Homeசெய்திகள்தமிழ்நாடுஉங்க ஆட்சியையும் டிஸ்மிஸ் பண்ண ஊழியர்கள் தயார்" – அமைச்சர் மிரட்டலுக்கு டாஸ்மாக் சங்கம் பதிலடி

உங்க ஆட்சியையும் டிஸ்மிஸ் பண்ண ஊழியர்கள் தயார்” – அமைச்சர் மிரட்டலுக்கு டாஸ்மாக் சங்கம் பதிலடி

-

- Advertisement -

“உங்க ஆட்சியையும் டிஸ்மிஸ் பண்ண ஊழியர்கள் தயார்”: அமைச்சர் மிரட்டலுக்கு டாஸ்மாக் சங்கம் ஆவேச பதிலடி –
ஜூலை 10ல் குடியேறும் போராட்டம்!

டாஸ்மாக்
பணி நிரந்தரம் கேட்கும் டாஸ்மாக் ஊழியர்களை டிஸ்மிஸ் செய்வேன் என அமைச்சர் மிரட்டினால், வரும் தேர்தலில் உங்களது ஆட்சியையே டிஸ்மிஸ் செய்ய ஊழியர்களின் குடும்பங்கள் தயாராக இருக்கும்” என்று தமிழ்நாடு டாஸ்மாக் விற்பனையாளர்கள் நலச் சங்கத்தின் மாநில சிறப்புத் தலைவர் பாரதி மிகக் காரசாரமாக எச்சரித்துள்ளார்.

we-r-hiring

​ஈரோடு மாவட்டம் சித்தோட்டில் நடைபெற்ற சங்கத்தின் மாநில செயற்குழு கூட்டத்திற்குப் பின், செய்தியாளர்களைச் சந்தித்த அவர் விடுத்த முக்கிய அறிவிப்புகள் மற்றும் கண்டனங்களில், ஜூலை 10 முதல் குடியேறும் போராட்டம்.. ​காலி பாட்டில்களைத் திரும்பப் பெறும் திட்டத்தில் ஊழியர்களுக்குக் கூடுதல் சுமை தராமல், தனி ஆட்களை நியமிப்பதாக அரசு உறுதியளித்திருந்தது. ஜூன் 30-க்குள் இதற்கு முடிவு காண்பதாகக் கூறிய அமைச்சர், இதுவரை எந்த அறிவிப்பும் வெளியிடவில்லை. இதனால், வரும் ஜூலை 10ஆம் தேதி முதல் தங்களது குடும்பத்தினருடன் மாவட்ட டாஸ்மாக் மேலாளர் அலுவலகங்களில் குடியேறும் போராட்டத்தை நடத்தவுள்ளதாக சங்கம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

​”அமைச்சரின் பேச்சுக்கு வன்மையான கண்டனம்”
அவதூறு பேச்சு: டாஸ்மாக் மதுவிலக்குத்துறை அமைச்சர் தொடர்ந்து ஊழியர்களைத் ‘திருடர்கள்’ என்றும், ’10 ரூபாய் வாங்குபவர்கள்’ என்றும் அவதூறாகப் பேசி வருவதை சங்கம் வன்மையாகக் கண்டிக்கிறது.

மிரட்டல் போக்கு: 23 ஆண்டுகளுக்கும் மேலாக ₹11,000 சொற்பச் சம்பளத்தில் கொத்தடிமைகள் போல உழைக்கும் ஊழியர்களின் பணி நிரந்தரக் கோரிக்கையைப் பற்றிப் பேச அமைச்சர் தயாராக இல்லை; மாறாக, ஊழியர்களைப் பணிநீக்கம் (Dismiss) செய்வோம் என அராஜகமாக மிரட்டுகிறார்.

வருவாய் ஈட்டுபவர்கள் நாங்கள்: தமிழக அரசுக்கு ஆண்டுக்கு ₹50,000 கோடி வருவாயை அள்ளித் தந்து, அமைச்சர்கள் மற்றும் எம்.எல்.ஏ-க்களின் சம்பளத்திற்கு வழிவகை செய்வது டாஸ்மாக் ஊழியர்களின் ரத்தமும் உழைப்பும்தான் என்பதை அரசு மறந்துவிடக் கூடாது.
​தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றுக!

“திமுக ஆட்சிக்கு வந்தால் 5 ஆண்டுகள் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றியவர்கள் பணி நிரந்தரம் செய்யப்படுவார்கள்” என அளிக்கப்பட்ட தேர்தல் வாக்குறுதியை இந்த அரசு உடனடியாக நிறைவேற்ற வேண்டும்.
​அரசின் மிரட்டலுக்குப் பயந்து ஊழியர்கள் பின்வாங்க மாட்டார்கள். ஊழியர்கள் தன்னிச்சையாக நாளை முதலே வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டாலும், அதற்கு விற்பனையாளர் சங்கம் முழு ஆதரவு வழங்கி, தமிழ்நாடு தழுவிய அளவில் போராட்டத்தைக் கூடுதல் பலத்துடன் முன்னெடுக்கும் என பாரதி எச்சரித்துள்ளார்.

MUST READ