HomeBreaking Newsத.வெ.க. ஆட்சிக்கு வெளியிலிருந்து ஆதரவு தொடரும்: சிபிஎம் மாநிலச் செயலாளர் பெ. சண்முகம் அதிரடி பேட்டி!

த.வெ.க. ஆட்சிக்கு வெளியிலிருந்து ஆதரவு தொடரும்: சிபிஎம் மாநிலச் செயலாளர் பெ. சண்முகம் அதிரடி பேட்டி!

-

- Advertisement -

மதுரையில் செய்தியாளர்களைச் சந்தித்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் (CPIM) மாநிலச் செயலாளர் பெ. சண்முகம், தமிழக அரசியல் சூழல், ஆளுநரின் ஆய்வுக்கூட்டம் மற்றும் த.வெ.க-விற்கான ஆதரவு குறித்துப் பல்வேறு முக்கியக் கருத்துகளைப் பகிர்ந்துள்ளார்.

பெ. சண்முகம்

we-r-hiring

த.வெ.க. ஆட்சிக்கு வெளியிலிருந்து ஆதரவு!
செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய பெ. சண்முகம், தமிழக வெற்றிக் கழகத்தின் (த.வெ.க.) ஆட்சிக்கு வெளியிலிருந்து கம்யூனிஸ்ட் கட்சி அளிக்கும் ஆதரவு தொடர்ந்து நீடிக்கும் என்று உறுதிபடத் தெரிவித்தார். “இதில் எந்தவிதமான மாற்றமும் கிடையாது” என்றும் அவர் தெளிவுபடுத்தினார்.

“நாங்கள் தனி அணி” – இடைத்தேர்தல் நிலைப்பாடு:
வரவிருக்கும் இடைத்தேர்தல் குறித்துப் பேசிய அவர், “இடைத்தேர்தலைப் பொறுத்தவரை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி இதுவரை எந்த முடிவும் எடுக்கவில்லை. நாங்கள் அந்த அணியிலோ அல்லது இந்த அணியிலோ கிடையாது. நாங்கள் ‘இடதுசாரி அணி’ என்ற அடிப்படையில் தனித்தே செயல்படுகிறோம்” என்றார்.

ஆளுநரின் ஆய்வுக்கூட்டத்திற்கு கண்டனம்:
தமிழக ஆளுநரின் செயல்பாடுகள் குறித்துப் பேசிய பெ. சண்முகம், ஆளுநர் தனது அரசியல் சாசன அதிகாரங்களை மீறி ஆய்வுக்கூட்டம் நடத்தியது கடும் கண்டனத்திற்குரியது என்று சாடினார்.

“ஏற்கனவே இருந்த முன்னாள் ஆளுநர் ஆர்.என். ரவி இத்தகைய அணுகுமுறைகளை மேற்கொண்டபோதெல்லாம் தமிழகம் ஒட்டுமொத்தமாகக் கண்டித்திருக்கிறது. ஆகவே, இப்போதுள்ள ஆளுநரும் அதே அணுகுமுறையைத் தொடர்ந்து கடைபிடிப்பது என்பது எவ்வளவுக்கும் பொருத்தமானது அல்ல” என்று அவர் குறிப்பிட்டார்.

கரூர் விவகாரம் குறித்து விமர்சனம்:
மேலும், கரூர் விவகாரம் தொடர்பாகப் பேசிய அவர், “மத்திய புலனாய்வுத் துறையின் (CBI) விசாரணை போய்க்கொண்டிருக்கும் போதே, அமைச்சர் ஆதவ் அர்ஜுனா இது குறித்துப் பல்வேறு கருத்துக்களைத் தெரிவிப்பது ஏற்புடையதல்ல” என்று சுட்டிக்காட்டினார்.

MUST READ