தேமுதிக எந்தக் கூட்டணியில் அங்கம் வகிக்கும் என்பதை விரைவில் அறிவிப்பேன் என தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா கூறியுள்ளாா்.
2026 சட்டமன்ற தேர்தல் அறிவிப்புக்கு சில வாரங்களே உள்ளது. ஆட்சியை தக்க வைப்பதற்காக திமுக, அதிமுக, பாஜக, தவெக என பல்வேறு கட்சிகள் களத்தில் இறங்கியுள்ளனா். தமிழ்நாட்டில் திமுக, அதிமுக, நாம் தமிழர், தவெக என்று 4 முனை போட்டி நிலவுகிறது. கூட்டணிகள் இறுதி செய்யப்பட்டுவிட்டன. தொகுதி பங்கீடு, வாக்குறுதிகள், பிரச்சாரம் ஆகியவற்றால் அரசியல் களத்தில் உச்சகட்ட பரபரப்பு நிலவி வருகிறது.இந்நிலையில், கோயம்பேட்டில் உள்ள கட்சி அலுவலகத்தில் விருப்பமனு விநியோகத்தை தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா தொடங்கி வைத்தாா். பின்னா் பேசிய அவா் பல தரப்பினா் தங்களுடன் பேச்சுவாா்த்தை நடத்தி வருவதாகவும் கூறினாா். தேமுதிக எந்தக் கூட்டணியில் அங்கம் வகிக்கும் என்பதை பிப்ரவாி 17 ஆம் தேதிக்குள் அறிவிப்பேன் என தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா உறுதியாக அறிவித்துள்ளாா்.
கடந்த 3-ம் தேதி கூட்டணி முடிவை அறிவிப்பதாக கூறிய பிரேமலதா அன்றைய தினம் அறிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.



