தாலிபான்களால் தயாரிக்கப்பட்ட முதல் சூப்பர் கார் வெளியிடப்பட்டுள்ளது.

தாலிபான்களால் தயாரிக்கபட்ட முதல் சூப்பர் காரை வெளியிட்டார் தாலிபான் உயர்கல்வித்துறை அமைச்சர் அப்துல் பாக்கி ஹக்கானி. ஆப்கானிஸ்தான் தாலிபான் வசம் சென்ற பிறகு தாலிபான்கள் அந்நாட்டில் கடுமையான சட்டங்களை அமல்படுத்தி வரும் வேலையில் பொருளாதார ரீதியில் நாட்டை மற்ற நாடுகளுக்கு இனையாக கொண்டு செல்லும் முயற்சியில் இறங்கியுள்ளனர்.
அந்த வகையில் எண்டோப் எனும் நிறுவனத்தினால் சுமார் 5 ஆண்டுகளாக உருவாக்கபட்ட “மடா 9” எனும் சூப்பர் காரை தாலிபான் அரசு வெளியிட்டது. உலக நாடுகளுக்கு இணையாக ஆப்கானிஸ்தான் பொருளாதாரத்தில் முன்னேறும் என்றும், அதன் தொடக்கமே சூப்பர் கார் தயாரிப்பு என தாலிபான் அரசு தெரிவித்துள்ளது.
Advertisement
