Homeசெய்திகள்தமிழ்நாடுகிருஷ்ணகிரியில் குப்பையில் கொட்டப்பட்ட வாக்குப்பதிவு இயந்திரங்கள்: ஜனநாயகத்தின் மீது எழும் பெரும் சந்தேகம்!

கிருஷ்ணகிரியில் குப்பையில் கொட்டப்பட்ட வாக்குப்பதிவு இயந்திரங்கள்: ஜனநாயகத்தின் மீது எழும் பெரும் சந்தேகம்!

-

- Advertisement -

​கிருஷ்ணகிரியில் பல லட்சம் மதிப்பிலான வாக்குப்பதிவு இயந்திரங்கள் மற்றும் முக்கிய தேர்தல் ஆவணங்கள் குப்பையில் கண்டெடுக்கப்பட்ட சம்பவம், தேர்தல் ஜனநாயகத்தின் மீதான நம்பகத்தன்மையை மீண்டும் ஒருமுறை கேள்விக்குறியாக்கியுள்ளது. இந்த அதிர்ச்சியூட்டும் நிகழ்வு குறித்து திராவிட வெற்றி கழகத்தின் முதன்மைச் செயலாளர் வல்லம் பஷீர் அவர்கள் தனது கடுமையான கண்டனங்களைப் பதிவு செய்துள்ளார்."வாக்குப்பதிவு இயந்திரங்கள் குப்பையில் கண்டெடுப்பு!" - கிருஷ்ணகிரியில் பரபரப்பு: தமிழக வெற்றிக் கழகம் கடும் கண்டனம்!​குப்பையில் கிடக்கும் ஜனநாயகம்
​தேர்தல் ஆணையத்தின் பாதுகாப்பில் இருக்க வேண்டிய மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் (EVM) மற்றும் அதற்கான விலையுயர்ந்த பேட்டரிகள், ஆவணங்கள் குப்பையில் வீசப்பட்டிருப்பது எப்படி என்ற கேள்வி எழுந்துள்ளது. இது குறித்து கருத்து தெரிவித்துள்ள வல்லம் பஷீர், “நாம் யாருக்கு வாக்களிக்கிறோம், அந்த வாக்கு சரியாகப் பதிவாகிறதா என்ற சந்தேகத்தை இந்தச் சம்பவம் உறுதிப்படுத்துகிறது. ஒரு பொறுப்பான தேர்தல் ஆணையம் இவ்வளவு பாதுகாப்பற்ற முறையில் இயந்திரங்களைக் கையாள்வது ஜனநாயகத்திற்கே விடப்பட்ட சவால்” என்று சாடியுள்ளார்.

​வாக்குப்பதிவு இயந்திரங்கள் மீதான தொடர் குற்றச்சாட்டுகள்
​இவிஎம் இயந்திரங்கள் மீதான மோசடிப் புகார்கள் புதியவை அல்ல என்று சுட்டிக்காட்டும் அவர், வட மாநிலங்களில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் முறையாகக் கையாளப்படாத பல்வேறு சம்பவங்களை உதாரணமாகக் குறிப்பிடுகிறார். குறிப்பாக, தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் தங்களுக்குக் கூட வாக்கு கிடைக்கவில்லை என்று புகார் அளித்த வரலாற்றுச் சம்பவங்களை அவர் நினைவுகூர்ந்தார்.

we-r-hiring

​பிரதான கட்சிகளின் மௌனம்
​இந்த விவகாரத்தில் திராவிட முன்னேற்றக் கழகம், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் போன்ற பிரதான கட்சிகள் போதுமான அளவு குரல் கொடுக்கவில்லை என்று அவர் அதிருப்தி தெரிவித்தார். தேர்தலில் வெற்றி பெறும்போது மௌனம் காப்பதும், தோல்வியடையும் போது மட்டும் இவிஎம் மீது சந்தேகம் எழுப்புவதும் ஜனநாயக ஆரோக்கியத்திற்கு நல்லதல்ல என்று அவர் விமர்சித்தார்.

​கோரிக்கை என்ன?
​கிருஷ்ணகிரியில் கண்டெடுக்கப்பட்ட இயந்திரங்கள் எந்தத் தொகுதிக்கு உட்பட்டவை, அவை எதற்காக அங்கே கொண்டு வரப்பட்டன என்பது குறித்து மாவட்ட ஆட்சியர் உடனடியாக விசாரணை நடத்த வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது. மேலும், வெறும் அறிக்கைகளாக இல்லாமல், இவிஎம் மோசடி குறித்து மக்கள் இயக்கமாகத் திரண்டு போராட்டங்களை நடத்த வேண்டிய கட்டாயத்தில் எதிர்க்கட்சிகள் இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.  ​”மின்னணு இயந்திரங்களை விட, வாக்குச் சீட்டு முறைதான் அதிக நம்பகத்தன்மை வாய்ந்தது என்பதை வளர்ந்த நாடுகள் உணர்ந்துள்ளன. இந்திய ஜனநாயகத்தை மீட்டெடுக்க இவிஎம் முறைகேடுகளுக்கு எதிராக அனைவரும் ஒன்றிணைய வேண்டும்,” என்று அவர் தனது பேட்டியில் அழுத்தமாகத் தெரிவித்தார்.

“விடுதலைப் போராட்டக் கனவுகளின் தொடர்ச்சியே சமத்துவம்!” – ஜவாஹிருல்லா சுதந்திர தின வாழ்த்து!

MUST READ