
தமிழக அரசியலில் தற்போது தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) தலைவர் மற்றும் முதலமைச்சரின் டெல்லி விசிட் பேசுபொருளாக மாறியுள்ளது.
டெல்லியில் சோனியா, ராகுலை சந்தித்த முதல்வர் விஜய், அதேநேரத்தில் தனது கட்சியின் அடுத்தகட்ட தலைவர்கள் ஆதவ் அர்ஜூன், புஸ்ஸி ஆனந்த மற்றும் ராஜ்மோகன் போன்றவர்களை பாஜக அமைச்சர்களை சந்திக்க வைத்தது போன்ற நகர்வுகள் அரசியல் களத்தில் விவாதிக்கப்பட்டு வருகிறது.
டெல்லி விசிட்டும்… ராகுலின் நேரடி அழைப்பும்!
தென்னிந்தியாவில் காங்கிரஸ் அல்லாத ஒரே முதலமைச்சராகத் தவெக தலைவர் கலந்துகொள்ளும் சோனியா காந்தியின் புத்தக வெளியீட்டு விழாவுக்கு, சோனியா காந்தியின் ஒப்புதலோடு ராகுல் காந்தியே நேரடியாக அழைப்பு விடுத்துள்ளார் என்று கூறப்படுகிறது. ஆரம்பத்தில் மிகவும் ரகசியமாகத் திட்டமிடப்பட்ட இந்த நிகழ்வு, தமிழக அரசியல் சூழல் மற்றும் ஆட்சி ஸ்திரத்தன்மை குறித்த விவாதங்களுக்குப் பிறகு தீவிரம் பெற்றுள்ளது.
எம்எல்ஏக்கள் சந்திப்பு முதல் இடதுசாரி தலைவர்களுடன் ரகசிய ஆலோசனை வரை!
மாநிலத்தில் நம்பிக்கை இல்லாத் தீர்மானம் அல்லது அரசியல் நெருக்கடிகள் வரக்கூடும் என்ற யூகங்களுக்கு மத்தியில், தவெக தலைமை சட்டமன்ற உறுப்பினர்களைத் தனித்தனியாக அழைத்து ஆறுதல் கூறி பரிசளித்தது உள்ளது . மறுபுறம் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா டெல்லிக்கு நேரில் சென்று சிபிஎம் தலைவர் எம்.ஏ.பேபி மற்றும் சிபிஐ தலைவர் டி.ராஜா ஆகியோரைச் சந்தித்துப் பேசியதும் தவெகவின் தற்காப்பு வியூகத்தையே காட்டுகிறது.
பாஜகவின் மௌனமும், காங்கிரஸின் தவிப்பும்!
தமிழகத்தில் மற்ற கட்சிகள் மீது கடுமையான விமர்சனங்களை முன்வைக்கும் பாஜக மற்றும் ஆர்எஸ்எஸ் அமைப்புகள், தவெக விவகாரத்தில் காட்டும் மௌனம் பலத்த சந்தேகங்களை எழுப்பியுள்ளது. அதேசமயம், தாங்கள் மதச்சார்பற்ற மற்றும் சமூக நல்லிணக்க சக்திகளுடன் தான் இருக்கிறோம் என்பதை நிரூபிக்கவே தவெக இந்த டெல்லி பயணத்தை ஒரு அஸ்திரமாகப் பயன்படுத்தியுள்ளதாகவும் அரசியல் வட்டாரங்கள் விவாதிக்கின்றன.
‘இந்தியா 2.0’ கூட்டணிக்கு அஸ்திவாரம் போடும் விஜய்! டெல்லி அரசியலை அதிரவைக்கும் அதிரடி மூவ்!
