ஆபாச மெசேஜ் அனுப்பிய இளைஞரை வெளுத்து வாங்கிய துணையால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
தமிழ் திரைப்படத்துறையில் துணை நடிகையாக அஸ்வினி தங்கராஜ் பணியாற்றி வருகிறார். இவர் இறவுக்கு ஆயிரம் கண்கள் (2018), நாச்சியார் (2018), மழை பிடிக்காத மனிதன் (2024) மற்றும் கூட்டாளி (2018) ஆகிய படங்களில் நடித்துள்ளார். சமூகத்தில் பெண்கள் எதிர்கொள்ளும் தாக்குதல்களை வெளிக்கொண்டு வரும் நோக்கத்துடன் செயல்பட்டவர் தான் துணை நடிகை ஸ்ரீ அஸ்வினி. இவர் இன்ஸ்டாகிராம் மூலமாகவும், சமூக ஊடகங்களின் செயல்பாடுகளினாலும் அறியப்படுகிறார்.
இந்நிலையில், அண்மையில் அஸ்வினி “கேட்ட வாா்த்தை, கெட்ட வாா்த்தை“ என்ற Short Flim-ஐ இயக்கி வெளியிட்டாா். இந்த Short Flimயை பற்றி மணிகண்டன் என்பவா் இன்ஸ்டாவில் ஆபாசமாக மெசேஜ் அனுப்பி வந்துள்ளாா். தொடா்ந்து இதுபோன்று ஆபாச மெசேஜ்களை அனுப்பிய இந்த நபரால் கோபமடைந்த அஸ்வினி அவரை தேடும் முயற்சியில் ஈடுபட்டாா். பின்னா் அவரைக் கண்டுபிடித்து நடு ரோட்டில் சரமாாாியாக அடித்து உதைத்த காட்சி சோஷியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. மேலும் சினிமா துணை நடிகையான அஸ்வினி மணிகண்டனை போலீசில் ஒப்படைத்துள்ளாா்.
ஜனநாயகன் படம் மறுதணிக்கைக்கு ஏன்? – சென்னை உயர்நீதிமன்ற தீர்ப்பு விவரம்



