Homeசெய்திகள்அரசியல்திமுக கூட்டணியில் விசிக இல்லை; தவெக கூட்டணி அமைந்தால் அதில் விசிக இடம்பெறும் - தொல்.திருமாவளவன்...

திமுக கூட்டணியில் விசிக இல்லை; தவெக கூட்டணி அமைந்தால் அதில் விசிக இடம்பெறும் – தொல்.திருமாவளவன் அதிரடி பேச்சு!

-

- Advertisement -

“திமுக கூட்டணியில் விசிக இல்லை என்பதை திமுகவே அறிவித்துவிட்டது; எதிர்காலத்தில் தவெக கூட்டணி அமைந்தால் அதில் விசிக நிச்சயமாக இடம்பெறும்” என்று விசிக விருது வழங்கும் விழாவில் அக்கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் அதிரடியாகத் தெரிவித்துள்ளாா்.திமுக கூட்டணியில் விசிக இல்லை;தவெக கூட்டணி அமைந்தால் அதில் விசிக இடம்பெறும் - தொல்.திருமாவளவன் அதிரடி பேச்சு!

சென்னையில் நடைபெற்ற விடுதலை சிறுத்தைகள் கட்சியின் (விசிக) 2026-ஆம் ஆண்டுக்கான விருதுகள் வழங்கும் விழாவில், தமிழக அரசியல் சூழல் குறித்தும், திமுக உடனான கூட்டணி முறிவு மற்றும் தமிழக வெற்றிக் கழகத்துடனான (தவெக) எதிர்கால கூட்டணி குறித்தும் விசிக தலைவர் தொல்.திருமாவளவன் மற்றும் இடதுசாரி தலைவர்கள் மிக முக்கிய அரசியல் கருத்துக்களைப் பகிர்ந்துள்ளனர்.

we-r-hiring

​விசிக 2026 விருதுகள் பட்டியல்
​காமராஜர் அரங்கத்தில் நடைபெற்ற இந்த விழாவில், தலித் அல்லாத முற்போக்கு ஆளுமைகளை ஊக்குவிக்கும் வகையில் விசிக தலைவர் தொல்.திருமாவளவன் பின்வரும் விருதுகளை வழங்கினார்.

  • ​அம்பேத்கர் சுடர் விருது: முனைவர் கே. சொக்கலிங்கம் (முன்னாள் துணை வேந்தர்)
  • ​மார்க்ஸ் மாமணி விருது: மு. வீரபாண்டியன் (இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர்)
  • ​பெரியார் ஒளி விருது: ஹென்றி டிபேன் (மனித உரிமை போராளி)
  • ​காமராசர் கதிர் விருது: அடிகளார் பால.பிரஜாபதி
  • ​அயோத்திதாசர் ஆதவன் விருது: ரூத்மனோரமா (சமூக செயற்பாட்டாளர்)
  • ​செம்மொழி ஞாயிறு விருது: பொ.வேலுசாமி (தமிழறிஞர்)
  • ​காயிதே மில்லத் பிறை விருது: முகமது முனீர் (ஐ.என்.டி.ஜே மாநில துணை தலைவர்)

​’விசிகவோடு கூட்டணி இல்லை என்பதை அறிவித்தவர் மு.க.ஸ்டாலின்தான்’ என தொல்.திருமாவளவன் பேச்சு, ​விழாவில் இறுதியாகப் பேசிய விசிக தலைவர் தொல்.திருமாவளவன், தனது அரசியல் முடிவுகள் மற்றும் விமர்சனங்களுக்கு விரிவான விளக்கமளித்தார்.  “திமுக கூட்டணியில் விசிக இல்லை என்பதை திமுகவே அறிவித்துவிட்டது, விசிக இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை. விசிகவில் இருந்து விலகிய ஒருவரைத் தங்கள் கட்சியில் சேர்த்தபோதே, விசிகவோடு தங்களுக்கு எந்த உறவும் இல்லை என்பதை திமுக தலைமை காட்டிவிட்டது. விசிகவோடு கூட்டணி இல்லை என்பதை அறிவித்தவர் முன்னாள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்தான்.”  “அமைச்சரவையில் விசிக தொடர்கிறது, தோழமை கூட்டத்திலும் பங்கேற்றோம். தவெக கூட்டணி குறித்து இன்னும் இறுதி முடிவுகள் எடுக்கப்படவில்லை என்றாலும், எதிர்காலத்தில் தவெக கூட்டணி அமைந்தால் அதில் விசிக இடம்பெறும் என்பதில் ஐயமில்லை.”

“ஆட்சியிலும் அதிகாரத்திலும் பங்கு என விஜய் அழைத்தபோதும், தேர்தலுக்கு முன்பு தவெக நிர்வாகி இறுதி முடிவை கேட்டபோதும் நான் திமுக கூட்டணிக்கு உண்மையாகவே இருந்தேன். திமுகவிற்கு விசிக எந்த துரோகமும் இழைக்கவில்லை. தவெகவை ஆதரிக்கும் இறுதி முடிவுக்கு முன்பு கூட திமுக தலைமையிடம் தெரிவித்தே முடிவெடுத்தோம்.” “துணை முதல்வர் பதவிக்காகவோ, சோபாவில் பணம் வாங்கியோ நான் இந்த முடிவை எடுக்கவில்லை. பல பெரிய அரசியல் வாய்ப்புகளை நான் நிராகரித்துள்ளேன். விசிக என்பது வெறும் தேர்தல் இயக்கம் அல்ல, அது சமூக மாற்றத்திற்கான இயக்கம் என்பதால் வெற்றி தோல்விகள் எங்களை பாதிக்காது.”திமுக கூட்டணியில் விசிக இல்லை;தவெக கூட்டணி அமைந்தால் அதில் விசிக இடம்பெறும் - தொல்.திருமாவளவன் அதிரடி பேச்சு!

​”அமைச்சரை விட விசிககாரனாக திமிராக இருப்பதே முக்கியம்” – அமைச்சர் வன்னி அரசு
​நிகழ்வில் பேசிய விசிக துணை பொதுச்செயலாளரும் அமைச்சருமான வன்னி அரசு, ​”2026 ஆம் ஆண்டு ஆட்சியிலும் பங்கு, அதிகாரத்திலும் பங்கு என்ற திருமாவளவனின் முழக்கம் தற்போது நனவாகியுள்ளது. விசிகவின்றி தமிழகத்தில் எந்த அரசியலும் இல்லை. சாதி ஒழிப்புக்களமா, தமிழ் தேசியமா, தமிழ்நாட்டின் இறையாண்மையா அல்லது அமைச்சர் பதவியா என்று கேட்டால், எங்களுக்கு சாதி ஒழிப்பும் தமிழ்நாட்டின் இறையாண்மையும்தான் முக்கியம். அமைச்சராகவோ, எம்.எல்.ஏ-வாகவோ இருப்பதை விட விசிககாரனாக திமிராக இருப்பதே பெருமை” என்று பேசினார்.

​”ஆளுநர் ஆட்சியை தடுக்கவே தவெகவிற்கு ஆதரவு” – சிபிஐ மு.வீரபாண்டியன் விளக்கம்
​தமிழக அரசியல் சூழல் மற்றும் தவெக அரசை ஆதரிப்பது குறித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் மு.வீரபாண்டியன் பேசுகையில், ​”திமுக, அதிமுக ஆகிய ஜனநாயக இயக்கங்கள் இணைவதில் எந்தப் பிரச்சினையும் இல்லை. ஆனால், இங்கு ஆளுநர் ஆட்சிக்கான காய்நகர்த்தல் நடந்ததால், ஜனநாயகம் காக்கப்பட வேண்டும் என்ற நோக்கில் தவெக-வை ஆதரித்தோம். வரலாற்றுப் பழி நமக்கு வந்துவிடக் கூடாது என்பதற்காக இடதுசாரிகளும் விசிகவும் இந்த முடிவை எடுத்தோம்.” ​”மதச்சார்பின்மை கொள்கை ஒன்றே எங்களின் நிபந்தனை. ஆர்.எஸ்.எஸ் மற்றும் பாஜக தான் எங்களின் உண்மையான அரசியல் பகை. தவெக அரசிடம் நாங்கள் எதிர்பார்ப்பது மதச்சார்பின்மை மற்றும் ஒடுக்கப்பட்டவர்களின் உரிமைகளைத்தான். தவெக அரசு 5 ஆண்டுகள் நீடிக்கட்டும். ஆனால், வெற்றி பெற்றவர்கள் தங்களின் உடல்மொழியால் கூட தோல்வியடைந்தவர்களை எள்ளல் செய்யக் கூடாது; அது ஜனநாயகத்திற்கு பேராபத்து” என்று குறிப்பிட்டார். ​இந்நிகழ்வில் விசிக பொதுச் செயலாளர்கள் ரவிக்குமார், சிந்தனை செல்வன், பொருளாளர் எஸ்.எஸ்.பாலாஜி மற்றும் தேர்தலில் சீட் மறுக்கப்பட்டதாக செய்திகளில் அடிபட்ட முதன்மை செயலாளர் ஆளூர் ஷாநவாஸ் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர்.

பதவி சுகத்திற்காகவும், பணத்தை காப்பாற்றவும் மாற்று கட்சிக்கு சென்றுள்ளனர்: எடப்பாடி பழனிசாமி அதிரடி பேச்சு!

MUST READ