Homeசெய்திகள்தமிழ்நாடு"காங்கிரஸின் அழுத்தத்தாலேயே தொகுதி மறுவரையறைக்கு எதிர்ப்பு!"தைலாபுரத்தில் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் அதிரடிப் பேட்டி!

“காங்கிரஸின் அழுத்தத்தாலேயே தொகுதி மறுவரையறைக்கு எதிர்ப்பு!”தைலாபுரத்தில் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் அதிரடிப் பேட்டி!

-

- Advertisement -

தமிழ்நாட்டில் 100 மடங்கு அதிகரித்த போதைப்பொருள் புழக்கம் – மதுவிலக்கு மற்றும் வேலைவாய்ப்பு குறித்துச் சரமாரி குற்றச்சாட்டு"காங்கிரஸின் அழுத்தத்தாலேயே தொகுதி மறுவரையறைக்கு எதிர்ப்பு!"தைலாபுரத்தில் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் அதிரடிப் பேட்டி!

காங்கிரஸ் கட்சியின் அரசியல் அழுத்தம் காரணமாகவே தொகுதி மறுவரையறைக்கு எதிரான தீர்மானத்தைத் தமிழக அரசு கொண்டுவந்துள்ளதாகப் பாமக தலைவர் மருத்துவர் அன்புமணி ராமதாஸ் குற்றம்சாட்டியுள்ளார்.

we-r-hiring

பாமக தலைவர் மருத்துவர் அன்புமணி ராமதாஸ், தனது தாயார் சரஸ்வதி அம்மாவின் பிறந்தநாளை முன்னிட்டு குடும்பத்தினருடன் தைலாபுரம் இல்லத்திற்கு வருகை தந்து வாழ்த்து பெற்றார். அதனைத் தொடர்ந்து அவர் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார்.

சுதந்திர தின வாழ்த்தும் மதுவிலக்குக் கோரிக்கையும்:செய்தியாளர்கள் சந்திப்பில் அன்புமணி ராமதாஸ் பேசியதாவது:

“அனைவருக்கும் என் இனிய சுதந்திர தின நல்வாழ்த்துகள்! சுதந்திரமடைந்து இத்தனை ஆண்டுகள் கடந்த பின்னரும், தமிழ்நாட்டிற்கு மதுவிலக்கு, போதை ஒழிப்பு மற்றும் விவசாயிகளுக்கான முழு விடுதலையும் கிடைக்கவில்லை. தமிழக அரசு பூரண மதுவிலக்கைப் படிப்படியாக நடைமுறைப்படுத்த வேண்டும்; விவசாயிகளின் அனைத்துக் கடன்களையும் முழுமையாகத் தள்ளுபடி செய்ய வேண்டும்.

ஆன்லைனில் மது விற்பனை மற்றும் டாஸ்மாக்கை தனியார் மயமாக்க அமைக்கப்பட்டுள்ள குழுவின் ஒரே நோக்கம் வருமானத்தைப் பெருக்குவது மட்டுமே. கன்னியாகுமரியில் பள்ளி மாணவிகள் மது அருந்தும் காட்சிகளைப் பார்க்கும்போது அச்சமாக உள்ளது. தவெக அரசு மதுக்கடைகளைப் படிப்படியாகக் குறைக்கும் கொள்கையை உடனடியாக அறிவிக்க வேண்டும்.”

போதைப்பொருளும் இளைஞர் பிரச்சினையும்:
தொடர்ந்து பேசிய அவர், “கடந்த ஆட்சிக் காலத்தை விட தற்போது தமிழ்நாட்டில் 100 மடங்கு போதைப்பொருள் புழக்கம் அதிகரித்துவிட்டது. கோவையில் மாணவர் கொலை செய்யப்பட்ட சம்பவத்திற்குக் கூட போதைப் பழக்கமே பிரதான காரணமாகும். ஒரு கோடி இளைஞர்கள் வேலையின்றித் தவிக்கும் நிலையில், அரசுத் துறைகளில் உள்ள ஆறரை லட்சம் காலிப் பணியிடங்களையும், 2 லட்சத்திற்கும் மேற்பட்ட ஆசிரியர் பணியிடங்களையும் உடனடியாக நிரப்ப வேண்டும்” என வலியுறுத்தினார்.

சாதிவாரி கணக்கெடுப்பு குழப்பம்:
ஒன்றிய அரசின் சாதிவாரி கணக்கெடுப்பு குறித்துக் கூறுகையில், “எஸ்சி, எஸ்டி தவிர்த்துப் பொதுவான ‘சாதி’ எனக் குறிப்பிட்டுப் படிவத்தில் எழுதச் சொல்வது மிகப்பெரிய குழப்பத்தை உருவாக்கும். பட்டியல் அடிப்படையில் சாதியை முறையாகக் கணக்கெடுக்காவிட்டால் இந்தக் கணக்கெடுப்பால் எந்தப் பயனும் இல்லை” என்றார்.

தொகுதி மறுவரையறைக்கு ஆதரவு:
தொகுதி மறுசீரமைப்பு குறித்துப் பேசுகையில், “காங்கிரஸ் கட்சியின் அழுத்தத்தால் மட்டுமே அரசு தொகுதி மறுவரையறைக்கு எதிரான மசோதாவைக் கொண்டுவந்துள்ளது. உண்மையில் தொகுதி மறுசீரமைப்பு மிகவும் அவசியமானது. இதனால் தமிழ்நாட்டிற்கு நாடாளுமன்ற எம்பிக்களின் எண்ணிக்கை 39-லிருந்து 59 ஆகவும், சட்டமன்ற எம்எல்ஏக்களின் எண்ணிக்கை 234-லிருந்து 351 ஆகவும் உயரும். இதில் 117 பெண் எம்எல்ஏக்கள் இடம்பெற வாய்ப்புள்ளது. புரிதல் இல்லாமல் சில கட்சிகள் இதனை எதிர்க்கின்றன” எனக் குறிப்பிட்டார்.

மேலும், வழிபாட்டுத் தலங்கள் மற்றும் கல்வி நிலையங்கள் அருகே உள்ள ஆயிரக்கணக்கான மதுக்கடைகளை உடனடியாக அகற்ற வேண்டும் என்றும், இந்தியாவில் கல்லீரல் பிரச்சினை அதிகம் உள்ள மாநிலமாகத் தமிழ்நாடு மாறி வருவதால் தீவிர விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார்.

“விடுதலைப் போராட்டக் கனவுகளின் தொடர்ச்சியே சமத்துவம்!” – ஜவாஹிருல்லா சுதந்திர தின வாழ்த்து!

MUST READ