Homeசெய்திகள்சினிமாநடிகர் அஜித்குமாரின் ‘ரேசிங் டீம்’ பின்னணியில் இவ்ளோ பெரிய அரசியலா? — லண்டன் பயணத்தின் கோர...

நடிகர் அஜித்குமாரின் ‘ரேசிங் டீம்’ பின்னணியில் இவ்ளோ பெரிய அரசியலா? — லண்டன் பயணத்தின் கோர முகம்!

-

- Advertisement -

சினிமாவையும் தாண்டி மோட்டார் பந்தயத்தின் மீது தீவிர ஆர்வம் காட்டி வரும் நடிகர் அஜித்குமாரின் ‘அஜித் குமார் ரேசிங்’ (Ajith Kumar Racing) அணி, லண்டன் நகரில் மேற்கொண்ட நிகழ்வுகள் மற்றும் அதன் பின்னணியில் உள்ள நிதி ஒப்பந்தங்கள் குறித்துத் அதிர்ச்சி தரும் தகவல்கள் வெளியாகித் திரையுலகிலும் அரசியல் வட்டாரத்திலும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.நடிகர் அஜித்குமாரின் ‘ரேசிங் டீம்’ பின்னணியில் இவ்ளோ பெரிய அரசியலா? — லண்டன் பயணத்தின் கோர முகம்!

கோடிகளை விழுங்கும் மோட்டார் ரேஸ் — நிதி நெருக்கடியில் அஜித் அணி?
கடந்த 2024-ஆம் ஆண்டு முதல் மோட்டார் ரேசிங் துறையில் செயல்பட்டு வரும் அஜித்தின் அணி, இதுவரை ரூ.84 கோடிக்கும் அதிகமாகச் செலவிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இருப்பினும், இதிலிருந்து கிடைத்த வருமானம் ஏறக்குறைய பூஜ்ஜியமாகவே உள்ள நிலையில், 2026-ஆம் ஆண்டில் இந்தச் செலவினங்களைத் தொடர ஸ்பான்சர் நிறுவனங்களின் உதவி அஜித்திற்கு அத்தியாவசியத் தேவையாக மாறியுள்ளது.

we-r-hiring

இந்நிலையில், ‘நோவா லைஃப் ஸ்பேஸ்’ (Nova Life Space) என்ற ரியல் எஸ்டேட் நிறுவனம் அஜித்தின் அணிக்கு ஸ்பான்சர் செய்ய முன்வந்துள்ளது. ஆனால், வெறும் ரூ.4 கோடி லாபமும், ரூ.46 கோடி வருமானமும், சுமார் ரூ.30 கோடி கடனும் கொண்ட ஒரு சிறிய நிறுவனம் எவ்வாறு இவ்வளவு பெரிய தொகையைச் செலவிட முன்வந்தது என்ற கேள்விகள் எழுந்துள்ளன.நடிகர் அஜித்குமாரின் ‘ரேசிங் டீம்’ பின்னணியில் இவ்ளோ பெரிய அரசியலா? — லண்டன் பயணத்தின் கோர முகம்!

டி.எல்.எஃப் (DLF) அல்லது காசாகிராண்ட் போன்ற பெரு நிறுவனங்களே ஒரு முன்னணி நடிகரின் மோட்டார் ரேஸ் அணியை ஆதரிக்கத் தயங்கும் போது, இந்தச் சிறிய நிறுவனத்தின் பின்னணியில் லாட்டரி தொடர்புடைய தரப்புகளும், விஷ்ணு கும்பலும், பெங்களூரைச் சேர்ந்த சில கூட்டாளிகளுமே இருப்பதாக அதிர்ச்சி குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படுகின்றன.

லண்டன் வரை நீண்ட நாடகம் — ஆவணப்படத் தூண்டில்
நிதி நெருக்கடியில் தவித்த அஜித்தை வீழ்த்துவதற்காகவே ‘கிளாடியேட்டர்ஸ் – இன் பர்சூட் ஆஃப் சேலஞ்சஸ்’ (Gladiators – In Pursuit of Challenges) என்ற ஆவணப்படம் புனையப்பட்டதாகக் கூறப்படுகிறது. “இந்த ஆவணப்படத்தில் நடிகர் விஜய் தலைகாட்டினால் கூடுதல் ஸ்பான்சர்களை எளிதாக ஈர்க்கலாம்; அரசு கொண்டுவரும் புதிய திட்டங்களிலும் உங்களை இணைக்கலாம்” என்று அஜித்திற்குத் தூண்டில் போடப்பட்டுள்ளது.

நடிகர் அஜித்குமாரின் ‘ரேசிங் டீம்’ பின்னணியில் இவ்ளோ பெரிய அரசியலா? — லண்டன் பயணத்தின் கோர முகம்!

அதை உண்மை என நம்பி ஏற்றுக்கொண்ட அஜித்குமார், நடிகர் விஜய், நடிகை த்ரிஷா, ஆதவ் மற்றும் விஷ்ணு ரெட்டி ஆகியோருடன் இணைந்து லண்டன் சென்று நிகழ்வை முடித்துக் கொடுத்துள்ளார். ஆனால், இந்தப் பயணத்தின் பின்னணியில் மிகப்பெரிய அரசியல் வியூகம் ஒளிந்திருந்ததாக விவரிக்கப்படுகிறது.

நட்பு பாராட்டி கெடுக்கும் நரித் தந்திரம் — தயாரிப்பாளர்கள் முடக்கம்
தற்போதைய சூழலில், அஜித் நினைத்தால் தனது திரைப்படங்கள் மூலம் ஒரே வசனத்தில் பெரிய அரசியல் மாற்றத்தையோ அல்லது அரசுக்குச் சிக்கலையோ ஏற்படுத்த முடியும். இத்தகைய செல்வாக்கு கொண்ட அஜித்துடன் நட்பு பாராட்டுவது போல நடித்து, அவரது தாக்கத்தைக் குறைப்பதே ஒரே வழி என விஜய் தரப்பு காய் நகர்த்தியதாகக் குற்றம்சாட்டப்படுகிறது.

  • தயாரிப்பாளர்கள் முடக்கம்: திரையுலகில் அஜித்திற்குப் போட்டியாளர் எவரும் இல்லாத சூழலை மாற்றி, தயாரிப்பாளர்களை அதிகாரத்தால் மிரட்டி அவர் கரங்களைக் கட்டுவது.

  • அழிப்புப் பிரச்சாரம்: “விஜய் அரசியலுக்குச் சென்றுவிட்டதால், எதிர்காலத்தில் அஜித்தின் மார்க்கெட்டும் காலி… விஜய் இல்லை என்றால் அஜித் என்றொருவரே இல்லை” என்ற பிம்பத்தைப் பொதுமக்கள் மத்தியில் உருவாக்குவது.

நடிகர் அஜித்குமாரின் ‘ரேசிங் டீம்’ பின்னணியில் இவ்ளோ பெரிய அரசியலா? — லண்டன் பயணத்தின் கோர முகம்!

ஐடி விங் மூலம் அஜித்குமாரின் குடும்பத்தை அருவருப்பாகத் திட்டிய அதே தரப்பு, தற்போது பந்தயக் களத்தில் நிதி நெருக்கடியில் சிக்கிய அஜித்தை வைத்து, அரசியல் மற்றும் திரையுலகம் இரண்டிலும் அவரை ஒடுக்கும் கோர முகத்தை அரங்கேற்றியுள்ளதாகச் செய்திகள் வெளியாகியுள்ளன. சிக்கலான இந்தச் சூழ்ச்சி வலைக்குள் அஜித் சிக்கிய விவகாரம் தற்போது திரையுலகில் பெரும் விவாதப் பொருளாக மாறியுள்ளது.

அஜித் – விஜய் சர்ப்ரைஸ் கொலாப்: சோஷியல் மீடியாவை அதிரவைத்த லண்டன் கார் பந்தய வீடியோ!

MUST READ