Homeசெய்திகள்அரசியல்பாஜகவிற்கு எதிராக விசிக - பாமக இணையுமா? திருமாவளவன் அதிரடி பதில்!

பாஜகவிற்கு எதிராக விசிக – பாமக இணையுமா? திருமாவளவன் அதிரடி பதில்!

-

- Advertisement -

பாஜகவிற்கு எதிராக தவெக – திமுக ஒன்றாகச் செயல்படலாம் என விசிக தலைவர் திருமாவளவன் அண்மையில் கூறியிருந்த நிலையில், அதேபோல பாஜகவை எதிர்க்க விசிகவும் பாமகவும் இணையுமா என்ற கேள்வி அரசியல் வட்டாரத்தில் எழுந்தது. இதுகுறித்த செய்தியாளர்களின் கேள்விக்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் எம்பியின் அதிரடியான பதில்கள் மற்றும் பல்வேறு முக்கிய விவகாரங்கள் குறித்த அவரது பேட்டியின் விவரம் பின்வருமாறு:

திருமாவளவன்

we-r-hiring

பாமகவுடன் கூட்டணியா? திருமாவளவன் விளக்கம்

பாமகவின் கடந்த கால நடவடிக்கைகள் பாஜகவை ஒட்டியே இருந்ததால் தான் நாங்கள் அப்படி ஒரு நிலைப்பாட்டை எடுக்க நேர்ந்தது. எனவே, யூகமான கேள்விக்கு யூகமான பதில் சொல்ல முடியாது. எங்கள் நிலைப்பாட்டில் நாங்கள் எப்போதும் உறுதியாக இருக்கிறோம். சாதிய மற்றும் மதவாத அரசியலை உயர்த்திப் பிடிக்கின்ற கட்சிகளுடன், தேர்தலுக்காகக் கூட நாங்கள் கூட்டணி உறவை வைத்துக்கொள்ள மாட்டோம் என்பதில் இன்றைக்கும் மிக உறுதியாக இருக்கிறோம்.

தவெக – விசிக இடையே நல்ல இணக்கம்

தமிழக வெற்றிக் கழகத்திற்கும் (தவெக), விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக்கும் (விசிக) இடையே தற்போது நல்ல இணக்கம் நிலவுகிறது. எங்களுக்கு இடையில் எந்தவிதமான இடைவெளியும் இல்லை.

சபரிவர்மன் மரணம்: சிபிஐ விசாரணைக்குக் கோரிக்கை

சபரிவர்மன் உயிரிழந்த சம்பவம் என்பது கொடிய துயரம் நிறைந்த ஒரு நிகழ்வாகும். அதனை எண்ணி நாங்கள் மிகுந்த வேதனைப்படுகிறோம். இந்த வழக்கை சிபிஐ (CBI) விசாரிக்க வேண்டும் என சபரிவர்மனின் குடும்பத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர். எனவே, தமிழக முதலமைச்சர் இதனை உரிய முறையில் பரிசீலித்து, அந்தக் குடும்பத்தினரின் உணர்வுகளுக்கு மதிப்பு அளித்து இந்த வழக்கை சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்.

பழனி கோவில் நில விவகாரத்தில் கடும் நடவடிக்கை தேவை

பழனி தண்டாயுதபாணி சுவாமி கோவில் நிலம் முறைகேடாகப் பத்திரப்பதிவு செய்யப்பட்ட விவகாரத்தில், இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சில விளக்கங்களைத் தந்துள்ளார். மேலும், இதில் சம்பந்தப்பட்டவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார். இந்த விவகாரத்தில் முதலமைச்சர் அவர்கள் தனிக் கவனம் செலுத்த வேண்டும். உரிய விசாரணை நடத்தி, இதில் தொடர்புடையவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.

MUST READ