Homeசெய்திகள்தமிழ்நாடுமுன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷ் இல்லத்தில் 9 மணி நேர சோதனை நிறைவு: அரசின் இயலாமையே...

முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷ் இல்லத்தில் 9 மணி நேர சோதனை நிறைவு: அரசின் இயலாமையே இதற்கு காரணம் – செய்தியாளர்களைச் சந்தித்து பேட்டி!

-

- Advertisement -

9 மணி நேர சோதனை: முன்னாள் பள்ளிக்கல்வித்துறை அமைச்சரும், திமுக நிர்வாகியுமான அன்பில் மகேஷ் பொய்யாமொழியின் திருச்சியில் உள்ள இல்லத்தில் சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் மேற்கொண்ட சோதனை காலை 7 மணி முதல் மாலை 4 மணி வரை சுமார் 9 மணி நேரம் நீடித்தது.முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷ் இல்லத்தில் 9 மணி நேர சோதனை நிறைவு: அரசின் இயலாமையே இதற்கு காரணம் - செய்தியாளர்களைச் சந்தித்து பேட்டி!

ஆவணங்கள் பறிமுதல்: பத்தாம் மற்றும் பன்னிரண்டாம் வகுப்புத் தேர்வு முடிவுகள், துறை ரீதியான ஆய்வு மற்றும் கல்வித்துறைத் திட்டங்கள் தொடர்பான ஆவணங்களை அதிகாரிகள் கைப்பற்றிச் சென்றுள்ளனர்.

we-r-hiring

மேலும், வரும் 18ஆம் தேதி சென்னையில் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்குமாறு சம்மன் வழங்கப்பட்டுள்ளது.

அரசியல் காழ்ப்புணர்ச்சி: சட்டமன்றத்திலும் மக்கள் மன்றத்திலும் தற்போதைய தவெக அரசின் முறைகேடுகளைத் தொடர்ந்து கேள்வி எழுப்பி வருவதால், அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாகவே இந்தச் சோதனை நடத்தப்பட்டுள்ளதாக அன்பில் மகேஷ் குற்றம்சாட்டியுள்ளார்.

தேர்தல் பணிக்குச் செல்வேன்: விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு அளித்துள்ளதாகவும், 18ஆம் தேதி சென்னையில் ஆஜரான பிறகு நேரடியாகத் தாராபுரம் இடைத்தேர்தல் பணிக்குச் சென்று திமுகவின் வெற்றிக்காகப் பாடுபடுவேன் என்றும் அவர் தெரிவித்தார்.

விரிவானச் செய்தி:
கடந்த திமுக ஆட்சியில் தனியார் பள்ளிகளுக்கு அங்கீகாரம் வழங்குவதற்காக, தமிழ்நாடு தனியார் பள்ளிகள் சங்கத்தின் முன்னாள் தலைவர் பி.டி. அரசகுமார் சுமார் ரூ.100 கோடி வரை மோசடியில் ஈடுபட்டதாக எழுந்த புகாரைத் தொடர்ந்து அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இச்சம்பவத்தில் அப்போதைய பள்ளிக்கல்வித்துறை அமைச்சரான அன்பில் மகேஷ் பொய்யாமொழிக்குத் தொடர்பு இருப்பதாகக் கூறப்பட்ட குற்றச்சாட்டின் அடிப்படையில், சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் இன்று திருச்சியில் உள்ள அவரது இல்லத்தில் அதிரடிச் சோதனையில் ஈடுபட்டனர்.

சோதனையும் வழக்கறிஞர்கள் வாக்குவாதமும்:
காலை 7 மணிக்குத் தொடங்கிய இந்தச் சோதனையின் போது, அன்பில் மகேஷ் வீட்டின் முன்பு திரண்ட திமுகவினர் மற்றும் வழக்கறிஞர்கள் உள்ளே செல்ல அனுமதிக்கக் கோரி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

பின்னர் மதியம் ஒரு வழக்கறிஞர் மட்டும் உள்ளே அனுமதிக்கப்பட்டார்.

சுமார் 9 மணி நேரம் நடைபெற்ற இந்தச் சோதனையில் ஒரு உதவி ஆணையர், காவல் ஆய்வாளர் உள்ளிட்ட 20 பேர் கொண்ட குழுவினர் ஈடுபட்டனர். கல்வித்துறை சார்ந்த ஆவணங்களைச் சரிபார்த்த அதிகாரிகள், சில முக்கியமான ஆவணங்களை எடுத்துச் சென்றதுடன், வருகிற 18ஆம் தேதி காலை 11 மணிக்குச் சென்னையில் உள்ள அலுவலகத்தில் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்குமாறு உத்தரவிட்டுள்ளனர்.

அன்பில் மகேஷ் பேட்டி:
சோதனைக்குப் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கூறியதாவது:

“எங்களுக்கு மடியில் கனமில்லை, வழியில் பயமில்லை. காவல்துறையினர் நடத்திய சோதனையில் நாங்கள் முழு ஒத்துழைப்பு அளித்தோம். வீட்டில் எந்தவிதமான விசாரணையும் நடத்தப்படவில்லை; மாறாக, நாங்கள் வைத்திருந்த கல்வித்துறை ஆவணங்களைச் சோதித்து, எவற்றை எடுத்துச் செல்கிறோம் என்பதற்கான பட்டியலைப் பெற்றுச் சென்றுள்ளனர்.

சட்டமன்றத்திலும் மக்கள் மன்றத்திலும் நான் அரசை எதிர்த்துத் தீவிரமாகக் கேள்வி எழுப்பினேன். விஜய் ஹிட்லராகவும், அவருடன் இருக்கும் அமைச்சர்கள் கோயபல்ஸ் ஆகவும் இருப்பதாக நான் சுட்டிக்காட்டியதோடு, கஜானா காலியாக இருக்கும்போது புதிய தலைமைச் செயலகம் எதற்கு என்ற கேள்வியையும் எழுப்பினேன்.

திணிக்கப்பட்டதாகக் கருதப்படும் இந்த இடைத்தேர்தலில் திமுக வெற்றி பெற்று ஆளுங்கட்சியின் முகத்தில் கரியைப் பூசும் என்று பேசியதன் எதிரொலியாகவே இந்த அரசியல் காழ்ப்புணர்ச்சி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

கே.என். நேரு சட்டமன்றத்தில் அரசை கேள்வி கேட்ட அடுத்த நாள் அவர் வீட்டில் ரெய்டு நடக்கிறது.

இதுபோன்ற சோதனைகளின் மூலம் அரசு அரசியல் மைலேஜ் தேட முயல்கிறது; ஆனால், இது அரசின் மிரட்டல் அல்ல, அவர்களின் இயலாமையின் வெளிப்பாடு மட்டுமே.

இந்தச் சலசலப்புகளுக்கெல்லாம் திமுக அஞ்சாது. வருகிற 18ஆம் தேதி சென்னையில் அதிகாரிகள் கேட்கும் கேள்விகளுக்குப் பதிலளித்துவிட்டு, நேரடியாகத் தாராபுரம் இடைத்தேர்தல் களம் கண்டு திமுகவின் வெற்றிக்காக முழுமையாக உழைப்போம்.

என்ன பொய் வழக்கு போட்டாலும் அதனை நீதிமன்றத்தில் சந்தித்து உண்மையை நிலைநாட்டுவோம்” என்றார்.

நானும் விஜய் ரசிகன் தான்: மதுராந்தகம் இடைத்தேர்தல் பிரச்சாரத்தில் முதலமைச்சர் விஜய் பெயரைச் சொல்லி வாக்கு சேகரித்த திமுக வேட்பாளர் பரந்தாமன்!

MUST READ