சென்னை கோபாலபுரம் பகுதியில் வீடு வாங்குவதை ஒரு கனவாகவே தமிழ் நடிகர்கள் மற்றும் நடிகைகள் கொண்டுள்ளனர்.
அந்த வரிசையில் ரஜினிகாந்த், ஜெயலலிதா, தனுஷ், நயன்தாரா விக்னேஷ் தம்பதி, மற்றும் ஜெயம் ரவி இவர்களை தொடர்ந்து இப்பொழுது நடிகர் சந்தானமும் ஏலத்திற்கு வந்த பழைய வீடு ஒன்றை பல கோடி ரூபாய் கொடுத்து வாங்கியுள்ளார்.

தமிழ் சினிமாவில் தனக்கென மிகப் பெரிய இடத்தை பிடித்திருப்பவர் நடிகர் சந்தானம். தனியார் தொலைக்காட்சியில் தொகுப்பாளராக அறிமுகமாகி பல போராட்டங்களை சந்தித்து தன் திறமையால் சில டிவி தொடர்களில் நடிக்க வாய்ப்பை பெற்றார்.
இவர் நடித்த முதல் சீரியல் ராதிகாவின் அண்ணாமலை.
பிறகு நடிகர் சிம்பு கதாநாயகனாக அறிமுகமான காதல் அழிவதில்லை திரைப்படத்தில் சிம்புவின் நண்பர்களில் ஒருவராக திரைப்படத்தில் அறிமுகமானார்.
அதைத் தொடர்ந்து 2004 ஆம் ஆண்டு அதே சிம்பு கூட்டணியில் வெளியான மன்மதன் படத்தில் தன்னை ஒரு காமெடியனாக வெளி காட்டினார்.
காமெடி நடிகராக கொடிக்கட்டி பறந்தபோது பல கோடி ரூபாய் பணத்தை சேமித்து வைத்தவர். பிறகு, ஹீரோவாக மாறிய பிறகு அதிக வருமானம் குவித்து வருவதாலும் போயஸ் கார்டலின் வீடு வாங்க வேண்டும் என்ற தனது பல வருட லட்சியம் நிறைவேறி உள்ளதாகவும் தனது கனவு நினைவாகி உள்ளதாவும் சொல்லி தன் நெருங்கிய நண்பர்களுக்கு பாட்டி வைத்து கொண்டாடி இருக்கிறார் நடிகர் சந்தானம்.