Homeசெய்திகள்அரசியல்"அடுத்த கட்சியின் கட்டமைப்பை ஆட்டையப் போடுவது களவாணித்தனம்" - தவெக தலைவர் விஜய்யை சாடிய ஆர்.பி....

“அடுத்த கட்சியின் கட்டமைப்பை ஆட்டையப் போடுவது களவாணித்தனம்” – தவெக தலைவர் விஜய்யை சாடிய ஆர்.பி. உதயகுமார்!

-

- Advertisement -

மதுரை நகர் மற்றும் புறநகர் மாவட்ட அண்ணா தொழிற்சங்கம் சார்பில் ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெற்றது. இக்கூட்டத்தில் அதிமுக மூத்த தலைவர்கள் செல்லூர் கே. ராஜு, வி.வி. ராஜன் செல்லப்பா மற்றும் முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
​கூட்டத்தில் பேசிய ஆர்.பி. உதயகுமார், தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் மற்றும் தற்போதைய அரசியல் சூழல் குறித்துக் கடுமையான விமர்சனங்களை முன்வைத்தார்.
உதயகுமார்

“விஜய்யின் அரசியல் ஒரு களவாணித்தனம்”
​கூட்டத்தில் பேசிய ஆர்.பி. உதயகுமார், “அதிமுகவில் கடைசி தொண்டன் இருக்கும் வரை இந்த இயக்கத்தை யாராலும் தொட்டுக்கூட பார்க்க முடியாது. தேர்தலில் வெற்றி வாய்ப்பு வரவில்லை என்பதால் எங்களுக்கு எந்த வேதனையும் இல்லை. ஆனால், இப்போது விரலில் வைக்கப்பட்ட ஓட்டு மை அழிவதற்கு முன்பாகவே மக்கள் பிரதிநிதிகள் விலை போகிறார்கள். இதற்காகவே திட்டமிட்டு ராஜினாமா நாடகங்களை நடத்தி வருகிறார்கள்.

we-r-hiring

​ஆட்சி அமைத்துள்ள தவெக-விற்கு என்று சொந்தமாக எந்தவொரு தொழிற்சங்க கட்டமைப்பும் கிடையாது. அவர்களுக்குத் தோன்றிய ஒரே யோசனை, அடுத்த கட்சியின் உழைப்பில் உருவான கட்டமைப்பை ஆட்டையப் போடுவதுதான். இது விஜய் செய்யும் களவாணித்தனம். யார் வேண்டுமானாலும் பனையூர் கேட்டுக்கு ஓடலாம், ஆனால் ஒரு உண்மையான விசுவாசத் தொண்டன் கூட அங்குப் போக மாட்டான்” என்று சாடினார்.

​சவால் விடுத்த ஆர்.பி. உதயகுமார்
​விஜய்க்கு நேரடி சவால் விடுத்த உதயகுமார், “தற்போது தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள 107 சட்டமன்ற உறுப்பினர்களில், ஜான் விஜய் (John Vijay) முகத்தைப் பார்த்து அவர்களின் பெயர்களை விஜய் சொல்லிவிட்டால், நான் பொது வாழ்க்கையிலிருந்தே விலகத் தயார். 5 கட்சிக்கு மாறிப் போன ஒரு ‘அமாவாசை’ மதுரை அமைச்சர், ஜான் விஜய் குறித்து என்ன வேண்டுமானாலும் பேசட்டும். ஆனால் அவர்களுக்கு அதிமுகவின் ஆயுளைப் பற்றிப் பேசும் எந்த யோக்கியதையும் இல்லை.

எடப்பாடியாரிடம் காரியம் சாதித்துக் கொண்டவர்கள் இப்போது ஓடியுள்ளார்கள். கோடிக்கணக்கில் பணத்தைச் செலவழித்து, ‘Influencers’ மூலமாகவும், Gen-Z தலைமுறையினரை மூளைச்சலவை செய்தும்தான் இவர் ஆட்சியில் அமர்ந்துள்ளார்” எனக் குற்றம் சாட்டினார்.
​”6 மணிக்கு மேல் ஆண்டவனே வந்தாலும்…” – தமிழக அரசு மீது விமர்சனம்

​தொடர்ந்த அவர், “தமிழகத்தில் வெள்ளம் வந்தபோது நீங்கள் எங்கே போனீர்கள்? மாலை 6 மணிக்கு மேல் ஆண்டவனே நினைத்தாலும் முதலமைச்சரைக் கூட்டி வர முடியாது என்ற நிலைதான் உள்ளது. கொடுத்த வாக்குறுதி என்னாச்சு என்று கேட்டால் முழிக்கிறார். ‘கொத்து புரோட்டா’ என எவ்வளவு நாகரிகமற்ற முறையில் விஜய் பேசுகிறார்? ஓடு ஓடு என்கிறார், யார் ஓடினார்? எம்.ஜி.ஆர், ஜெயலலிதா ஆகியோர் அமர்ந்த முதலமைச்சர் நாற்காலியில் இப்போது உட்கார்ந்திருக்கும் தருதலை விஜய், நாகரிகமற்றுப் பேசி வருகிறார்.

தில்லு திராணி இருந்தால் அதிமுக தீர்ந்து போன சக்தி என விஜய் சொல்ல வேண்டியதுதானே? அதை அவர் சொல்ல மாட்டார். ஏனென்றால், அதிமுகவில் இருந்துதானே ஆட்களை ஆட்டையப் போட்டு வருகிறார். அமமுகவில் இருந்த ஒரே ஒரு எம்.எல்.ஏ-வையும் அவர்தான் கடத்திச் சென்றார். சினிமா வசீகரமோ, பஞ்ச் டயலாக்கோ பேச எங்கள் முதல்வர் வேட்பாளருக்குத் தெரியவில்லை. இது தலைவர்களை நம்பி ஆரம்பித்த கட்சி அல்ல, தொண்டர்களை நம்பி வாழும் கட்சி” என்றார்.

“விரைவில் எடப்பாடியார் ஆட்சி”
​2029-ல் ஒரே நாடு ஒரே தேர்தல் நடத்துவதற்கான மசோதா தாக்கல் செய்யப்பட்டு, கூட்டுக்குழுவில் விவாதம் நடைபெற்று வருவதைச் சுட்டிக்காட்டிய அவர்: ​”தற்போதைய ஆட்சியின் ஆயுள் காலம் 3 ஆண்டுகள் என்று நான் சொல்லவில்லை, அது 3 மாதமாகக் கூட இருக்கலாம். மக்கள் இந்த ஆட்சியின் மீது கடும் கொதிப்பில் உள்ளார்கள், விவசாயிகளும் போராடி வருகிறார்கள்.

வெகு விரைவில் தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு எடப்பாடியாரின் நல்லாட்சி அமையும். தொண்டர்கள் நம்பிக்கையோடு இருக்க வேண்டும்.”
​இவ்வாறு ஆர்.பி. உதயகுமார் பேசினார்.

MUST READ