இந்திய தொலைதொடர்பு துறையில் மிகக் குறைந்த விலையில் இன்டர்நெட் மற்றும் காலிங் சேவைகளை வழங்கி சுமார் 50 கோடிக்கும் அதிகமான வாடிக்கையாளர்களைப் பெற்றுள்ள ஜியோ (Jio) நிறுவனம், தற்போது தனது பயனர்களுக்குப் பெரும் அதிர்ச்சியை அளித்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
நீட்டிக்கப்பட்ட கால அவகாசத்தில் மாற்றமா?
இந்தியாவில் வழக்கமாகத் தொலைதொடர்பு நிறுவனங்கள் ரீசார்ஜ் திட்டம் முடிவடைந்ததும், குறிப்பிட்ட காலத்திற்குள் புதிய ரீசார்ஜ் செய்யாவிட்டால் இன்கமிங் அழைப்புகளை (Incoming Calls) துண்டித்துவிடும். ஆனால், மற்ற நிறுவனங்களைக் காட்டிலும் ஜியோ நிறுவனம் தனது பயனர்களுக்கு சற்று கூடுதல் கால இடைவெளியை வழங்கி வந்தது. இதனால், தங்களது இரண்டாவது சிம் கார்டுகளைப் பயன்படுத்துபவர்கள் பல வார இடைவெளியில் கூட ரீசார்ஜ் செய்து வந்தனர்.

புதிய எச்சரிக்கை மெசேஜ்களால் குழப்பம்
இந்நிலையில், தற்போது ஜியோ நிறுவனம் தனது சில பயனர்களுக்கு புதிய எச்சரிக்கை குறுஞ்செய்திகளை (SMS) அனுப்பி வருவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. அந்தச் செய்திகளில், “உங்களின் ஜியோ ரீசார்ஜ் திட்டம் காலாவதியாகிவிட்டது; இன்கமிங் அழைப்புகள் எந்த நேரத்திலும் நிறுத்தப்படலாம்; எனவே தொடர்ந்து இணைப்பில் இருக்க இப்போதே ரீசார்ஜ் செய்யுங்கள்” என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.
இந்த குறுஞ்செய்தியைக் கண்ட பயனர்கள், ரீசார்ஜ் திட்டம் முடிந்த மறுநாளே இன்கமிங் கால் துண்டிக்கப்படுமா அல்லது இதற்கென புதிய காலவரம்பு நிர்ணயிக்கப்பட்டுள்ளதா என்ற குழப்பத்துடன் சமூக வலைதளங்களில் விவாதித்து வருகின்றனர்.
அதிகாரப்பூர்வ அறிவிப்புக்காகக் காத்திருக்கும் பயனர்கள்
இதுவரை ஜியோ நிறுவனம் தரப்பில் இதற்கான முறையான காலக்கெடு அல்லது புதிய விதிமுறைகள் குறித்த முழுமையான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்படவில்லை. எனவே, பயனர்கள் தாங்கள் பயன்படுத்தும் சிம் கார்டுகளின் ரீசார்ஜ் செல்லுபடியாகும் காலத்தை (Validity) முன்கூட்டியே சரிபார்த்துக் கொள்வது அவசியமாகிறது.
இந்திய கல்வி ஆய்வாளர்களுக்கு 12 மாதங்கள் இலவச ChatGPT Plus! – ஓபன்ஏஐ அதிரடி அறிவிப்பு!
