Homeசெய்திகள்அரசியல்திருடியவனே திருடன் திருடன் என கத்தும் பழைய டெக்னிக் பழசாகல" - மார்க்சிஸ்ட் தலைவர் ஓப்பன்...

திருடியவனே திருடன் திருடன் என கத்தும் பழைய டெக்னிக் பழசாகல” – மார்க்சிஸ்ட் தலைவர் ஓப்பன் டாக்!

-

- Advertisement -

“தவறு செய்தவர்களே, மற்றவர்கள் மீது பழியைப் போட்டுத் தப்பிக்க முயலும் பழைய அரசியல் உத்தி இன்றும் மாறவில்லை” என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் (CPIM) மாநில செயற்குழு உறுப்பினர் க.பொ.அகத்தியலிங்கம் கடுமையான விமர்சனத்தை முன்வைத்துள்ளார்.

திருடியவனே திருடன் திருடன் என கத்தும் பழைய டெக்னிக் பழசாகல" - மார்க்சிஸ்ட் தலைவர் ஓப்பன் டாக்!

we-r-hiring

​இது குறித்து அவர் வெளியிட்டுள்ள சுருக்கமான, அதே சமயம் ஆழமான அரசியல் பதிவில், தற்போதைய சூழலைத் துல்லியமாகச் சுட்டிக்காட்டியுள்ளார்.

​”திருடன்.. திருடன்.. டெக்னிக் இன்னும் பழசாகவில்லை”
​அரசியல் களத்தில் நிலவி வரும் அவதூறுகள் மற்றும் திசைதிருப்பல் அரசியலைக் குறிப்பிட்டுப் பேசியுள்ள க.பொ.அகத்தியலிங்கம், ​”திருடியவனே, தானே தப்பித்துக் கொள்வதற்காக ‘திருடன்.. திருடன்..’ எனக் கத்திக் கொண்டு ஓடும் பழைய டெக்னிக் (உத்தி) இன்னமும்கூடப் பழசாகவில்லை; அது இப்போதும் தொடர்கிறது.”

​அயோத்தி, கரூர் சாட்சியாக இருக்கிறது!
​மேலும், இந்த உத்திக்கு மிகச்சிறந்த உதாரணங்களாக நடப்பு அரசியல் நிகழ்வுகள் விளங்குவதை அவர் சுட்டிக்காட்டியுள்ளார். “இதற்கு இப்போதும் கூட வடக்கே ‘அயோத்தி’யில் நடக்கும் சம்பவங்களும், தெற்கே ‘கரூர்’ பகுதியில் நடக்கும் அரசியல் நகர்வுகளுமே சாட்சியாக இருக்கின்றன” என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.​சமீபகாலமாக அரசியல் வட்டாரங்களில் நிலவி வரும் குதிரை பேரக் குற்றச்சாட்டுகள், நில அபகரிப்பு புகார்கள் மற்றும் தேர்தல் முறைகேடு சர்ச்சைகளின் பின்னணியில், தவறு செய்பவர்களே மற்றவர்கள் மீது பழி சுமத்தும் போக்கைச் சாடும் வகையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் இந்த மூத்த தலைவரின் கருத்து அமைந்துள்ளதாக அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர்.

அமைதிப்படை அம்மாவாசைப் போல் அண்ணாமலையின் புதிய அரசியல் வியூகம்: ‘We The Leaders’ அமைப்பில் 50 லட்சம் பேர் சேர்ந்ததும் புதிய கட்சி!

MUST READ