எதிர்ப்புகளுக்குப் பிறகு தவெக அரசு திரும்பப் பெற்றுள்ளது.

இதேபோல், நேற்று குஜிலியம்பாறை வட்டாட்சியரின் சர்ச்சைக்குரிய அறிக்கையும் வெளியாகி திரும்பப் பெறப்பட்டுள்ளது.

அதிகாரிகள் மீது பழியா?

அரசின் உத்தரவின்றி அதிகாரிகள் இத்தகைய நடவடிக்கைகளை மேற்கொள்கிறார்களா? அல்லது முதலில் தனது பாசிச அரசியலைத் தொடங்க ஆழம் பார்த்துவிட்டு, எதிர்ப்பு வந்ததும் அதிகாரிகள் மீது பழியைப் போட்டு பின்வாங்குகிறதா இந்த அரசு?

ஜனநாயக உரிமைகளைப் பறிக்க முயற்சிப்பதும், எதிர்ப்பு எழுந்ததும் பின்வாங்குவதும் தவெக அரசில் தொடர்கதையாகிவிட்டது” என்று அவர் தெரிவித்துள்ளார்.

“தலைநகர் என்பதால் மட்டும் பாதுகாப்பானதாகி விடாது”: தவெக அரசை சாடும் வேல்முருகன்!

MUST READ