HomeBreaking Newsதமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்குலைவு: முதல்வர் ஜோசப் விஜய் என்ன செய்கிறார்? - பாஜக மாநில...

தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்குலைவு: முதல்வர் ஜோசப் விஜய் என்ன செய்கிறார்? – பாஜக மாநில தலைவர் நைனார் நாகேந்திரன் சாடல்!

-

- Advertisement -

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்தில் பாரதிய ஜனதா கட்சியின் மாநிலத் தலைவர் நைனார் நாகேந்திரன் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். முன்னதாக, ஷியாமா பிரசாத் முகர்ஜியின் பிறந்தநாளை முன்னிட்டு, அங்குள்ள பாஜக கட்சி அலுவலகத்தில் வைக்கப்பட்டிருந்த அவரது புகைப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்திய அவர், தொண்டர்கள் மத்தியில் உரையாற்றினார்.
நைனார் நாகேந்திரன்

அதனைத் தொடர்ந்து செய்தியாளர்கள் எழுப்பிய பல்வேறு கேள்விகளுக்கு அவர் அளித்த அதிரடி பதில்கள் வருமாறு:
தவெக-வின் குதிரை பேரப் புகார் குறித்த கேள்விக்கு:
​”தவெக (தமிழக வெற்றிக் கழகம்) சட்டமன்ற உறுப்பினரை விலைக்கு வாங்க முயற்சி நடப்பதாகக் கூறப்படும் புகாரில் எந்த அளவுக்கு உண்மை இருக்கிறது என்று எனக்குத் தெரியவில்லை. ஆனால், தவெக ஆட்சிக்கு வருவதற்கு முன்பாகவே, சட்டமன்ற உறுப்பினர் காமராஜைக் கடத்திச் சென்று, பொதுச் செயலாளரிடம் கையெழுத்து வாங்கப்பட்டது.

we-r-hiring

அதற்கு இந்த தவெக அரசு என்ன நடவடிக்கை எடுத்தது?
​தொடர்ந்து அதிமுக சட்டமன்ற உறுப்பினர்களும், முன்னாள் அமைச்சர்களும் தவெக பக்கம் சென்று கொண்டிருக்கிறார்கள். இது குதிரை பேரமா, இல்லை இரண்டும் சேர்ந்த குதிரை பேரமா என்பதை இந்த நாட்டு மக்கள் கவனித்துக் கொண்டுதான் இருக்கிறார்கள். பழைய திமுக ஆட்சிக்கும், தற்போதைய தவெக ஆட்சிக்கும் எந்தவொரு வேறுபாடும் இல்லை.”

தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்கேடு:
​”தமிழகத்தில் போதைப்பொருள் விற்பனை தொடர்ந்து தடையின்றி நடைபெற்று வருகிறது. சட்டம் ஒழுங்கு முற்றிலும் சீர்குலைந்துள்ளது. 150-க்கும் மேற்பட்ட பாலியல் வன்கொடுமை சம்பவங்களும், 75-க்கும் மேற்பட்ட படுகொலைகளும் நடந்துள்ளன. தினம் தினம் கொலைகள் அரங்கேறி வருகின்றன. ஒரே நாளில் 17 பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் நடக்கும் அவலநிலை உள்ளது.
​நான் கேட்பதெல்லாம் ஒன்றே ஒன்றுதான், தமிழக முதல்வர் ஜோசப் விஜய் அவர்கள் என்ன செய்து கொண்டிருக்கிறார்? மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு, குதிரை பேரம் நடத்தி ஆட்சியைத் தக்கவைக்க நினைக்கும் நீங்கள், மக்களுக்கு என்ன செய்யப் போகிறீர்கள் என்பதுதான் பாஜகவின் கேள்வி.”

​கரூர் சம்பவம் மற்றும் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா பேச்சு குறித்து:
​”12 மணிக்கு வர வேண்டியவர் இரவு 7 மணிக்கு வந்துள்ளார். கரூர் சம்பவத்திற்கு முதல்வர் ஜோசப் விஜய்யும் ஒரு காரணமாக இருப்பார் என்றே தோன்றுகிறது. சம்பவம் நடந்தவுடனேயே அவர் சென்னைக்கு ஓடிவிட்டார். ஒரு தலைவராக இருந்துகொண்டு மக்களைக் காப்பாற்றி, அவர்களுக்கான நீதியைக் கேட்டிருக்க வேண்டும்; ஆனால் அவர் அதைச் செய்யவில்லை.”

மதுரையில் ஆளுநர் ஆய்வு மற்றும் ஆளும் கட்சியின் விமர்சனம் குறித்து:
​”அதிமுக ஆட்சிக்காலத்தில் அன்றைக்கு எதிர்க்கட்சித் தலைவராக இருந்த மு.க.ஸ்டாலின், சட்டமன்றத்தில் சட்டையைக் கிழித்துக்கொண்டு வெளியே வந்து, ஆளுநரைத் தேடிச் சென்று மனு அளித்தார். ஆளும் கட்சி தயாரித்துக் கொடுக்கும் உரையைத்தான் ஆளுநர் படிக்க வேண்டும் என்ற விதிமுறைப்படி, தவெக அரசு எழுதிக் கொடுத்த உரையை ஆளுநர் அப்படியே வாசித்தார். ஆளுநர் எல்லா வகையிலும் அரசுக்கு ஒத்துப்போகிறார்.

​இந்திய அரசியலமைப்புச் சட்டம் 167-ன் படி, மத்திய அரசின் அங்கமான ஆளுநருக்கு அரசு நிறுவனங்களை ஆய்வு செய்ய முழு அதிகாரம் விதியில் உள்ளது. எனவே, ஆளுநர் ஆய்வுக்குச் செல்லக் கூடாது என்பதில் எந்த அர்த்தமும் இல்லை.
​பாலியல் வன்கொடுமைகள், கஞ்சா விற்பனை, கொலைகள் மற்றும் சட்டம் ஒழுங்கு சீர்கேடு போன்ற முக்கியப் பிரச்சினைகளைப் பற்றிப் பேசாமல், அந்தக் காலம் தொட்டு இந்த காலம் வரை ஆளுநரை வைத்தே அரசியல் செய்து வருகிறார்கள். தமிழக முதல்வர் ஜோசப் விஜய் அவர்களும், எதிர்க்கட்சிகளும் இன்னும் தங்களின் பழைய போக்கையே கடைப்பிடிக்கக் கூடாது. 60 ஆண்டுகளுக்குப் பிறகு தற்போது ஒரு மாற்றம் வந்துள்ளது. அரசியல்வாதிகள் தங்கள் மனதில் மாற்றத்தை ஏற்படுத்திக்கொண்டு, மக்களுக்கு நல்லது செய்ய முன்வர வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.”

MUST READ