Homeசெய்திகள்சினிமாசினிமாவில் எல்லாமே மாறிவிட்டது; ஆனால் இந்த ஒரு கேள்வி மட்டும் மாறவே இல்லை: அரசியலுக்கு வரும்...

சினிமாவில் எல்லாமே மாறிவிட்டது; ஆனால் இந்த ஒரு கேள்வி மட்டும் மாறவே இல்லை: அரசியலுக்கு வரும் எண்ணம் இல்லை – நடிகர் சசிகுமார் பேட்டி! சென்னை:

-

- Advertisement -

ஆண்ட்ரூ லூயிஸ் இயக்கத்தில், நடிகர் சசிகுமார் நடிப்பில் உருவாகியுள்ள ‘வதந்தி 2’ வெப் தொடரின் செய்தியாளர் சந்திப்பு சென்னை எம்.ஆர்.சி. நகரில் உள்ளதனியார் நட்சத்திர விடுதியில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் நடிகர் சசிகுமார், இயக்குநர்கள் புஷ்கர் – காயத்ரி மற்றும் படக்குழுவினர் கலந்துகொண்டு செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினர்.

சசிகுமார்

we-r-hiring

மதுரையைச் சார்ந்தவர்களுக்கும் போலீஸ் கதாபாத்திரம்!

நிகழ்ச்சியில் பேசிய நடிகர் சசிகுமார், இதுவரை தான் சுமார் 30 படங்களில் நடித்துள்ளதாகவும், ஆனால் யாரும் தன்னைத் போலீஸ் கதாபாத்திரத்திற்கு இதுவரை யோசித்ததில்லை என்றும் தெரிவித்தார். இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது:

“மிரட்டலான மதுரை பின்னணிக் கதைகளென்றாலே எங்களை திரையில் ரவுடிகளாகத்தான் காட்டுவார்கள். முதன்முதலில் என்னிடம் வந்து ஒரு போலீஸ் கதாபாத்திரத்தில் நடிக்க வேண்டும் என்று கூறியபோது என்னால் நம்பவே முடியவில்லை. அந்த வார்த்தையைக் கேட்ட பிறகுதான் கதையைக் கேட்கவே ஆரம்பித்தேன். ஒரு நிரபராதியை காப்பாற்றுவதற்காகப் போராடும் நேர்மையான போலீஸ் அதிகாரியின் கதை இது; கேட்டவுடனேயே எனக்கு மிகவும் பிடித்துவிட்டது” என்றார்.

சுவாரஸ்யமான நினைவுகளும் நகைச்சுவையும்

நிகழ்ச்சியில் இயக்குநர்கள் புஷ்கர் – காயத்ரி பேசுகையில், தாங்கள் கல்லூரியில் படித்துக் கொண்டிருந்த காலகட்டத்தில்தான் சசிகுமாரின் புகழ்பெற்ற ‘சுப்பிரமணியபுரம்’ படத்தைப் பார்த்ததாகத் தெரிவித்தனர். அதற்கு உடனடியாகப் பதிலளித்த சசிகுமார், “உங்களுடைய ‘ஓரம் போ’ படத்திற்குப் பிறகுதான் நான் சுப்பிரமணியபுரம் படத்தை எடுத்தேன்” என்று நகைச்சுவையாகக் கூற, அரங்கில் சிரிப்பலை எழுந்தது.

தொடர்ந்து படப்பிடிப்பு அனுபவங்களைப் பகிர்ந்துகொண்ட அவர், காலை 9 மணி முதல் நள்ளிரவு 12 மணி வரை தொடர்ந்து நடைபெற்ற படப்பிடிப்பால், சில நாட்கள் அந்தக் கதாபாத்திரமாகவே வாழ்ந்ததைப் போன்ற உணர்வு ஏற்பட்டதாகக் கூறினார். திரைப்படம் மற்றும் வெப் தொடருக்கான வித்தியாசம் குறித்துப் பேசுகையில், “திரைப்படம் இரண்டு மணி நேரத்தில் முடிந்துவிடும், ஆனால் வெப் தொடர் ஐந்து மணி நேரம் வரை நீளும். இதனால் வேலைப்பளுவும் அதிகமாக இருக்கும் என்பதால், இதைப் பார்த்த பிறகு இன்னும் கொஞ்சம் சம்பளம் அதிகமாகக் கேட்டிருக்கலாமோ என்று தோன்றியது” என்று கலகலப்பாகப் பேசினார். மேலும், ஒரு இயக்குநராகத் படப்பிடிப்பின் போது தனது ஆலோசனைகளைக் கூறுவதாகவும், அதை ஏற்பதும் ஏற்காததும் இயக்குநரின் முழுமையான சுதந்திரம் என்றும் அவர் குறிப்பிட்டார்.

அரசியல் பிரவேசம் குறித்த கேள்விக்கு முற்றுப்புள்ளி!

செய்தியாளர்களின் தொடர்ச்சான அரசியல் வருகை குறித்த கேள்விக்கு நகைச்சுவையுடன் பதிலளித்த சசிகுமார் கூறியதாவது:

“சினிமாவில் எல்லாமே மாறிவிட்டது; தொழில்நுட்பமும் கதைகளும் வளர்ந்துவிட்டன. ஆனால், ‘நீங்கள் அரசியலுக்கு வருவீர்களா?’ என்ற கேள்வி மட்டும் இன்னும் மாறவே இல்லை. எனக்கு அரசியலுக்கு வரும் எந்தவித எண்ணமும் இல்லை; நான் நடிக்கத்தான் வந்திருக்கிறேன்”

என்று அவர் தெளிவாகத் தெரிவித்தார். இந்நிகழ்ச்சித் தகவல்கள் தற்போது cine வட்டாரங்களில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளன.

கொளத்தூர் EVM முறைகேடு விவகாரம்: உச்ச நீதிமன்றத்தை நோக்கி நகரும் திமுக – மூத்த பத்திரிகையாளர் தராசு ஷியாம் பேட்டி!

MUST READ