Homeசெய்திகள்தமிழ்நாடு"சட்டமன்றத்தில் அப்பாவைத் தேடினால் எப்படி தெரியும்?"முதல்வர் ஜோசப் விஜய் குறித்து கமலாலயத்தில் நயினார் நாகேந்திரன் காரசார...

“சட்டமன்றத்தில் அப்பாவைத் தேடினால் எப்படி தெரியும்?”முதல்வர் ஜோசப் விஜய் குறித்து கமலாலயத்தில் நயினார் நாகேந்திரன் காரசார விமர்சனம்!

-

- Advertisement -

பாஜகவின் ‘ஒரே நாடு’ நிகழ்ச்சியில் பேச்சு – அரசியல் களத்தில் சூடாகும் வார்த்தைப் போர்
சட்டமன்றத்தில் அப்பாவைத் தேடுவதற்குப் பதிலாக வீட்டிற்குச் சென்று அம்மாவிடம் கேட்டால் தான் அப்பா யார் என்று தெரியும் எனத் தமிழகப் பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன், தமிழக முதல்வர் ஜோசப் விஜய்யைக் கடுமையாக விமர்சித்துப் பேசியுள்ளது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது."சட்டமன்றத்தில் அப்பாவைத் தேடினால் எப்படி தெரியும்?"முதல்வர் ஜோசப் விஜய் குறித்து கமலாலயத்தில் நயினார் நாகேந்திரன் காரசார விமர்சனம்!

சென்னை தி.நகரில் உள்ள பாஜக தலைமை அலுவலகமான கமலாலயத்தில் இன்று (15-08-2026) ‘ஒரே நாடு’ என்ற சிறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த விழாவில் கலந்து கொண்டு உரையாற்றிய பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன், தற்போதைய தமிழக ஆட்சியாளர்களை இலக்கு வைத்து கடுமையாகத் தாக்கிப் பேசினார்.

we-r-hiring

மனிதத் தோலும் தற்போதைய ஆட்சியும்:  நிகழ்ச்சியில் நயினார் நாகேந்திரன் பேசியதாவது:  “கவிதைகளில் புதுக்கவிதை, பழைய கவிதை எனப் பல வகைகள் இருக்கின்றன. எனக்குக் கல்லூரியில் படிக்கும் போது படித்த நினைவொன்று வருகிறது.

செத்த மாட்டின் தோலினால் செருப்பு செய்யலாம்; செத்த ஆட்டின் தோலினால் ஆடை நெய்யலாம்… ஆனால், செத்த மனித தோலினால் என்ன செய்ய முடியும்?இன்று அப்படிப்பட்ட மனிதர்கள் வாழக்கூடிய நாடாக, ஆட்சி செய்யக்கூடியவர்களின் சூழல் அமைந்துவிட்டது. இவர்களால் இந்த நாட்டிற்கு என்ன நன்மையைச் செய்ய முடியும்?”

சட்டமன்றத்தில் அப்பாவைத் தேடும் விமர்சனம்:  தொடர்ந்து முதல்வர் ஜோசப் விஜய்யின் சட்டமன்றப் பேச்சை விமர்சித்து அவர் கூறுகையில், “சட்டமன்றத்திற்குச் சென்று ‘அப்பாவை எங்கே? அப்பாவை எங்கே?’ என்று தேடுகிறார்கள். வீட்டிற்குச் சென்று அம்மாவிடம் கேட்டால் தானே அப்பா யார் என்று சொல்வார்கள்? அதை விட்டுவிட்டுச் சட்டமன்றத்தில் அப்பாவைத் தேடினால் யாருக்குத் தெரியும்? இப்படிப்பட்டவர்களின் ஆட்சிதான் இன்று தமிழகத்தில் நடந்துகொண்டிருக்கிறது” என்று சாடினார்.  தமிழக அரசு மற்றும் முதல்வர் ஜோசப் விஜய் மீது பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் கமலாலய மேடையிலேயே இத்தகையக் காட்டமான விமர்சன முன்வைத்தது, அரசியல் களத்தில் பெரும் விவாதத்தையும் பரபரப்பையும் கிளப்பியுள்ளது.

“எங்கள் பொறுமையைச் சோதிக்க வேண்டாம்!” – தவெக அரசுக்கும் முதல்வர் விஜய்க்கும் நயினார் நாகேந்திரன் காட்டமான எச்சரிக்கை!

MUST READ