Homeசெய்திகள்அரசியல்"திரைப்பட வசனம் பேசும் முதல்வர் விஜய், கட்சிக்குள் இருக்கும் ஊழல்வாதிகளை எப்போது ஒழிப்பார்?" – டிடிவி...

“திரைப்பட வசனம் பேசும் முதல்வர் விஜய், கட்சிக்குள் இருக்கும் ஊழல்வாதிகளை எப்போது ஒழிப்பார்?” – டிடிவி தினகரன் அதிரடி சாடல்!

-

- Advertisement -

“தொட விடமாட்டேன், தொட்டால் விடமாட்டேன், தொட்டவர்களையும் விட மாட்டேன் என ரீல்ஸ் கன்டென்டுக்கு ஏற்றார் போல திரைப்பட வசனங்களை அடுக்கும் முதலமைச்சர் விஜய் அவர்கள், தன் சொந்தக் கட்சிக்குள் நிரம்பியிருக்கும் ஊழல்வாதிகளை எப்போது? எப்படி ஒழிக்கப் போகிறார்?” என்று அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் காரசாரமாகக் கேள்வி எழுப்பியுள்ளார்.
தினகரன்

செங்கல்பட்டு மாவட்டத்தில் தமிழக வெற்றிக் கழக (தவெக) நிர்வாகி ஒருவர் ஒப்பந்ததாரரிடம் லஞ்சம் வாங்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் சூழலில், டிடிவி தினகரன் விடுத்துள்ள அறிக்கையின் விவரம்:

we-r-hiring

தவெக ஊராட்சித் தலைவர் லஞ்சம் வாங்கும் வீடியோ விவகாரம்
​செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட மாம்பாக்கம் ஊராட்சியின் தலைவராகவும், தவெக நிர்வாகியாகவும் இருப்பவர் வீராசாமி. இவர் ஒப்பந்ததாரர் ஒருவரிடம் லஞ்சம் வாங்குவது போன்ற வீடியோ காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.

இதுகுறித்துத் தனது அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ள டிடிவி தினகரன்:
​”ஏற்கனவே பல்வேறு ஊழல் புகார்களுக்கு உள்ளாகி, கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு திமுகவிலிருந்து விலகியவர் இந்த வீராசாமி. அதன்பின் தவெகவில் இணைந்து தன்னை வெள்ளாவி வைத்து வெளுத்த தூயவனாகக் காட்ட முயன்றார். ஆனால், தற்போது அவர் ஒப்பந்ததாரரிடம் லஞ்சம் வாங்குவது போல வெளியாகியிருக்கும் வீடியோ காட்சிகள், அவர் மீது ஏற்கனவே குவிந்திருக்கும் ஊழல் புகார்களையும், பொதுமக்கள் அவர் மீது வைத்த குற்றச்சாட்டுகளையும் அப்பட்டமாக உறுதிபடுத்தும் வகையில் அமைந்திருக்கிறது.”

தவெகவின் ‘ஊழல் ஒழிப்பு’ லட்சணம் அம்பலம்!
​கடந்த சில நாட்களுக்கு முன்பாக, பழனி அருள்மிகு தண்டாயுதபாணி திருக்கோயிலுக்குச் சொந்தமான கோயில் நிலம் முறைகேடாகப் பதிவு செய்யப்பட்டிருப்பதாகப் புகார் எழுந்ததைச் சுட்டிக்காட்டிய டிடிவி தினகரன், அடுத்தடுத்து அரங்கேறும் இந்த நிகழ்வுகள் தவெகவின் வெளிப்படையான நிர்வாகம் மற்றும் ஊழல் ஒழிப்பு முழக்கங்களின் அசல் லட்சணத்தை வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது என்றார்.
​பெயரளவில் மட்டுமே ஊழல் ஒழிப்பு என்று பேசிக்கொண்டு, ஆளும் கட்சியின் நிழலில் அதன் நிர்வாகிகள் அப்பட்டமாக ஊழலில் திளைப்பது மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாகக் குறிப்பிட்டார்.

முதல்வர் விஜய்க்கு விடுக்கப்பட்ட வலியுறுத்தல்
​சமூக வலைதளங்களில் வெளியாகியிருக்கும் இந்த வீடியோக் காட்சிகளை முழுமையாக ஆய்வுக்குட்படுத்தி, லஞ்சம் வாங்கியிருப்பது உறுதி செய்யப்பட்டால் தவெக நிர்வாகி வீராசாமி மீது அரசு உடனடியாகக் கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று டிடிவி தினகரன் வலியுறுத்தியுள்ளார்.

மேலும், வரும் காலங்களிலாவது முதலமைச்சர் விஜய் அவர்கள் ஊழல் ஒழிப்பை வெறும் திரைப்பட பாணி வசனங்களோடு நிறுத்திக் கொள்ளாமல், பெயரளவில் இல்லாமல் செயல் அளவில் கொண்டு வர வேண்டும் என்றும் அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தனது அறிக்கையில் ஆணித்தரமாகக் கேட்டுக்கொண்டுள்ளார்.

MUST READ