Homeசெய்திகள்தமிழ்நாடுஅமைச்சர் வி.கே. ராஜீவின் மாமனார் கைவரிசை: சுற்றுச்சூழல் துறையில் ரூ.95 கோடி கோட்டை கட்டும் வசூல்...

அமைச்சர் வி.கே. ராஜீவின் மாமனார் கைவரிசை: சுற்றுச்சூழல் துறையில் ரூ.95 கோடி கோட்டை கட்டும் வசூல் வேட்டை!

-

- Advertisement -

தமிழகத்தில் மக்கள் பெரும் எதிர்பார்ப்புகளுடன் காத்திருந்த அரசியல் மாற்றத்திற்குச் சோகம் சேர்க்கும் விதமாக, அரசின் முக்கிய துறைகளில் முறைகேடுகள் தலைவிரித்தாடத் தொடங்கியுள்ளன. குறிப்பாக, சுற்றுச்சூழல் துறை அமைச்சர் வி.கே. ராஜீவ் மற்றும் அவரது துறையில் அரங்கேறிவரும் பகீர் கொள்ளை குறித்த அதிரடித் தகவல்கள் தற்போது அரசியல் களத்தில் பெரும் தீப்பற்ற வைத்துள்ளன.

வி.கே. ராஜீ

we-r-hiring

அதிரடி ரெய்டு… திடீர் மவுனம்! என்ன நடக்கிறது சுற்றுச்சூழல் துறையில்?

புதிய அரசு பொறுப்பேற்றதும் ஊழலை ஒழிப்போம் என்று மாரதட்டிய அமைச்சர்கள், சில நாட்களிலேயே தங்கள் வசூல் வேட்டையைத் தொடங்கிவிட்டனர் என்பதற்குச் சிறந்த உதாரணமாக சுற்றுச்சூழல் துறை அமைச்சர் வி.கே. ராஜீவின் நடவடிக்கைகள் மாறியுள்ளன.

திருப்பூர், ஈரோடு, நாமக்கல் உள்ளிட்ட மாவட்டங்களில் இயங்கும் சாயப்பட்டறைகளில் அதிரடியாக ரெய்டு நடத்தி, சீல் வைப்பதாகக் கூறி மிரட்டல் விடுத்த அமைச்சர், போதுமான ‘கவனிப்புகள்’ (பணம்) வந்ததும் திடீரென அமைதியாகிவிட்டது ஏன் என்ற கேள்விக்குறி தற்போது எழுந்துள்ளது.

கோடிக்கணக்கில் கொட்டும் லஞ்சப் பணம்!

  • ரெட் & ஆரஞ்சு அலர்ட்: சுற்றுச்சூழல் துறையின் கீழ் வரும் ‘சிவப்பு’ (Red) மற்றும் ‘ஆரஞ்சு’ (Orange) அட்டவணைகளின் கீழ் வரும் சாயப்பட்டறைகள், சிமெண்ட் ஆலைகள், பேப்பர் மில்ஸ் மற்றும் மருந்து தயாரிப்பு நிறுவனங்கள் குறிவைக்கப்படுகின்றன.

  • ரூ.95 கோடி வசூல் சாம்ராஜ்யம்: வெறும் சாயப்பட்டறைகளிடம் மட்டும் ஆண்டுக்கு ஒரு நிறுவனத்திற்கு குறைந்தபட்சம் ஒரு லட்சம் ரூபாய் வசூலித்தால் கூட, ஈரோடு, திருப்பூர் பகுதிகளில் மட்டும் சுமார் ரூ.95 கோடி வரை லஞ்சப் பணம் கைமாறுவதாகப் புள்ளிவிவரங்கள் அதிர்ச்சியை ஏற்படுத்துகின்றன. இதனுடன் பெட்ரோல் பங்குகள், நட்சத்திர ஓட்டல்கள் மற்றும் இதர தொழிற்சாலைகளைச் சேர்த்தால் இந்தத் தொகை பலநூறு கோடிகளைத் தாண்டும்.

  • மாமனாரின் நேரடி ஆதிக்கம்: துறை ரீதியான வழிகாட்டுதல்களை விடுத்து, இந்த வசூல் வேட்டை மற்றும் டீலிங் அனைத்தையும் அமைச்சரின் மாமனாரே நேரடியாகத் தலைமை தாங்கி நடத்தி வருவதாகத் தகவல்கள் கசிந்துள்ளன.

வேடிக்கை பார்க்கும் அரசுக்கு மக்கள் தரும் எச்சரிக்கை!

பின்தங்கிய ராமநாதபுரம் மண்ணில் இருந்து வந்த ஒரு மருத்துவர், மக்கள் நலனுக்காகச் செயல்படுவார் என்ற எதிர்பார்ப்பு பொய்யாகி, இன்று தனது சொந்தப் பாதுகாப்பிலும் வசூலிலும் மட்டுமே குறியாக இருப்பது பெரும் ஏமாற்றத்தை அளித்துள்ளது.

சட்டமன்றத்தில் பெரும்பான்மை பலம் மற்றும் எம்எல்ஏ-க்களின் ஆதரவைக் காப்பாற்ற வேண்டும் என்ற அரசியல் நிர்பந்தத்தால், இதுபோன்ற ஊழல் அமைச்சர்கள் மீது முதல்வர் விஜய் எந்தவித நடவடிக்கையும் எடுக்காமல் கைகட்டி வேடிக்கை பார்ப்பது கடும் கண்டனத்திற்குரியது. ஊழலற்ற நேர்மையான ஆட்சியை வழங்குவதாகக் கூறிவிட்டு, முறைகேடுகளை அனுமதித்தால் மக்கள் தகுந்த நேரத்தில் தக்க பாடம் புகட்டுவார்கள் என்பதே அரசியல் நோக்கர்களின் எச்சரிக்கையாக உள்ளது.

கொளத்தூர் விவிபேட் (VVPAT) சரிபார்ப்பு விவகாரம்: தேர்தல் முடிவுகளில் மாற்றம் சாத்தியமா? – ஊடகவியலாளர் சுமன் கவி பிரத்யேகப் பேட்டி!

MUST READ