Homeசெய்திகள்அரசியல்"70 வருட சீரழிவை விஜய்யால் சரிசெய்ய முடியாது; இக்கட்டான நிலையில் அண்ணாமலை உதவுவார்": உடைத்துப் பேசும்...

“70 வருட சீரழிவை விஜய்யால் சரிசெய்ய முடியாது; இக்கட்டான நிலையில் அண்ணாமலை உதவுவார்”: உடைத்துப் பேசும் ‘வீ தி லீடர்ஸ்’ ஆதரவாளர் லெஸ்லி !

-

- Advertisement -

தமிழ்நாட்டில் கடந்த 70 வருடங்களாக நடைபெற்றுள்ள அரசியல் சீரழிவுகளை முதலமைச்சர் விஜய்யால் மட்டும் சரிசெய்ய முடியாது என்றும், அதற்கான விரிவான அரசியல் அறிவாற்றல் அண்ணாமலையிடம் மட்டுமே உள்ளது என்றும் ‘வீ தி லீடர்ஸ்’ (We The Leaders) அமைப்பின் ஆதரவாளர் லெஸ்லி தெரிவித்துள்ளார்."70 வருட சீரழிவை விஜய்யால் சரிசெய்ய முடியாது; இக்கட்டான நிலையில் அண்ணாமலை உதவுவார்": உடைத்துப் பேசும் 'வீ தி லீடர்ஸ்' ஆதரவாளர் லெஸ்லி !

வீ தி லீடர்ஸ்அமைப்பின் தனித்துவமான செயல்பாடு
“நான் பாஜகவில் இருந்தபோதே அண்ணாமலையின் ஆதரவாளராகத்தான் இருந்தேன். அவர் அக்கட்சியை விட்டு விலகியபோது நானும் விலகி, தற்போது ‘வீ தி லீடர்ஸ்’ அமைப்பில் இணைந்துள்ளேன். அண்ணாமலை தனது அரசியல் பாதையில் மிகவும் தெளிவாக உள்ளார். இதற்காக மாதந்தோறும் ஒவ்வொரு திட்டத்தை வகுத்துள்ளார். அடுத்தபடியாக, பெண்களுக்கு அதிகாரம் அளித்தல் (Women Empowerment) என்ற திட்டத்தை முன்னெடுக்கிறார். இது வழக்கமான அரசியல் பரபரப்பை ஏற்படுத்தாவிட்டாலும், அரசாங்கத்தோடு இணையாமல் ஒரு தனிச் சமூகமாக மக்களுக்கு என்ன செய்ய முடியும் என்பதை வெளி உலகிற்குக் காட்டும் முயற்சியாகும்.”

we-r-hiring

அண்ணாமலையின் தீர்க்கதரிசனம்
“மூன்று ஆண்டுகளுக்கு முன்னரே, தமிழ்நாட்டில் இனி கூட்டணி ஆட்சிதான் நடக்கும் என்று அண்ணாமலை மிகத் தெளிவாகக் கூறினார். இது வெறுமனே சொல்லப்பட்ட ஆரூடம் கிடையாது; தற்போதைய சூழலை ஆராய்ந்து தனது அரசியல் அறிவால் அவர் கணித்த ‘விஷன்’ (Vision). சில தொண்டர்கள் அவசரப்பட்டாலும், அண்ணாமலை தனது இலக்கில் நிதானமாகப் பயணிக்கிறார்.”

"70 வருட சீரழிவை விஜய்யால் சரிசெய்ய முடியாது; இக்கட்டான நிலையில் அண்ணாமலை உதவுவார்": உடைத்துப் பேசும் 'வீ தி லீடர்ஸ்' ஆதரவாளர் லெஸ்லி !

விஜய்க்கு எதிரான சதி மற்றும் நெருக்கடிகள்
“விஜய் கட்சி ஆரம்பித்து இரண்டரை வருடங்களில் முதலமைச்சராகப் பொறுப்பேற்றுள்ளார். ஆனால், இன்று அவருக்குப் பின்னால் மிகப் பெரிய கத்தி தொங்கிக் கொண்டிருக்கிறது. அவருக்கு வாக்களித்த மக்கள் மட்டுமே அவருக்கு ஆதரவாக உள்ளனர். மற்றபடி அதிகார வர்க்கத்தினர் (Bureaucrats), கூட்டணிக் கட்சிகள் என அனைவரும் அவருக்கு எதிராகவே செயல்படுகின்றனர். திமுகவினரால் தங்கள் குடும்பத்தைத் தாண்டி ஒரு சிறிய பையன் வந்து தமிழ்நாட்டை ஆளுவதைப் பொறுத்துக்கொள்ள முடியவில்லை. சட்டசபையில் உள்ள 13 பெண் அமைச்சர்களைக் கூட அவர்களால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. இதனால், விஜய்யை பிரதமர் வேட்பாளராக முன்னிறுத்துவது போல ஒரு சதித் திட்டம் தீட்டி, அவரை தமிழ்நாட்டை விட்டு அப்புறப்படுத்த பிரதான கட்சிகளான திமுக, காங்கிரஸ், பாஜக ஆகியவை முயல்கின்றன. இந்த அரசியலை விஜய் புரிந்துகொள்ள வேண்டும்.”

70 வருட சீரழிவும், தொழில்நுட்பத்தின் தேவையும்
“இன்றைய காலகட்டத்தில் உள்ள 70 வருட சீரழிவுகளை விஜய்யால் மட்டும் சமாளிக்கவோ, சரிசெய்யவோ முடியாது. அதற்குத் தேவையான அரசியல் அறிவாற்றல் அண்ணாமலையிடம் மட்டுமே உள்ளது. ஊழலைத் தடுக்க மனிதர்களாலோ, தற்போதைய சட்டத்தாலோ மட்டும் முடியாது; நவீன தொழில்நுட்பங்களையும் (Technology) முழுமையாகப் பயன்படுத்த வேண்டும். பொன்முடி போன்றோர் மீதான வழக்குகளில் தண்டனை தாமதமாவதும், சொத்துகள் பறிமுதல் செய்யப்படாமல் இருப்பதும் தற்போதைய நீதித்துறையின் நிலையைக் காட்டுகிறது.”

"70 வருட சீரழிவை விஜய்யால் சரிசெய்ய முடியாது; இக்கட்டான நிலையில் அண்ணாமலை உதவுவார்": உடைத்துப் பேசும் 'வீ தி லீடர்ஸ்' ஆதரவாளர் லெஸ்லி !

நெருக்கடியான நேரத்தில் விஜய்க்கு அண்ணாமலை உதவுவார்
“விஜய் புதியவர் என்பதால், ஒரு வருட காலத்திற்கு அவரது அரசாங்கத்தை விமர்சிக்கக் கூடாது என்று அண்ணாமலை பெருந்தன்மையோடு தெரிவித்துள்ளார். கரூர் சம்பவத்தில் ஆளுங்கட்சி உள்பட அனைத்துக் கட்சிகளும் விஜய்யை ஒடுக்க நினைத்தபோது, ‘முதலில் ஆட்சியரையும், எஸ்பி-யையும் விசாரிக்க வேண்டும்’ என்று முதல் ஆளாக விஜய்க்கு ஆதரவுக் குரல் கொடுத்தவர் அண்ணாமலைதான். ஒருவேளை மிகப்பெரிய சதித்திட்டங்கள் மூலம் விஜய் இக்கட்டான சூழ்நிலைக்குத் தள்ளப்பட்டால், அந்த நேரத்தில் அண்ணாமலை நிச்சயமாக விஜய்க்கு உதவி செய்வார். கூட்டணிக்குச் செல்வாரா என்பது தெரியவில்லை என்றாலும், கண்டிப்பாக அவருக்கு ஆதரவாக நிற்பார். சமீபத்தில் நேபாளத்தில் நடந்த இயற்கைச் சீற்றம் எப்படி நிலைமையைத் தலைகீழாக மாற்றியதோ, அதேபோல அரசியலிலும் எப்போது வேண்டுமானாலும் எந்த மாற்றமும் நிகழலாம்.”

3-வது அணி முதல் தவெகவின் வளர்ச்சி வரை: மூத்த பத்திரிகையாளர் திருசக்தி சுந்தராமன் தந்த எக்ஸ்க்ளூசிவ் தகவல்கள்!

MUST READ