spot_imgspot_img
Homeசெய்திகள்அரசியல்‘தமிழ்நாடு தலைகுனியாது’ பரப்புரை…விறுவிறுப்பாக நடந்து வருகிறது…

‘தமிழ்நாடு தலைகுனியாது’ பரப்புரை…விறுவிறுப்பாக நடந்து வருகிறது…

-

- Advertisement -

தமிழகம் முழுவதும் திமுகவின் ‘தமிழ்நாடு தலைகுனியாது’ பரப்புரை விறுவிறுப்பாக நடந்து வருகிறது.‘தமிழ்நாடு தலைகுனியாது’ பரப்புரை…விறுவிறுப்பாக நடந்து வருகிறது…தமிழ்நாடு தலைகுனியாது என்ற தலைப்பில் திமுகவின் பிரச்சாரக் கூட்டங்கள் விறுவிறுப்பாக தொடங்கி நடந்துக் கொண்டு வருகின்றன. பிப்ரவரி 1 ஆம் தேதி தொடங்கிய திமுகவின் பிரச்சாரக் கூட்டங்கள் பிப்ரவரி 28 ஆம் தேதி வரை தமிழ்நாட்டின் 234 சட்டமன்றத் தொகுதிகளிலும் நடைபெறுகின்றன. திமுகவின் தலைமைக் கழகம் நியமித்துள்ள 22 நட்சத்திரப் பேச்சாளர்கள் தமிழ்நாடு முழுவதும் பயணித்துப் பிரசாரங்களை மேற்கொண்டு வருகின்றனர்.

பொதுக்கூட்டங்கள், பகுதி முக்கிய பிரமுகர்களுடன் கலந்துரையாடல் என்று கடந்த 3 நாட்களாக இந்தப் பிரசாரம் விறுவிறுப்பாக நடந்துக் கொண்டிருக்கிறது. இதுவரை சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், திண்டுக்கல், சேலம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் உள்ள சட்டமன்றத் தொகுதிகளில் இந்தப் பரப்புரை நடைபெற்று வருகிறது. திருவள்ளூர், ராயபுரம், நிலக்கோட்டை, புதுக்கோட்டை, திருச்செந்தூர் உள்ளிட்ட 23 தொகுதிகளில் இந்தப் பிரசாரக் கூட்டங்கள் நடந்துள்ளன. இதில், திமுகவின் நட்சத்திரப் பேச்சாளர்களான அமைச்சர்கள் கோவி செழியன், ராஜ கண்ணப்பன், எம்.பி. தமிழச்சி தங்கபாண்டியன் மற்றும் பொன். முத்துராமலிங்கம், திண்டுக்கல் லியோனி, எம்.எம். அப்துல்லா, இனிகோ இருதயராஜ் உள்ளிட்ட மேலும் சிலரும் பொதுக்கூட்டங்களில் சிறப்புரை ஆற்றி வருகிறார்கள்.

we-r-hiring

இவற்றில் 50,000 க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்துகொண்டுள்ளார்கள். இதுவரை 2000 க்கும் மேற்பட்ட முக்கிய பிரமுகர்களுடன் திமுகவின் நட்சத்திரப் பேச்சாளர்களுடன் கலந்துரையாடியுள்ளனா். திமுகவின் தமிழ்நாடு தலைகுனியாது பரப்புரை மிகத் தீவிரமாக நடந்து வருகிறது. இந்த பரப்புரையின் போது திமுகவினர், மக்களுடன் இருந்து மக்களோடு வாழ்ந்து மக்களுடைய வீடுகளிலேயே உணவருந்தி அவர்களுக்கு செய்திருக்கின்ற திட்டங்களை விளக்கமாக சொல்லி வருகின்றனர். ஒன்றிய அரசின் வஞ்சகத்தையும் எடுத்துச் சொல்லி வருகின்றனர். திமுகவினரின் இந்த பிரசாரம் தமிழகம் முழுவதும் வெகுவாக கவர்ந்து வருகிறது.

தமிழ்நாட்டின் கல்வி வளர்ச்சியிலும், மாணவர் நலனிலும் மிகுந்த அக்கறை காட்டியவர்‌ ச.சீ. இராசகோபாலன் – முதல்வர்

MUST READ