Homeசெய்திகள்அரசியல்நாட்டில் என்ன நடக்கிறது என்பதே விஜய்க்கு தெரியாது - எடப்பாடி

நாட்டில் என்ன நடக்கிறது என்பதே விஜய்க்கு தெரியாது – எடப்பாடி

-

- Advertisement -

நாட்டில் என்னென்ன விஷயம் நடக்கிறது என்பதே விஜய்க்கு தெரியாது என எடப்பாடி பழனிச்சாமி கூறியுள்ளாா்.நாட்டில் என்ன நடக்கிறது என்பதே விஜய்க்கு தெரியாது - எடப்பாடி‘தமிழ்நாட்டில் என்ன அரசியல் நடக்கிறது என்பதே விஜய்க்கு தெரியவில்லை. பொதுவெளியில் வந்து பார்த்தால்தானே விஜய்க்கு அரசியல் தெரியும்’ என எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

மேலும், நாட்டில் என்ன நடக்கிறது என்பதே விஜய்க்கு தெரியவில்லை. கரூாில் 41 போ் உயிரிழந்ததற்கு பிறகு 72 நாட்கள் வீட்டை விட்டு வெளியே வராதவா் விஜய். ‘விஜய் மக்களையும் பார்ப்பதில்லை. தொலைக்காட்சியையும் பார்ப்பதில்லை. செய்தியாளர்களைச் சந்தித்தால்தான் களநிலவரம் விஜய்க்கு புரியும். ஜெயலலிதாவை ரோல் மாடல் என்று சொல்லிவிட்டு யாரை ஊழல் சக்தி என்று சொல்கிறார் விஜய்?.  எந்த எந்த கட்சி, எந்த கட்சிகளுடன் கூட்டணி வைத்துள்ளது என்பதே விஜய்க்கு தெரியவில்லை. கூட்டணிக்கு எந்தக் கட்சி தலைமை என்றே விஜய்க்கு தெரியவில்லை. கூட்டணிக்கு அதிமுகதான் தலைமை என அமித் ஷாவே தெளிவுபடுத்திவிட்டார்’ எனவும் எடப்பாடி தெரிவித்துள்ளார்.

தேர்தல் பணிகளில் இருந்து விலகிய அண்ணாமலை! புதுக்கட்சி தொடங்க திட்டமா? செந்தில்வேல் நேர்காணல்!

we-r-hiring

MUST READ