spot_imgspot_img
Homeசெய்திகள்கேள்வி & பதில்விஜய் தன்னைத்தானே புகழ்ந்து கொள்கிறார் - கே.பி. முனுசாமி பேட்டி

விஜய் தன்னைத்தானே புகழ்ந்து கொள்கிறார் – கே.பி. முனுசாமி பேட்டி

-

- Advertisement -

தவெக தலைவர் விஜய்க்கு இருக்கக்கூடிய மக்கள் செல்வாக்கு என்ன? தன் உயரம் என்ன? என்று தெரியாமல் தன்னைத்தானே புகழ்ந்து கொள்கிறார் – அதிமுக துணை பொது செயலாளர் கே.பி. முனுசாமி பேட்டியளித்துள்ளாா்.விஜய் தன்னைத்தானே புகழ்ந்து கொள்கிறார் - கே.பி. முனுசாமி பேட்டிகிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரி ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு 125 நாட்கள் வேலை உறுதி திட்டத்தை சீர்குலைப்பதாக திமுக அரசை கண்டித்து, அதிமுக கூட்டணி கட்சியினர் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைப்பெற்றது. அதிமுக துணைப் பொதுச்செயலாளர் கே.பி.முனுசாமி பங்கேற்று கண்டன உறையாற்றினார். பின்னர் பத்திரிகையாளர்களுக்கு பேட்டியளித்த பேட்டியில்,

மகளிர் உரிமைத்தொகையை  தடுக்க முயன்றதாலேயே  முன்கூட்டியே மகளிர் உரிமைத்தொகை அறிவித்துள்ளதாக ஸ்டாலின் குறித்த கேள்விக்கு:

we-r-hiring

அவர் தமிழக முதல்வர் ஒரு சட்டத்தை நிறைவேற்றி நடைமுறைப்படுத்த கூடிய இடத்தில் உள்ளவர். 2021 தேர்தல் வாக்குறுதியாக அளித்து 3 ஆண்டுகள் வழங்காமல் பின்னர் திட்டத்தை கொண்டுவந்தார். அந்த திட்டம் நடைமுறைக்கு வந்துவிட்டால் எப்படி தடுக்க முடியும்,

உதாரணமாக சத்துணவு திட்டம் அறிவித்து தேர்தல் வந்தால் நிறுத்திவிடுவார்களா? இதனை அவர் மக்களுக்கு தவறான முறையில் தெரிவிக்கிறார்.

5,000 ரூபாய்  என்பது  தன்னை காப்பாற்றவும், விமர்சனங்களில் பாதுகாத்துக்கொள்ள வரைவு வைத்துள்ளார். தேர்தல் முன்பாக அட்வான்சாக ஏன் பணம் கொடுக்கிறார். மாதந்தோறும் வழங்க வேண்டிய பணத்தை அரசு பணத்தை எடுத்து ஸ்டாலின் ஊழல் செய்துள்ளார். அடுத்த தேர்தலை குறிவைத்து அறிவித்துள்ளதால் இதனை வன்மையாக கண்டிக்கிறோம் என பேசினார்.

மகளிர் உரிமைத்தொகை 2,000 ரூபாயாக உயர்த்தப்படும் என ஸ்டாலின் அறிவித்த கேள்விக்கு:

நாங்கள் முதலாவதாக 2000 ரூபாய் வழங்குவோம் என சொன்ன வாக்குறுதி மக்களை சென்றடைந்தது என்பதால், அவருக்கு பயம் வந்துவிட்டது. அதிமுக தேர்தல் வாக்குறுதியால் நமக்கு பாதகம் ஏற்படும் என எண்ணி, தேர்தல் வாக்குறுதியில் அறிவிக்காமல் தற்போது அறிவித்துள்ளார்.

கோடைக்கால நிதி குறித்த கேள்விக்கு:

மக்கள் அறிவாளிகள். மக்களிடம் உண்மையை பேச வேண்டும், இரண்டு மாதத்திற்கு முன்பே ஏன் கொடுக்க வேண்டும், கொடுக்க என்ன உரிமை உள்ளது. வாக்கு வங்கிக்காக அரசு கஜானாவில் உள்ள பணத்தை தன்னுடைய தேவைக்காக கொடுப்பதை ஏற்க முடியாது

இந்த ஆண்டு தான் கோடை வந்ததா? கடந்த ஆண்டுகளில் கோடை வரவில்லையா? கடந்தாண்டு கொடுத்திருந்தால் கேட்டுருக்க மாட்டோம், கடந்தாண்டு பொங்கல் நிதி கொடுத்திருந்தால் கேட்டிருக்க மாட்டோம். தேர்தலை முன்வைத்து ஸ்டாலின் ஆடுகிற நாடகம் இது, மக்கள் ஏமாற மாட்டார்கள் என பேசினார்.

குலவிளக்கு திட்டத்தில் மகளிருக்கு மாதம் 2,000 வழங்கப்படும் என்று அறிவித்த பிறகு தோல்வி பயத்தால் திமுக அரசு தற்போது அறிவித்துள்ளது என எடப்பாடி பழனிச்சாமி அறிக்கை வெளியிட்டது தொடர்பான கேள்விக்கு பதில் அளித்த முனுசாமி.. நாங்கள் முதலாவதாக 2,000 ரூபாய் வழங்குவோம் என சொன்ன வாக்குறுதி மக்களை சென்றடைந்தது என்பதால், அவருக்கு பயம் வந்துவிட்டது. அதிமுக தேர்தல் வாக்குறுதியால் நமக்கு பாதகம் ஏற்படும் என எண்ணி, தேர்தல் வாக்குறுதியில் அறிவிக்காமல் தற்போது அறிவித்துள்ளார் என்றார்.

தொடர்ந்து தவெக தலைவர் விஜய் தன்னுடைய அரசியல் வருகையின் காரணமாகவே 5 ஆயிரம் வழங்கப்பட்டுள்ளது என தெரிவித்ததற்கு பதில் அளித்த முனுசாமி தவெக தலைவர் விஜய் தன்னைத்தானே புகழ்ந்து கொள்கிறார். அவருக்கு எவ்வளவு உயரம் உள்ளது, மக்கள் செல்வாக்கு எவ்வளவு உள்ளது தெரியாமல், நான்கு சுவற்றுக்குள்  உக்கார்ந்து சில அறிவு ஜீவீகளை வைத்துக்கொண்டு, பணத்தை வைத்துக்கொண்டு வாய்ப்பு கிடைக்காத என அலைபவர்களை வைத்துக்கொண்டு பிதற்றிக்கொண்டிருக்கிறார். அவரை எல்லாம் நாம் கண்டுகொள்ள வேண்டாம் என அதிமுக துணை பொது செயலாளர் கே.பி.முனுசாமி தெரிவித்துள்ளாா்.

அம்பேத்கர் நூல் வெளியீட்டு விழாவில் திருமாவளவன் கலந்து கொண்டிருக்க வேண்டும் – முன்னாள் அமைச்சர் கே.பி.முனுசாமி

 

MUST READ