Homeசெய்திகள்சினிமாரசிகர்களின் பிள்ளைகளின் கல்விச் சுமையைத் தாங்கிய நடிகர் தனுஷ்: எம்பிபிஎஸ், இன்ஜினியரிங் படிப்பிற்கான முழு செலவையும்...

ரசிகர்களின் பிள்ளைகளின் கல்விச் சுமையைத் தாங்கிய நடிகர் தனுஷ்: எம்பிபிஎஸ், இன்ஜினியரிங் படிப்பிற்கான முழு செலவையும் ஏற்று உன்னத உதவி!

-

- Advertisement -

சினிமாவில் தனது எதார்த்தமான நடிப்பால் கோடிக்கணக்கான ரசிகர்களைக் கவர்ந்த நடிகர் தனுஷ், திரைக்குப் பின்னால் பல சமூக நல உதவிகளைச் செய்து வருவதை வழக்கமாகக் கொண்டுள்ளார். அந்த வகையில், தற்போது தனது ரசிகர் மன்ற நிர்வாகிகளின் வாரிசுகளின் உயர் கல்விச் செலவுகள் முழுவதையும் ஏற்று நடிகர் தனுஷ் செய்துள்ள மாபெரும் உதவி சினிமா வட்டாரத்திலும் பொதுமக்களிடையேயும் பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தனுஷ்

we-r-hiring

தந்தை வழி நிற்கும் தனுஷின் பெருந்தன்மை

கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த தனுஷ் ரசிகர் மன்ற நிர்வாகி ராஜசேகரன் என்பவரின் மகள் ஹரிஷிதா, பொறியியல் (இன்ஜினியரிங்) படிப்பில் சேர்ந்துள்ளார். அதேபோல், வேலூர் மாவட்டத்தைச் சேர்ந்த நிர்வாகி தனசேகரன் என்பவரின் மகள் ஸ்வேதா மருத்துவப் படிப்பிற்கான (எம்பிபிஎஸ்) சேர்க்கையைப் பெற்றுள்ளார்.

குடும்பச் சூழல் காரணமாக தங்களது குழந்தைகளின் உயர்கல்விக்கு சிரமப்பட்ட இந்தத் தீவிர ரசிகர்களின் நிலையை அறிந்த நடிகர் தனுஷ், சற்றும் தாமதிக்காமல் இரண்டு மாணவிகளின் முழு கல்விச் செலவையும் தானே ஏற்பதாக உறுதியளித்தார்.

படப்பிடிப்புத் தளத்தில் நேரில் அழைத்து நெகிழ்ச்சி!

தமது திரைப்படப் பணிகளுக்கிடையேயும் ரசிகர்களின் குடும்பத்தாருக்கு முன்னுரிமை அளித்த நடிகர் தனுஷ், ‘ஓம்’ திரைப்படத்தின் படப்பிடிப்புத் தளத்திற்கு ராஜசேகரன் மற்றும் தனசேகர் குடும்பத்தினரை நேரில் வரவழைத்தார்.

அங்கு மாணவிகள் மற்றும் அவர்களின் பெற்றோரை அன்போடு வரவேற்றுப் பேசிய அவர், இன்ஜினியரிங் மற்றும் எம்பிபிஎஸ் படிப்பிற்கான முழு செலவிற்கான காசோலைகளை (Cheque) நேரில் வழங்கி தனது வாழ்த்துகளைத் தெரிவித்தார்.

தங்களுடைய நீண்ட நாள் கனவான மருத்துவ மற்றும் பொறியியல் கல்வியை நனவாக்க உதவியதுடன், தந்தைபோல நின்று கல்விச் சுமையைத் தாங்கிய நடிகர் தனுஷின் இந்த மனிதநேயப் பண்பைப் போற்றி, ரசிகர்களின் குடும்பத்தினரும் பொதுமக்களும் தங்களது மனமார்ந்த நன்றிகளையும் பாராட்டுகளையும் தெரிவித்து வருகின்றனர்.

அமைச்சர் வி.கே. ராஜீவின் மாமனார் கைவரிசை: சுற்றுச்சூழல் துறையில் ரூ.95 கோடி கோட்டை கட்டும் வசூல் வேட்டை!

MUST READ