spot_imgspot_img
Homeசெய்திகள்சினிமாஆர்.ஜே. பாலாஜி இயக்கத்தில் சூர்யா.... 'கருப்பு' ஃபர்ஸ்ட் சிங்கிள் லோடிங்!

ஆர்.ஜே. பாலாஜி இயக்கத்தில் சூர்யா…. ‘கருப்பு’ ஃபர்ஸ்ட் சிங்கிள் லோடிங்!

-

- Advertisement -

ஆர்.ஜே. பாலாஜி இயக்கத்தில் சூர்யா நடிக்கும் கருப்பு படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கள் குறித்த அப்டேட் வெளியாகியுள்ளது.ஆர்.ஜே. பாலாஜி இயக்கத்தில் சூர்யா.... 'கருப்பு' ஃபர்ஸ்ட் சிங்கிள் லோடிங்!தமிழ் சினிமாவில் நடிகராகவும், இயக்குனராகவும் வலம் வருபவர் ஆர்.ஜே. பாலாஜி. இவருடைய இயக்கத்தில் நயன்தாரா நடித்திருந்த ‘மூக்குத்தி அம்மன்’ திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் ஏகபோக வரவேற்பை பெற்றது. எனவே அதைத்தொடர்ந்து இவர் இயக்கி வரும் கருப்பு படத்தின் மீதான எதிர்பார்ப்பும் மிகப்பெரிய அளவில் இருந்து வருகிறது. இந்த படத்தில் சூர்யா, திரிஷா, நட்டி நடராஜ், யோகி பாபு, ஷிவதா, சுவாசிகா மற்றும் பலர் நடிக்கின்றனர். ஆர்.ஜே. பாலாஜி இயக்கத்தில் சூர்யா.... 'கருப்பு' ஃபர்ஸ்ட் சிங்கிள் லோடிங்!ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரிக்க சாய் அபியங்கர் இதற்கு இசை அமைக்கிறார். ஜி.கே. விஷ்ணு இதன் ஒளிப்பதிவு பணிகளை கவனிக்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு ஏற்கனவே நிறைவடைந்த நிலையில் படமானது எப்போது திரைக்கு வரும்? என ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்புடன் காத்துக் கொண்டிருக்கின்றனர். ஆனால் இந்த படம் அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் தமிழ் புத்தாண்டு தினத்தை முன்னிட்டு வெளியாகும் என சமீபத்திய தகவல்கள் தெரிவிக்கிறது.ஆர்.ஜே. பாலாஜி இயக்கத்தில் சூர்யா.... 'கருப்பு' ஃபர்ஸ்ட் சிங்கிள் லோடிங்! இதற்கிடையில் இந்த படத்தின் டீசரை படக்குழு வெளியிட்டிருந்தது. இந்நிலையில் இந்த படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் குறித்த அப்டேட் கிடைத்திருக்கிறது. அதன்படி இசையமைப்பாளர் சாய் அபியங்கர் இப்படத்தின் ரீ- ரெகார்டிங் பணிகளை தொடங்கிவிட்டதாக தகவல் கிடைத்துள்ளது. எனவே விரைவில் ‘கருப்பு’ படத்தின் முதல் பாடல் வெளியாகும் என சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இந்த தகவல் ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சியை தந்துள்ளது.

MUST READ