Homeசெய்திகள்சினிமாஅப்பாவை நினைத்து மேடையில் கண்கலங்கிய சிவகார்த்திகேயன்...

அப்பாவை நினைத்து மேடையில் கண்கலங்கிய சிவகார்த்திகேயன்…

-

- Advertisement -

எஸ்.கே. புரொடக்ஷன்ஸ் தயாரிக்கும் அடுத்த படத்தின் இயக்குனரை அறிமுகப்படுத்தினாா் சிவகார்த்திகேயன்.அப்பாவை நினைத்து மேடையில் கண்கலங்கிய சிவகார்த்திகேயன்.
நடிகர் சிவகார்த்திகேயன் தயாரித்து சிவகுமார் முருகேசன் இயக்கத்தில் நடிகை ராதிகா நடித்துள்ள தாய்கிழவி படத்தின் “சக்ஸஸ் மீட்,“சென்னையில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் நடைபெற்றது. இதில் சிவகார்த்திகேயன், ராதிகா உள்ளிட்ட படக்குழுவினர் கலந்து கொண்டனர்.

நடிகர் சிவகார்த்திகேயன் பேசும்போது, “தாய் கிழவி படத்திற்கு வரவேற்பு மற்றும் வெற்றி கொடுத்த தமிழக மக்களுக்கு நன்றி என்றார். தனக்குள் இருந்த ரசிகன் தான் தன்னை சினிமாவிற்குள் கூட்டி வந்ததாகவும் தாய்கிழவி படம் தனக்கு குழந்தை மாதிரி என்றும் சிவகார்த்திகேயன் கூறினார். இந்த படம் தனது வாழ்க்கையை ஞாபகப்படுத்தியதற்காக செய்தது என தெரிவித்தார்.

we-r-hiring

தனது அம்மாவும் அக்காவும் தாக பவுனுத்தாயாக தெரிந்தார்கள் என்றும் குடும்ப வரவு செலவுகளை தனது மனைவி பார்க்கிறார்கள் என்றும் கூறிய அவர் எல்லாருக்குமான படம்தான் தாய் கிழவி என்றார். இந்த படத்தை 12 முறை பார்த்துள்ளதாகவும் தாம் நடித்த படத்தையே அத்தனை முறை பார்த்ததில்லை என்றும் சிவகார்த்திகேயன் கூறினார்.

தயாரிப்பு பயணத்தில் நிறைய கற்றுக்கொண்டதாக குறிப்பிட்ட அவர், தனது படங்களிலும் இதனை கடைபிடிக்கப் போவதாக கூறியதுடன் தயாரிப்பாளரின் பணத்தை வீணடிக்காமல் படம் எடுக்க முடியும் என்றும் தெரிவித்தார். இப்படி பேசிக் கெண்டிருக்கும் போதே, தனது அப்பாவை நினைத்து மேடையிலேயே சிவகார்த்திகேயன் கண்கலங்கினார்.

சேயோன் படப்பிடிப்பு அடுத்த மாதம் தொடங்கும் என்றும் இந்த படத்தின் லாபம் அழகான விஷயங்களுக்கு பயன்படும் என்றும் கூறினார். எஸ்.கே. புரொடக்ஷன்ஸ் தயாரிக்கும் 10-வது படத்தின் இயக்குனர் அம்மாமுத்து சூர்யா என்று தமது அடுத்த படத்தின் இயக்குனரை சிவகார்த்திகேயன் அறிமுகப்படுத்தினார்.

சினிமாவில் யாருக்கும் போட்டியாகவோ யாரையும் தாண்டி செல்லவோ தான் வரவில்லை – சிவகார்த்திகேயன் பேட்டி

MUST READ